கடந்த வாரம் ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஏ.சி கோச் தான் டிக்கட் கிடைத்தது. குளு குளு என்று போவது பெரிய விஷயம் கிடையாது. நாம் போகும் பொழுது தான், யாராவது புகைஞர் வந்து ஊதித் தள்ளுவார். ஏ.சி பஸ்ஸிலோ, கோச்சிலோ இதை சகித்துக் கொள்வது போன்ற கொடுமையை சொல்ல முடியாது. சும்மா ஊதினாலே மூச்சு திணறும், ஏ.சி கோச்-ல மூச்சு நின்னுடுமோனு இருக்கும். இந்த தடவையும் அதே ப்ரச்னை தான். யார் எவர் என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாத கையாலாகாத்தனத்துடன் தான் இருக்க வேண்டி உள்ளது. எனக்கு "wheezing" உள்ளதால், சற்று சிரமமாக இருந்தது. ஒரு சிறு பிள்ளைகக்கோ, அல்லது வயதானவருக்கோ அலர்ஜி என்றால் எத்தனை சிரமம்?
இவங்க கையில் ஒரு ஸ்ப்ரே கொடுத்து, பக்கத்தில இருக்கிறவங்க மேல் ஸ்ப்ரே பண்ணுங்க, நல்லா மூச்சு திணறட்டும் என்று கூறினால் செய்வார்களா? (நிச்சயம் 50% செய்ய மாட்டார்கள் என்று தோன்றுகிறது). புகைப்பதும் கிட்ட தட்ட அதைத் தான் செய்கிறது என்பதை ஏன் இவர்கள் உணர்வதில்லை?
அவர்கள் புகைக்கும் பொழுது அருகில் ஒரு கைக்குழந்தையோ, கருவில் ஒரு குழந்தையோ இருக்கலாம், அவர்களும் இந்த நச்சுப் புகையை நுகரலாம் என்பது இவர்களுக்கு தெரியுமா?
அருகில் இலேசான ஆஸ்துமாவில் துன்புறுபவர்கள், இந்த புகையால் மேலும் அவதிப்படுவார்கள் என்று அறிய மாட்டார்களா?
இன்று. மாரடைப்பு என்பது வெகு சகஜமாகி விட்டது. இப்பொழுது புகைக்கா விட்டாலும் முன்பு புகை பிடித்திருந்தால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இன்று பல விஷயங்களில் விழிப்புணர்வூட்ட ஊடகங்கள் உள்ளன. என்றாலும் இதெல்லாம் தெரிந்தே புகைக்கிறார்கள்.
தன்னைப் பற்றி நினைக்க வேண்டாம் என்றால், இருந்தால், "passive smoking" என்று மற்றவர்கள் திணறடிக்கப்படுகிறார்கள், இல்லை என்றால் அவரை நம்பி இருப்பவர்கள் தான் துன்பப்படுவார்கள்.
இதெல்லாம் சிகரட்டை வாயில் வைக்கும் பொழுது யோசித்தால் நிச்சயம் இப்பழக்கம் குறைந்து நின்று விடும் என்று தோன்றுகிறது.
எதை பற்றியும் கவலை இல்லை, என் இஷ்டம் என்றால் "நல்லா ஊதித் தள்ளுங்க..."
14 comments:
ஏசி பஸ்ஸ்லிலோ, கோச்சிலோ யாரேனும் புகைபிடித்தால் நீங்கள் தாராளமாக அப்பொழுதே உங்கள் ஆட்சேபனையைத் தெரிவிக்கலாமே!
அது உரிமையும் கூட!
கூச்சப்படாமல் நேருக்கு நேர் சொல்லி விடுங்கள், "புகைக்க வேண்டுமானால் வெளியே சென்று புகையுங்கள்" என்று.
//எதை பற்றியும் கவலை இல்லை, என் இஷ்டம் என்றால் "நல்லா ஊதித் தள்ளுங்க//
:-))
பொது இடங்களில் ஊதுவது குற்றமாச்சேப்பா.
புகார் செஞ்சுருக்கலாமே......
புகை பிடிக்காதே! என்று சொல்வதிற்கு தயங்காதிர்கள்!
அடுத்தர்வர்களை பற்றி கவலை எல்லாம் இப்போ யாரும் படுவதில்லை
எல்லாம் என் இஷ்டம் என்பதுதான் இப்போது அனைவரின் தாரக மந்திரம்
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
/* புகை பிடிக்காதே! என்று சொல்வதிற்கு தயங்காதிர்கள்! */
/* புகைக்க வேண்டுமானால் வெளியே சென்று புகையுங்கள் */
வெளியே செல்ல சொல்லலாம். வெளியேயும் ஆட்கள் உள்ளார்களே? மேலும், பல நேரங்களில் "ரூல்ஸ் பேச வந்துட்டாங்க..." என்ற அலட்சிய மனப்பான்மையைப் சில் முறை பார்த்ததால் , எதிரில் இருந்தால் தவிர, சொல்ல மனம் வருவதில்லை. இது தவறாக இருக்கலாம். என்றாலும் , புகை பிடிப்பவர்களும் யோசிக்கலாமே?
