என் மேகம் ???

Wednesday, October 8, 2008

புதுவரவுக்கொரு பூச்செண்டு

பூத்துக் குலுங்குகிறது அக்டோபர்
பூமகனே உன் வரவால்...

வளர்பிறையில் வந்தவனே
வளமோடு வாழ்ந்திடுவாய்!!

அத்தை என அழைக்க
அருமையாய் வந்தவனே...

புரட்டாசியில் பிறந்தவனே
புகழோடு வாழ்ந்திடுவாய்!!!

மென்னகை புரிபவனே
மேன்மையோடு இருந்திடுவாய்!!!

அத்தை அடிக்க மாட்டேன்
அரளிப் பூச்செண்டாலே

அன்பாகத் தந்திடுவேன்
அழகான பூச்செண்டு...

பூமகனை ஈன்றெடுத்த பூவைக்கும்
பூரித்து நிற்கும் புதுத்தந்தைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(அக்டோபர் 1-ல் இவ்வுலகில் அடியெடுத்து வைத்த குட்டிப்பயலுக்கு அத்தையின் வாழ்த்து)

8 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் அமுதா..

தமிழ் அமுதன் said...

வாசனை !!!

Anonymous said...

Mikka Nanri -JP

Dhiyana said...

வாழ்த்துக்கள் அமுதா. குட்டிப் பையனின் அம்மா அப்பாவும் வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அமுதா said...

நன்றி Little bud and amirdhavarshini amma

ராமலக்ஷ்மி said...

அத்தை மடி மெத்தையடா என அள்ளிக் கவிதையாலேயே வாழ்த்திக் கொஞ்சியிருக்கிறீர்கள். குட்டிப் பையனுக்கும் அவன் வரவால் குதூகலத்திலிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அமுதா said...

நன்றி இராமலஷ்மி மேடம்.

நன்றி முல்லை
நன்றி ஜீவன். (முன்னாடியே நன்றி சொன்னேன் காணோம்... வேற போஸ்ட்ல போட்டு விட்டேன் போல்...)