மரணத்தின் நிழல்
வாசலில் விழும்வரை
அதைப் பற்றிய
யோசனைகள் குறைவுதான்....
நேசித்தவரின் இழப்பில
உருவான வெற்றிடத்தில் தான்
மரணத்திற்குப் பின்?...
போன்ற கேள்விகள் தோன்றுகின்றன
காலதேவனின் வருகையில்
வேதனையுடன் கூடிய
கூக்குரல்தான் அதிகம்...
காலம் செல்ல செல்ல
அந்த வெற்றிடம்தான்
மூச்சை அடைத்து
வலியை ஏற்படுத்துகிறது...
அதே காலம் செல்ல செல்ல
வெற்றிடம் பழகிப் போய்
வலிகள் வடுக்களாகின்றன...
மரணத்தின் மன்றத்தில்
குற்றவாளியாக இருப்பதை விட
சாட்சியாக இருப்பது தான்
திகிலுறச் செய்கிறது...
4 comments:
அட. அருமையான வரிகள்..
உண்மையில் திகிலுற செய்கிறது..
தங்கள் வருகைக்கு நன்றி
////மரணத்தின் மன்றத்தில்
குற்றவாளியாக இருப்பதை விட
சாட்சியாக இருப்பது தான்
திகிலுறச் செய்கிறது... /////
மரணத்தின் மன்றத்தில்
மாறிடும் நிலைப்பாடுகள்!
சாட்சியாக சிலசமயம்
காட்சியைக் காண்பவராகச் சிலசமயம்
வழக்குரைஞராகச் சிலசமயம்
பழகிவிட்ட உறவோடு சிலசமயம்!
குற்றவாளியாக ஒருநாள்
படுக்கவைத்துத்தான் அனுப்புகிறார்கள்
பார்ப்பதற்குப் பார்வையில்லை!
உணர்வில்லை! உயிரில்லை!
அதனால் திகிலுமில்லை!
//வலிகள் வடுக்களாகின்றன...//
வலிக்கும் உண்மை.
Post a Comment