என் மேகம் ???

Wednesday, September 10, 2008

பட்டறிவு

பிடிக்காத எழுத்துக்கள்
பிடிக்கத் தொடங்கியது
புரியும் வயது வந்தபின்...

வெள்ளித்திரை காதல்கள்
மனதைத் தொட்டது
திருமணத்திற்குப் பின்...

மனதை உருக்கிய சில நிகழ்வுகள்
மனதை உலுக்கியது
தாய்மைக்குப் பின்...

பத்து வயதில் படித்த புராணங்கள்
இப்பொழுது சொல்வது
வேறு பல செய்திகள்


பட படத் தான் புரிகிறது
வாழ்க்கையின்
வெவ்வேறு பரிமாணங்கள்

7 comments:

SP.VR. SUBBIAH said...

////பட படத் தான் புரிகிறது
வாழ்க்கையின்
கோணங்களும் கோணல்களும்... ///


பட படத் தான் புரிகிறது
வாழ்க்கையின்
வெவ்வேறு பரிமாணங்கள்!

அமுதா said...

நன்றி...வரிகள் பிடித்திருந்ததால் மாற்றி விட்டேன்...

புதுகை.அப்துல்லா said...

aahaa....super

அமுதா said...

தங்கள் வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

அருமை அமுதா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பட படத் தான் புரிகிறது
வாழ்க்கையின்
வெவ்வேறு பரிமாணங்கள்

நன்றாய் உள்ளது.

புரிதல் மரணம் வரைக்கும் தொடருமே!
பட்டுகொண்டே இருக்க வேண்டும் முடிவு வரும்வரை

அமுதா said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி