என் மேகம் ???

Friday, March 30, 2012

யுனிவர்சல் ஸ்டூடியோஸ் (சிங்கப்பூர் பயணம் - நாள் 2)

முந்தைய பாகத்திற்கு “இங்கே

இரண்டாவது நாள் நாங்கள் திட்டமிட்டது ”யுனிவர்சல் ஸ்டூடியோஸ்” என்ற மெகா தீம் பார்க். நட்புகள் சொன்ன டிப், முன்பதிவு செய்வது நலம். ஏனெனில் அங்கு ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் என்ற கணக்கு உண்டு. வலை சொன்ன தகவல் முடிந்தவரை வாரநாட்களில் சென்று வாரயிறுதியைத் தவிர்க்கவும் என்பது. வலையில் இருந்த தகவல்களினால் சில குழப்பங்களும் வந்தது. பிடிமானமில்லாத் செருப்பு போடலாமா, லக்கேஜ் வேண்டுமா எனபதெல்லாம் தான். இந்த் குழப்பத்தில் அம்மாவுக்கு என் பொண்ணு செருப்பை போட்டு பாடுபடுத்திட்டேன் (பிடிமானம் இருக்கிற செருப்புக்காக). அதுக்கு அவசியமே இல்லாமல் வசதிகள் இருந்தன.

யுனிவர்சல் ஸ்டூடியோஸ் பொதுவாக 10 - 7 திறந்திருக்கும். வெள்ளி என்றால் ஹாலிவுட் என்ற ஒரு பகுதி மட்டும் இரவு 10 வரை இருக்கும். எங்களுக்கு ஹாலிவுட் அவ்வளவு ஈர்ப்பாக இல்லாததால் வியாழனுக்கு வலையில் முன்பதிவு செய்து சென்றோம். மெட்ரோ இரயிலில் “ஹார்பர் ப்ரண்ட்” என்ற ஸ்டேஷன் சென்று செண்டோசா எக்ஸ்ப்ரஸ் பிடிக்க வேண்டும்... பிடித்தோம்....

யுனிவர்சல் ஸ்டூடியோஸில் மொத்தம் 7 பகுதிகள்:
1. ஹாலிவுட் (Hollywood)
2. ம்டகஸ்கார் (Madagascar)
3. ஃபார் ஃபார் அவே (Far Far Away)
4. தி லாஸ்ட் வேர்ல்ட் (The lost world)
5. தி ஏண்டியண்ட் இஜிப்ட் (The Ancient Egypt)
6. சை-ஃபை சிட்டி (Sci-fi city)
7. நியூ யார்க் சிட்டி (NewYork City)

மேப் பார்த்ததில் ஹாலிவுட்டில் தொப்பி கடை ஒன்று தவிர எங்களை எதுவும் ஈர்க்கவில்லை. எனவே, ஹாலிவுட் & நியூ யார்க் சிட்டி எங்கள் லிஸ்டில் கடைசிக்குப் போனது. மீதியில் எல்லாம் ரைட்ஸ் உண்டு. 7 பகுதியா தெரிஞ்சாலும், எல்லாம் ரொம்ப தூரம் இல்லை. பக்கம் பக்கமா தான் இருக்கு. மேலும் “தி லாஸ்ட் வேர்ல்ட்” கிட்ட வாட்டர் வேர்ல்ட் உண்டு. இங்கே 12.30 மற்றும் 4.30 மணி போல தான் ஷோ உண்டு. இது நல்லா இருக்கும்னாங்க. அதனால் 12 மணி கிட்ட “தி லாஸ்ட் வேர்ல்ட்” போயிடணும்ங்கறதும் ப்ளான்.

எங்க முதல் விசிட் “மடகஸ்கார்”. இது இந்த படத்தோட தீம்ல இருக்கிற பகுதி. நான் இந்த படம் பார்க்கலை. ரெண்டு ரைட் உண்டு. ரெண்டுமே குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் பெரியவங்களும் போகலாம்.

i) Madagascar: A Crate Adventure
இது தண்ணில படகுல போவோம். போகும் வழில இந்த மடகஸ்கர் பட நடிகர்களோட ஒரு அனுபவம். வழியில் இந்த மிருகங்களின் பிரும்மாண்டமான உருவங்களும், அவற்றின் அசைவுகளும், திடீரெனெ மேலே விழுவது போல் வரும் பெட்டியும் அருமையாக அமைத்துள்ளனர்.

ii) King Julien’s Beach Party-Go-Round
இது நம்ம பிள்ளைங்க பீச்ல போகிற குதிரை பொம்மை சவாரி தான்.

