இந்த குட்டீஸ் சுட்டி டி.வி. பார்த்து பண்ற காமெடி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. அதுங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல கேட்டால் "சேம் ப்ள்ட்..." என்று சிரிக்கிறார்கள்.
நாலு வயசுல நான் குடும்பத்த பத்தி பேசினேனானு தெரியல. ஆனா என் பொண்ணு பேசறா. அவ ப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தா. அவளுக்கு டிபன் ரெடி பண்ணிட்டிருந்தாங்க.
"ஆண்ட்டி, என்ன டிபன் தரப் போறீங்க?"
"தோசை"
"மொறு மொறுனு சுடுங்க, அப்ப தான் என் அக்காக்கு பிடிக்கும்"
"சரிம்மா"
"எனக்கும் மொறு மொறுனு சுடுங்க, ஏன்னா நாங்கள்ளாம் ஒரே குடும்பம்"
"!!!!!"
அவங்க வீட்டு காமெடி... சின்னவ எதையோ கீழ போட்டு உடைச்சிட்டா. பெரியவ வெளில யார் கிட்டயோ இத சொன்னாளாம். வீட்ல வந்து சின்னவ சொல்றா "அம்மா, நான் கீழ போட்டு உடைச்சத எல்லாம் இவ வெளிய போய் சொல்றா. அப்படி சொல்லலாமா ? இதெல்லாம் நம்ம குடும்ப விஷயம் இல்லையா?"
சுட்டி டி.வி. effect என்று குடும்பமாக் சிரித்து வைத்தோம்.
10 comments:
//அதுங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல கேட்டால் "சேம் ப்ள்ட்..." என்று சிரிக்கிறார்கள். //
ஆரம்ப வரிகளே அசத்தல்!
உங்கள் வானம் வனம் போல் பூத்துக்குலுங்குகிறது.. நல்ல படம்!
நர்சிம்
தங்கள் வருகைக்கு நன்றி
நான் சொல்ல நினைத்ததை நர்சிம் சொல்லிவிட்டார். same blood!
என்றாவது கவிதைக்கு உங்கள் முகப்பு படம் கடன் வாங்க வருவேன். மிக அழகு.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா...
/*என்றாவது கவிதைக்கு உங்கள் முகப்பு படம் கடன் வாங்க வருவேன். மிக அழகு*/
ஓ, இருவரும் கூறிய பின் இன்னும் அழகாகத் தெரிகிறது. உங்கள் கவிதைக்கு நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.
புது வடிவம் நல்லா இருக்கு!!
உங்க பதிவுகளும்!!
வீட்டில் இருந்தால் என்னை கவனி என்பது தான் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் செய்தி. . .
பெற்றோர்கள் நினைவில் நிறுத்த
வேண்டிய விஷயம்..
மிக அழகிய கருத்து.
ராமநாதன்
http:rammalar.wordpress.com
நன்றி முல்லை.
நன்றி ramamalar
//"எனக்கும் மொறு மொறுனு சுடுங்க, ஏன்னா நாங்கள்ளாம் ஒரே குடும்பம்"//
வாவ்.. அழகுங்க..
:)
:)
:)
வருகைக்கு நன்றி SaravanaKumar
:)))!
//அப்ப தான் என் அக்காக்கு பிடிக்கும்"//
பந்தியிலே பக்கத்து இலைக்குப் பாயசமா..:)? நடத்தட்டும் நடத்தட்டும்:))!
Post a Comment