/*பொது இடங்களில் ஊதுவது குற்றமாச்சேப்பா.
புகார் செஞ்சுருக்கலாமே...... */
/* ஏசி பஸ்ஸ்லிலோ, கோச்சிலோ யாரேனும் புகைபிடித்தால் நீங்கள் தாராளமாக அப்பொழுதே உங்கள் ஆட்சேபனையைத் தெரிவிக்கலாமே!
அது உரிமையும் கூட! */
ஒரு முறை இரயிலில் சென்ற பொழுது ஊதித் தள்ளியது ஒரு போலீஸ்காரர்.
பஸ்ஸில் ஒரு முறை, இது போல் யாரோ சொல்ல, பெரிய தகராறு நடந்தது. இம்முறை நான் பார்த்தது டிக்கட் பரிசோதிப்பாளர் போல் இருந்தது. அவரும் கதவருகில் நின்று, வேளியே தான் ஊதினார். ஆனால் ஏ.சி கோச் என்பதால் கசிந்த கொஞ்ச புகையும், மூச்சை அடைத்தது. கேட்க உரிமை உண்டு என்றாலும், நாம் விதிகளைப் பின்பற்றினால், எத்தனை நன்மைகள். கேட்கிறோம், கேட்கப்படுபவர் கோபத்தில் ஏதாவது தகராறு பண்ணினால்.... என்ற பய உண்ர்ச்சி இருக்கத்தான் செய்கிறது...
//ரூல்ஸ் பேச வந்துட்டாங்க..." என்ற அலட்சிய மனப்பான்மையைப் சில் முறை பார்த்ததால் , எதிரில் இருந்தால் தவிர, சொல்ல மனம் வருவதில்லை. இது தவறாக இருக்கலாம். என்றாலும் , புகை பிடிப்பவர்களும் யோசிக்கலாமே? ///
எதிர்ப்பு குரல் என்ற ஒன்று வெளியிடப்படாதவரைக்கும் எல்லாமே சரியான செயலாகத்தான் எல்லாருமே நினைப்பார்கள்!
தாங்களாகவே வருந்தி திருந்திக்கொள்ளும் அளவுக்கு இன்னும் ஊடகங்களோ அல்லது படிப்பறிவு இன்னும் வளப்படவில்லை :(((
மிகத்தைரியமாக கருத்துக்களை வெளிப்படுத்த தயங்காதீர்கள் - பொது இடங்களில்...!
தங்கள் உடம்புக்கே ஆகாதெனத் தெரிந்தும் இதைத் தொடர்பவர்களுக்குத் தலைப்பு பொருத்தம். ஆனால் பொது இடத்தில் பொறுப்பின்றி புகைத்தால் தலைப்பு பொருந்தாதுங்க. அப்படி நாம விடக் கூடாது. துளசி மேடம் சொல்லியிருக்கிற மாதிரி உடனே ஆட்சேபிக்கலாம்.
உண்மை தான்... தங்கள் கருத்துக்கு நன்றி ஆயில்யன். இனி கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்..
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இராமலஷ்மி. இனி குரல் கொடுக்க முயற்சிக்கிறேன்.
அருகில் புகை பிடிப்பவர்களால் ஏற்படும் துன்பத்தை எடுத்தச் சொல்ல தயக்கம் வேண்டியது இல்லை. நான் கவனித்த வரை பொது இடங்களில் புகைப் பிடிக்க பலரும் தயங்கத் துவங்கி விட்டனர். பயணங்களில் புகைப் பிடிப்பவர்கள் எண்ணிக்கை மிக சொற்பம். அதையும் இல்லாது செய்வதற்கு உங்கள் எதிர்ப்புகள் உதவும்.
கேட்கப்படுபவர் கோபத்தில் ஏதாவது தகராறு பண்ணினால்.... என்ற பய உண்ர்ச்சி இருக்கத்தான் செய்கிறது...
ஒருவாட்டி துணிந்துதான் பாருங்களேன் !!
எனக்கும் இந்த அனுபவம் உண்டு. நான் நேரடியாக அவர்களிடம் சென்று மரியாதையான வார்த்தைகளில் கனிவாக சொல்வேன். பெரும்பாலோனோர் உடனே நிறுத்தி விடுவார்கள். சிலர் வம்பு பேசுவார்கள். இப்போது மீண்டும் மரியாதையான வார்த்தைகளில் எச்சரிப்பேன். இப்போது கேட்டுகொள்வர் .
Post a Comment