2. ஃபார் ஃபார் அவே
இது ஷ்ரெக் படம் வச்சு தீம்.

i) Shrek 4-D Adventure
நீங்க அபிராமி மெகா மால்ல 4D சினிமா பாத்திருக்கீங்களா? கிட்டதட்ட அதே மாதிரி கொஞ்சம் பிரமாண்டாமா ஷ்ரெக்.


ii) Magic Potion Spin
இதுல தெரியாமல் ஏறிட்டோம். ரொம்ப சின்ன பசங்களுக்கானது. நம்ம ஊர் திருவிழாவில் சுத்துமே சின்னதா ஒரு சக்கர ராட்டினம்... அதே!!! அதனால் ஒண்ணும் சொல்றதுக்கில்ல...

iii) Enchanted Airways
ஒரு சின்ன ரோலர் கோஸ்டர். கொஞ்சம் கூட பயமில்லாமல் போகலாம் (ரோலர் கோஸ்டர்னு நினைச்சு ஏறினால் ஏமாத்தம் தான்...



3. தி லாஸ்ட் வேர்ல்ட்
ஜுராஸிக் பார்க்கை தீமா வச்சு இந்த பகுதி இருக்கும்.

i) Jurassic Park Rapids adventure
இந்த ரைடை நாங்க மிஸ் பண்ணிட்டோம். இதுக்கு போனப்ப 50 நிமிஷம் காத்திருக்கணும்னும், நனைஞ்சுடுவோம்னும் சொன்னாங்க. அப்புறம் வரலாம்னு 4 மணிக்கு வரும்பொழுது, மழை பெய்யற மாதிரி இருக்குனு, ரைட் எல்லாம் நிறுத்திட்டாங்க. ரைடைப் பார்க்கவே அழகா இருந்தது... பாருங்க “ஹட்ரோ எலெச்ட்ரிக் ப்ளாண்ட்” எல்லாம்....


ii) Canopy Flyer
இது அந்தரத்தில் பறந்து, தீம் பார்க்கை மேலே இருந்து ஒரு பார்வை பார்க்கலாம். செருப்பு பிடிமானம் இல்லாமல் இருந்தால் கழட்டி வைக்க சொல்லிடறாங்க. ரைடு முடிஞ்சு மாட்டிக்கலாம்.




iii) Dino-Soarin'
இது சும்மா சின்னப் பிள்ளைகள் ரைட் தான். நம்ம வி.ஜி.பில இருக்கும். டினோசர் மாதிரி இருக்கிறதுல ஏறி, பட்டனை அழுத்தி நாமளே மேலே கீழேனு போக வைக்கலாம்.


iv) Amber Rock Climb™
இது பாறை மாதிரி இருக்கிறது மேலே ஏறி, டினோசரோட தடயங்களைப் பார்க்கலாம். இதுக்கு தனி கட்டணம். நாங்க போகலை.

v) WaterWorld™
இது ஒரு ஷோ. நம்ம வி.ஜி.பில கோடை விடுமுறைக்கு அப்பப்ப இந்த மாதிரி நடக்கும். சும்மா ரெண்டு க்ரூப்புக்கு நடுவில் சண்டை. நம்ம மேல தண்ணி வாரி இறைப்பாங்க. குண்டெலாம் எரிஞ்சு, நெருப்பு கண் முன்னால் வரும். பாருங்க கடைசில ப்ளேன் கூட வந்தது



4. தி ஏன்சியண்ட் இஜிப்ட்
”மம்மி” தான் இந்த பகுதியோட தீம்

i) Revenge of the Mummy
சூப்பர் ரைடுங்க இது. ரைடுக்கு போற வழியே மங்கின வெளிச்சத்தில பிரமிடு மாதிரி செம பில்டப் இருக்கும். கையில ஒரு பர்ஸ் கூட வச்சிக்கக்கூடாது. பக்கத்தில லாக்கர் இருக்கு. முதல் அரை மணி நேரம் இலவசம். அப்புறம் ஒவ்வொரு மணிக்கும் 2$. நீங்களே கோட் கொடுத்து மூடி திறக்கலாம். வார நாள் என்பதால், கூட்டம் இல்லை. லாக்கர் இலவசமாகவே முடிஞ்சிருச்சு. இருட்டில் மம்மீஸோட என்கவுண்டர் செம த்ரில்லிங். அதுவும் ஓரிடத்தில் அப்படியே சுவரில் இடிச்சு நிற்க, சுவர் உடைஞ்சு அப்படியே வண்டு வரும் ... அப்புறம் வண்டி ரிவர்ஸ்ல போகும்... எல்லாம் நல்லா இருந்தது.

