என் மேகம் ???

Tuesday, September 30, 2008

டாம் அண்ட் ஜெர்ரி

"அம்மா, அக்கா என் மிக்கி மவுஸ் பில்லோவைத் தொடறா"
"அம்மா , எனக்கு தான் முதல்ல சாப்பிட..."
"அம்மா , அக்காவைத் தள்ளி உட்காரச் சொல்லு, என்னைத் தொடறாள்..."

காலை என்றாலே "வீய்ய்ய்..." என்ற அலறலுடன் குட்டிப் பெண்ணின் அட்டகாசம் தாங்காது. தலைக்கு குளிச்சு, துவட்டாமல், ஊரைச் சுத்தி பீச்ல தண்ணில நனைஞ்சா என்ன ஆகும்னு நந்தினி ஆராய்ச்சி செஞ்சு காய்ச்சல் வரும்னு கண்டு பிடிச்சாள்.

இப்போ குட்டிப் பெண் என்ன செஞ்சா?

"அக்கா, இந்தா என் பில்லோ, நல்லா படுத்துக்கோ"
"அம்மா, அக்காவுக்குப் பசிக்குதாம் , உடனே சாப்பிட கொடு... அம்மா இப்பவே கொடு, அக்காவுக்கு ரொம்ப பசிக்குதாம்..நான் தான் அக்காவுக்கு ஊட்டி விடுவேன்..."
"அக்கா, நான் உன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிடறேன்..."
"அம்மா , அக்காவுக்கு புறா சத்தம் கேட்டால் கூட பயமா இருக்காம், நான் அவ பக்கத்திலேயே படுத்துக்கறேன்..."

அக்காவுக்கு காய்ச்சல் சரியான உடனே, "அம்மா, அக்கா என் மிக்கி மவுஸ் பில்லோவைத் தொடறா" ....

16 comments:

சந்தனமுல்லை said...

:-)))

ராமலக்ஷ்மி said...

அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!
டாம் அன்ட் ஜெர்ரியாவே இருந்துட்டுப் போட்டும். ஆனா ஒருத்தருக்கு ஒண்ணுன்னா 'டாண்'னு பக்கத்தில இருந்து பாத்துக்கற பாசத்துக்கு முன்னால இந்த ஜாலி சண்டையெல்லாம் சும்மா வேஷம்:)!

அமுதா said...

வருகைக்கு நன்றி முல்லை.

/*அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!
*/
நன்றி இராமலஷ்மி மேடம். அவங்க உலகம் ரொம்ப இனிமையா இருக்கு, அழுத அடுத்த நொடி சிரித்து என்று மகிழ்ச்சிக்கான அத்தனை பாடங்களையும் அவங்க கிட்ட இருந்து கத்துக்கலாம் போல...

சரவணகுமரன் said...

:-)

புதுகைத் தென்றல் said...

என் பசங்களுக்குத் தான் டாம் அண்ட் ஜெர்ரின்னு பேரு வெச்சிருக்கேன்.

அங்கயும் டாம் அண்ட் ஜெர்ரியா? வாழ்த்துக்கள்.

டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருந்தா நமக்குத்தான் நான் ஸ்டாப் கொண்டாட்டம். நடக்கட்டும். நடக்கட்டும்.

Little life said...

நல்லா எழுதுறீங்க அமுதா. நானும் என் தங்கையும் எப்பவுமே சண்டை தான் போட்டுக் கொண்டுயிருப்போம். ஆனால் எங்கள் இருவரில் யாருக்கேனும் ஏதாவது பிரச்சனை என்றால் எங்கள் இருவராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

அமுதா said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன்...

நன்றி புதுகை தென்றல். நிறைய பேர் வீட்ல டாம் & ஜெர்ரியாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி நான் ஸ்டாப் கொண்டாட்டம்தான்.

(முதல்) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி little life...

ஜீவன் said...

எல்லாம் இனிமை !

அமுதா said...

நன்றி ஜீவன்

AMIRDHAVARSHINI AMMA said...

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

செய்த குற்றங்களை மறந்துவிடும் மனதால் ஒன்று.

அமுதா said...

நன்றி amirdhavarshini amma

நிலா said...

இத படிச்சா எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்ன்னு தோணுது :)

சந்தோஷ் = Santhosh said...

:)) எல்லார் வீட்டுலேயும் ஒரு டாம் & ஜெர்ரி உண்டு :))..

SK said...

படிக்கும் போது ஏனோ தெரியலை கண்ணு கொஞ்சம் கலங்கிடிச்சு.

:-)

ஆயில்யன் said...

//நிலா said...
இத படிச்சா எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்ன்னு தோணுது :)
//


அடி ஆத்தி!!!!

(டைப்ரைட்டரு ரைட்டா எழுதின மாத்ரி தெரியலயே???)

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...
அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!
டாம் அன்ட் ஜெர்ரியாவே இருந்துட்டுப் போட்டும். ஆனா ஒருத்தருக்கு ஒண்ணுன்னா 'டாண்'னு பக்கத்தில இருந்து பாத்துக்கற பாசத்துக்கு முன்னால இந்த ஜாலி சண்டையெல்லாம் சும்மா வேஷம்:)!
//

ராமலஷ்மி அக்கா சொல்றதுதான் கரீக்ட் எம்புட்டு சண்டை போட்டிருப்பாங்க :))))) - நானும் கூடத்தான் :)