இன்று குட்டிப் பெண்ணுக்கு உருளைக்கிழங்கை சார்ட் பண்ண சொல்லி இருந்தார்கள். சார்ட் செய்த பின் என் கணவர் அவளுக்கு உருளைக்கிழங்கைப் பற்றி நாலு வரி சொல்லிக் கொடுத்தார். அனாவசியத்துக்கு கார்போஹைட்ரேட்சை இழுத்தார். அவள் வாயில் நுழையவில்லை, ஏதோ கூறினாள். அவள் அக்கா சிரித்தாள். கொஞ்ச நேரம் கழித்து , எனக்கு வயிறு வலிக்குது" என்று குட்டிப் பெண் படுத்து விட்டாள். மெல்ல அவளிடம் சென்றேன். "என் செல்லமே, நீ போய் உருளைக்கிழங்கு சார்ட்டை கழுத்தில மாட்டி நின்னா போதும். மிஸ் ஒண்ணும் பேச வேண்டாம்னு சொல்லிட்டாங்க. வயறு வலிக்குதுனா படுத்து ரெஸ்ட் எடு, சரியாகிடும்". கொஞ்ச நேரம் கழித்து, சார்ட்டுடன் மேடம் ஸ்கூலுக்கு ரெடி.
முன்பொரு முறை அவள் அக்காவுக்கும் இதே சிண்ட்ரோம் தான். அடிக்கடி வயிறு வலிக்கிறது என்றாள். மெல்ல விசாரித்த பொழுது தான் தெரிந்தது, அவள் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு ப்ராக்டீஸ் செய்ய, வேறோர் இடத்திற்குச் செல்கிறாள். ஏனோ, புது ஆசிரியர்கள், புது மாணவர்களைக் கண்டதும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்துள்ளது. அதனால் தான் வயிற்று வலி. ஆண்டு விழா நிகழ்ச்சியிலிருந்து அவளை விலக்கச் சொல்லி ஆசிரியரிடம் கூறிய பின்பு வயிற்று வலி வரவில்லை. அடுத்த வருடம் அவளே விரும்பி ஆண்டு விழாவில் பங்கெடுத்தாள்.
எனவே குழந்தைகள் ஏதேனும் காரணம் கூறி பள்ளிக்குச் செல்ல அடிக்கடி மக்கர் செய்தால், என்ன காரணம் என்று பார்க்க முயலுங்கள். என்றும் அவர்கள் "இதனால் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்" என்று கூற மாட்டார்கள். நாம் தான் கவனமாக் அவ்ர்களின் அசைவுகளை கவனிக்க வேண்டும்.
4 comments:
:-)..மிகச் சரி!!
இதே கோணத்தில் நிறைய எழுதுங்கள். இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வளர்ப்பை மறந்துகொண்டு வருகிறார்கள். வீட்டில் மீன் தொட்டி இருப்பது போல, தொட்டில்களும் ஒரு ஃபேன்சியாக இருந்தால் போதும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லா பெற்றோர்களும் தற்போது மிக மிக "Busy". இப்படி பிஸியாக இருந்து என்ன செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.
உங்கள் கணவர் அனாவசியத்துக்கு கார்போஹைட்ரேட்சை இழுத்திருந்தாலும், அவர் குழந்தையுடன் இருந்து கவனித்துக்கொண்டார் என்பது மிக மிக முக்கியம். இன்று பல குழந்தைகள் அப்பா அம்மாக்களிடம் செல்ஃபோன் வழியாக மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது.
என் பையன் ஃபர்ஸ்ட் வரவேண்டும், எல்லாத்தையும் ஜெயிக்க வேண்டும் என்று பல பெற்றோர்கள் குழந்தைகளை கசக்கிப் பிழிகிறார்கள். இதைப் பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவை படித்துப் பாருங்கள்.
http://selvaspeaking.blogspot.com/2008/08/blog-post_30.html
நன்றி!
நன்றி.
/* இதைப் பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவை படித்துப் பாருங்கள்.
*/
நிச்சயமாக....
Very nice thoughts to introspect once in a while and show it in action.
Post a Comment