ii) Treasure Hunters
இது ஏதோ குழந்தைகள் ஜீப்ல போய் புதையல் கண்டுபிடிக்கவாம். வலைல, நேரம் அதிகம் இல்லைனா இதுக்கு போக வேண்டாம்னு சொல்லி இருந்தாங்க.. அதனால் போகலை

5. சை-ஃபை சிட்டி (Sci-fi city)
சயன்ஸ் ஃபிக்‌ஷன் தான் தீம்

i) TRANSFORMERS The Ride: The Ultimate 3D Battle
மம்மிய விட சூப்பர் ரைட் இது. 3D க்ளாஸ் போட்டு ஒரு கார்ல அனுப்பறாங்க. நல்ல/கெட்ட ட்ரான்ஸ்பர்மர்ஸ்க்கு நடுவில நாம் இருக்கோம். நிஜமாவே நாம அந்த சண்டையில் ஒரு அங்கமா இருக்கோம். பத்தி எரியும் பொழுது அப்படியே கார் தகிக்குது.

ii) Battlestar Galactica: HUMAN vs. CYLONTM
ரெண்டு ரோலர் கோஸ்டர். இதுக்கும் லாக்கர்ர் தேவை. ஹ்யூமன் நம்ம வீகா லேண்ட்ல இருக்க்கிற மாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும் தலை கீழா எல்லாம் தொங்காது. சைலான், ரெண்டு மூணு தடவை தலைகீழாவும் போகும். விருப்பமிருந்தால் ரெண்டும் போகலாம்... நாங்க ரெண்டும் போனோம்.

iii) Accelerator
இது நம்ம ஊர் கப் & சாஸர் ரைடு மாதிரி இருந்தது. ரெண்டு ரோலர் கோஸ்டருக்கு அப்புறம் ஒரு ரிலாக்சேஷன் மாதிரி இருந்தது.

6. நியூ யார்க் சிட்டி
இங்கே நியூ யார்க் சிட்டி மாதிரி சில செட்டிங்க்ஸ் இருந்தது.

Lights, Camera. Action!™ Hosted by Steven Spielberg
இந்த ஷோவும் நல்லா இருந்தது. ஒரு சின்ன அரங்கம். அமைதியான நியூயார்க் நகரம், கேட்டகரி 5 ஹர்ரிகேனால் தாக்கப்படுவதை மிக அழகாக லைவாக காட்டுவார்கள்.

7. ஹாலிவுட்

இங்கே விதம் விதமா தொப்பி இருந்த கடை நல்லா இருந்தது. அது போக ஹாலிவுட் கேரக்டர்ஸ் சுத்திட்டு இருந்தாங்க. ஒரு “ராக் ம்யூசிக்” இருந்தது. வந்தது வந்தோம் அதையும் பார்க்கலாம்னு கடைசியா அதுக்கும் போனோம். ஹாலிவுட் பேய்கள் ஒரு ராக் ஷோ பண்ணினார்கள். நல்லா தான் இருந்தது.



எல்லா பகுதியிலேயும் சாப்பாடு, கடை , ஸ்ட்ரீட் ஷோ உண்டு. நாங்க நேத்து எடுத்த சபதத்தை மறந்து, சாப்பாடு கொண்டு போகாமல் போய் ரொம்ப கஷ்டம். நிறைய சைனீஸ் ஸ்டைல் நாங்க லன்ச் டைம் இருந்த ஜுராஸிக்கில். கொண்டு போன பிஸ்கட்டில் சமாளிச்சோம். வெள்ளிக்கிழமை ஹாலிவுட் மட்டும் 10 வரை இருக்குமாம். ஏதோ பட்டாசு போடுவாங்க போல்...

