
வீட்டின் முன் அழகாக பூத்திருந்தது அந்த பூ. "இக்ஸோரா" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பூவை "இட்லி பூ" என்போம். என் பெரியம்மா என் குட்டிப் பெண்ணிடம் "இட்லி பூ" பூத்திருக்கு பார் என்றார். அவள் "பூரி பூ" எங்கே என்றாள்? அதற்கு அவர் , கண்ணாடி பார், உன் முகத்தில் உள்ளது "பூரிப்பு" என்றார். நல்ல டைமிங் என்று இரசித்தோம்.
No comments:
Post a Comment