நாங்க 7 மணிக்கே முடிச்சு, செண்டோசா எக்ஸ்பிரசைப் பிடிச்சு, கொஞ்ச நேரம் விவோசிட்டியில் உலாத்திட்டு, மெட்ரோ ஏறி ஹோட்டல் வந்து இரண்டாவது நாளை வெற்றிகரமா முடிச்சோம்.

Thursday, March 29, 2012

சிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் (சிங்கப்பூர் பயணம் - நாள் 1)

முந்தைய பாகத்திற்கு ”இங்கே

இந்தியாவில் இரவு 12:45 விமானம். போய் சேரும் பொழுது கிட்டதட்ட சிங்கப்பூர் மணி 7:30. செக் அவுட் பண்ணி ஹோட்டலுக்கு டாக்ஸி பிடித்து செல்ல 9:00 மணி. முதல் நாள் என்பதால் சற்று சாகவாசமாக இருக்கலாம் என்று திட்டம். எனவே திட்டமிட்டிருந்தது சிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் + ரிவர் க்ரூஸ். ஆனால் டக் டூரே தண்ணீரில் என்பதால் ரிவர் க்ரூஸைக் கட் செய்து விட்டோம். முதலில் சையத் அல்வி தெரு தெருவில் போகாததால, சாப்பாட்டுக்கு கொஞ்சம் தடுமாறிட்டு அப்புறம், காரைக்குடியைப் பிடிச்சு காலை உணவு முடிஞ்சது. அடுத்து பஸ் ஸ்டாப்பை தேடி சிங்கப்பூர் ப்ளையர் போற பஸ்ஸை பிடிச்சோம். வழியில் சிங்கப்பூரின் அழகை இரசிச்சுட்டே போனோம்.

இந்த சிங்கப்பூர் ஃப்ளையர் டிக்கட்டை வலையிலேயே நான் பதிவு செஞ்சுட்டேன். இந்த ”சுட்டியில் ” சிங்கப்பூர் ஃப்ளைட்-->சிங்கப்பூர் சிட்டி ஃப்ளையர் பாஸ் தேர்ந்தெடுத்தால், சிங்கப்பூர் ஃப்ளையர் + டக் டூர் போகலாம்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து ப்ளையர் போற வழியில் சிட்டி வியூ நல்லா இருக்கு. இது கேசினோ. அங்கே டூரிஸம் தான் வருமானம். இந்த கேசினோவுக்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு நுழைவு இலவசம், சிங்கப்பூர்காரங்கனா 100$.



சிங்கப்பூர் ப்ளையர் பார்க்க ஜயண்ட் வீல் மாதிரி இருக்கு. ஏ.சி செய்யப்பட்ட கேபின் கேபினா இருக்கு. ஒரு சுற்று வர 30 நிமிஷம் ஆகுது. ரொம்ப மெதுவா சுத்தறதே தெரியாமல் சுத்துது. இதுல போனால் சிங்கப்பூரை ஒரு சுத்து பாத்துடலாம். நல்ல வேளை 30 நிமிஷம் தான்... இல்லேனா கொஞ்சம் போரடிச்சிருக்கும். இந்த டிக்கட்டுக்கு ஒரு ”சிங்கப்பூர் ப்ளையர்” மாடல் கீ செயின், பர்ஸ்ல வச்சிகிற மாதிரி நம்ம போட்டோ, குட்டீஸ் டிக்கட்டுக்கு ஒரு சின்ன செட், அப்புறம் ஒரு டிக்கட்டுக்கு 5$ சாப்பாட்டு டோக்கன் கொடுக்கறாங்க. 5$ சாப்பாடு கிடைக்குமே, மதிய சாப்பாட்டுக்கு ஆச்சுனு புட் ட்ரைய்லுக்கு போனால், பிள்ளைங்க போன வேகத்தில வெளியே வந்துட்டு, “நோ எண்ட்ரி” சொல்றாங்க. அது சைனீஸ் ஸ்டைல் உணவு. அவங்களுக்கு வாடை பிடிக்கலை. நான் வெஜ்ஜா இருந்தாலுமே அந்த வாசனை பிடிக்கலை. அப்புறம் அதுல ஒரு கடையைக் கண்டு பிடிச்சு, 5 பேர் 25 டாலருக்கு தண்ணி பாட்டிலும் கூல் ட்ரிங்க்சும் வாங்கி குவிச்சோம். எப்படியும் இது தேவை தானே? நாளையில் இருந்து சாப்பாடு பேக் செய்யணும்னு சொல்லிகிட்டோம். சப்வே இருந்ததால் கொஞ்சம் சாப்பிட முடிஞ்சது.









இந்த சிங்கப்பூர் ஃப்ளையர் இருக்கிற காம்ப்ளக்ஸ்ல. “ஃபிஷ் ஸ்பா” இருந்தது. சிங்கப்பூர்ல அங்கங்க இந்த “ஃபிஷ் ஸ்பா” இருக்கும். டாக்டர் ஃபிஷ் (garra rufa) என்று ஒரு வகை மீன் வந்து நம்ம காலை மசாஜ் செஞ்சு நமக்கு புத்துணர்ச்சி கொடுக்குமாம். நம்ம ஊர் குளத்தில காலை வைக்கலாம்னு கமெண்ட் அடிச்சாலும், பிள்ளைகள் விருப்பம் தான் ஜெயிச்சுது. காலைக் கழுவி, ஏதோ ஸ்ப்ரே பண்ணி, டாங்க்ல காலை விட்டால், மீனெல்லாம் கொசகொசனு காலை சுத்தி உரச ஆரம்பிக்குது. தண்ணில கால் மணி நேரம் காலை விட்டால், மீனில்லாட்டியும் கால் சுத்தமாவும், நமக்கு புத்துணர்ச்சியாவும் தான் இருக்கும்னு தோணுச்சு...



டக் டூர் என்பது நிலத்திலேயும், தண்ணிலயும் போகும் வண்டியில் பயணம். சிஙப்பூர் ப்ளையரில் ஆரம்பிச்சு, அங்கேயே முடியும். 30 நிமிஷம் நிலத்திலேயும், 30 நிமிஷம் தண்ணிலயும் போகுது. ஒரு கைடு, சிங்கப்பூ பத்தி சொல்லிட்டே வர்றார். சிங்கப்பூரின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு டாக்ஸியில் போனால் அதிகபட்சம் 30 நிமிஷம் தானாம். நிலத்தில் போய்கிட்டு இருந்த வண்டி, டபக்னு தண்ணில குதிச்சது. முன்னாடி இருக்கிறவங்க நனைவாங்கனு சொன்னாங்க... ஆனால் நனையலை.. அப்படியே தண்ணில ஒரு சுத்து... மெர்லயன் வாயில் இருந்து தண்ணி வர்றது கிட்ட வரை போய்ட்டு வந்தோம்.






திரும்ப பஸ்ல லிட்டில் இண்டியாவில் இறங்கினோம். அங்கே இருந்து ஹோட்டலுக்கு போக கொஞ்சம் தூரம்னும், மெட்ரோ இரயிலில் ஒரு ஸ்டாப்னும் சொன்னாங்க. மெட்ரோவில் போன பொழுது தான் புரிஞ்சது, அது எவ்வளவு ஈசியா இருக்குனு... இனி ரயிலில் தான் பயணம்னு முடிவு பண்ணிட்டோம். பயணம் முடிஞ்சு டிக்கட்டைத் திருப்பி கொடுத்துட்டால் 1$ திரும்ப கொடுக்குது டிக்கட் மெஷின். முஸ்தபாவில் சின்ன ரவுண்ட்-அப், சாப்பாட்டுக்கு சையத் அல்வி தெருவில் ஆனந்த பவன் என்று முதல் நாள் நலமாக முடிந்தது.

Wednesday, March 28, 2012

இது எந்த ஊர் --- சிங்கப்பூர்

குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் போகணுங்கறது ரொம்ப நாள் ஆசை. இப்ப U.S , யூரோப் என்று எல்லாரும் போக ஆசைப்படறாங்கனாலும், வெளிநாட்டு சுற்றுலானா சிங்கப்ப்பூருக்கு தனி இடம் இருக்குது. சில நட்புகளும் முன்னாடி போய் வந்திருந்ததால ப்ளான் பண்ணி சிங்கப்பூர் போய் வர்றதுனு முடிவானது. பேக்கேஜ் டூர்னா நேரத்துக்கு கிளம்பணும். பிள்ளைகளுக்கு அது சரிபடாதுனு, நாங்களா திட்டமிட்டு சாகவாசமா சுத்தலாம்னு முடிவு செஞ்சோம். வலையில் தான் எத்தனை விசயங்கள் கிடைக்குது.... அதனால் திட்டமிடல் சுலபமாகவும் , பயணம் இனிமையாகவும் முடிஞ்சது.

சிஙப்பூரில் “லிட்டில் இந்தியா”வில் தங்கினால், நம்ம ஊர் மக்களோட இருக்கிற மாதிரியே தான் இருக்குது . சிங்கப்பூரின் சுத்தம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். போக்குவரத்து மெட்ரோ ரெயில்/பஸ் என்று மிக வசதியாக இருக்கு. போக வேண்டிய இடம் பத்தி கூகிள் மேப்ல தேடினால் வழி சொல்லிடுது. அதையும் அங்கே mrt/பஸ் ஸ்டாப்ல இருக்கிற மேப் வச்சு ஈசியா எங்கேயும் போய் வரலாம். டாக்ஸில போனாலும் அதிக பட்சம் 20-30 வெள்ளி தான் ஆகும்னாங்க.

முஸ்தபா செண்டர் 24 மணி நேரமும் திறந்து இருக்கு. ஷாப்பிங் பிடிச்சவங்களுக்கு ஒரு நாள் பத்தாது இங்கே :-). ”சையத் அல்வி” சாலை போனால் வரிசையா நம்மூர் தான் பொன்னுசாமி, ஆனந்த பவன், ஹாட் சிப்ஸ், சரவணா பவன் ...ஒரு ஆளுக்கு 5 வெள்ளியாவது ஒரு வேளை சாப்பாட்டுக்கு தேவைப்படுது. டீ 2 வெள்ளி...நிறைய இருக்கு... அதுக்கு பதிலா முஸ்தபாவில் 1 வெள்ளிக்கு அழகா ஒரு டம்ளருக்கு மேலயே டீ கிடைக்கும். இங்கே சாப்பாடும் உண்டு... ஆல் இன் ஆல் தான்...

6 நாள் ப்ளான். முதல்ல போகவர டிக்கட் புக் பண்ணனும். அப்புறம் தான் விசா எல்லாம்... cleartrip வழியா டிக்கட் புக் பண்ணினோம். வலை வழிய ஏதோ பிரச்னைனு அவனை போன்ல பிடிச்சு புக் பண்ண சொன்னதுல, மொத்தமா புக் பண்ணாமல் தனித்தனியா புக் பண்ணினால், நல்ல ஆஃபர் கிடைக்கும்னு சொல்லி புக் பண்ணி தந்தான். அடுத்து ஹோட்டல் புக்கிங். முக்கால் வாசி சுற்றிக் கொண்டு, இரவு படுக்க மட்டும் தான் ஹோட்டலுக்கு வருவோம் என்பதால் சின்னதாக ஒரு ஹோட்டல் (பெண்டா) ”லிட்டில் இந்தியா”வில் மின்னஞ்சல் வழி புக் செய்தோம். அடுத்து விசாவுக்கு போட்டோ எடுத்து ட்ராவல் ஏஜென்சி வழியா விசா எடுத்தோம். விசாவுக்கு ரிட்டர்ன் ப்ளைட் மற்றும் ஹோட்டல் புக்கிங் அவசியம். ரெண்டே நாள்ல விசா ரெடி. இனி சுற்றுலா ப்ளானிங் தான். மொத்தம் 6 நாள். இது தான் ப்ளான்:

நாள் 1: சிங்ப்ப்பூர் வருகை+சிங்கப்பூர் ப்ளையர் + டக் டூர்




நாள் 2: யுனிவர்சல் ஸ்டூடியோஸ்


நாள் 3: செண்டோசா தீவு


நாள் 4: சிங்கப்பூர் ஜூ+நைட் சபாரி



நாள் 5: ஜுராங் பேர்ட் பார்க்


நாள் 6: ஷாப்பிங் + இந்தியா திரும்புதல்

போக்குவரத்து வசதியா இருக்கிறதால் நாமே ப்ளான் பண்ணி போறது வசதியா இருக்கு. ஷாப்பிங் முக்கால் நாள் ப்ளான் பண்ணினது தான் கொஞ்சம் இடிச்சுது. மத்தபடி எல்லாமே திருப்தியா இருந்தது. இனி ஒவ்வொரு நாள் அனுபவமும் தனிப் பதிவுகளாக ...

அதீதத்தில் “கதை பேசலாம் வா”

கதை பேசலாம் வா
------------------

நான்கு சுவர்களுக்குள்
உரையாடல்கள் ஏதுமின்றி
உறைந்து கிடக்கின்றது
மௌனம்...

ஒட்டுக்கேட்ட கதைகளை
சுமந்து செல்லும் காற்று
நின்று போனது
வார்த்தைகளின்றி...

காற்று வேண்டும்
கதை பேசலாம் வா!!!


அதீதம் மார்ச் 16 இதழில் வெளியாகி உள்ள கவிதை. சுட்டி: ”கதை பேசலாம் வா

Wednesday, March 7, 2012

பயணங்கள்

வாழ்க்கை என்ற பயணத்தில் தான் எத்தனை அனுபவங்கள். சற்றும் குறைந்ததல்ல ஊர்ப் பயண அனுபவங்கள். சிறு வயதில் பெரும்பாலும் பேருந்து பயணங்கள் தான். சன்னலை ஒட்டி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கி வழிந்தால் ஊர் வருவதே தெரியாது. சிறு வயதில் இரயில் பயணங்கள் கம்மிதான். என்றாலும் உடன் வருபவர்களுடன் உரையாடல்களுக்கு பஞ்சமிராது. கை முறுக்கு, புளி சாதம் என்று எல்லாமும் பகிர்ந்து பயணம் சுகமாக இருக்கும். இதெல்லாம் இப்பொழுது மயக்க பிஸ்கட் பயத்தில் போனவைதான். யாரோ சிலர் செய்யும் தவறால் யார்மீதும் நம்பிக்கை இன்றி போய்விட்டது.


கிட்ட‌த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் முத‌ல் விமான‌ப் ப‌ய‌ண‌ம். ஆஸ்திரேலியாவிற்கு செல்ல சிங்க‌ப்பூர் வ‌ழி ப‌ய‌ண‌ம். சிங்க‌ப்பூர் இற‌ங்கும்பொழுதே இளைப்பு சேர்ந்து கொண்ட‌து. கைப்பையை சும‌க்க‌ முடியாத‌ அள‌வு இளைத்த‌து. சொல்லாம‌லே உதவினார் கேர‌ளாவைச் சேர்ந்த‌ ஒருவ‌ர். முன்பின் தெரியாத‌வ‌ரிட‌ம் ந‌ன்றி கூறி தொலைபேசி எண் ப‌கிர்ந்து கொண்டேன். அடுத்த‌ வார‌மே சிட்னியில் யாரையோ காண‌ வ‌ந்த‌வ‌ர், அவ‌ர்க‌ள் ஊரில் இல்லை என்று தொட‌ர்பு கொண்டார், நானும் க‌ண‌வ‌ரும் அழைத்து வ‌ந்து ஓர் இர‌வு த‌ங்க‌ வைத்து வ‌ழி அனுப்பினோம். இப்ப‌டி முன் பின் தெரியாத‌வ‌ருட‌ன் இன்று தொலைபேசி எண் கொடுப்பேனா என்று யோசித்தால் இல்லை என்று தான் தோன்றுகிற‌து.


ச‌மீப‌த்தில் இர‌யிலில் சென்று கொண்டிருந்தோம். சுட்டி குழ‌ந்தை ஒன்று பேச்சுக்கு இழுத்த‌து. குழ‌ந்தைக‌ள் சுட்டியாக‌ இல்லாவிட்டால் இன்றைய ப‌ய‌ண‌ங்க‌ளும் சுவார‌சிய‌மின்றிதான் இருக்கும். சொந்த‌ ஊர் ஒன்றாக‌ இருக்க‌ அம்மாக்க‌ளிடையே பேச்சு துவ‌ங்கிய‌து. எந்த‌ தெரு என்று துவ‌ங்கிய‌ பேச்சில்...சிறு வ‌யதில் ஓடி விளையாடிய‌ ஒருவரின் உற‌வு என்று புரிந்த‌து. அத‌ன் பின் சில‌ க‌தைக‌ள் என்று சுவார‌சிய‌மான‌து ப‌ய‌ண‌ம். பேச‌ வைத்த‌ சுட்டிக்கு தான் ந‌ன்றி சொல்ல‌ வேண்டும்.


தற்பொழுது பய‌ண‌த்தை சுவார‌சிய‌மாக்கும் உரையாடல்க‌ள் குறைந்துவிட்ட எத‌ன் மீதும் ந‌ம்பிக்கை அற்ற நிலையை என்னென்ப‌து?