என் பெண்ணிற்குச் சிறு கதைகள் படிக்கும் பழக்கம் அவளுக்கு கதைகள் பாடப் புத்தகத்தில் வரும் பொழுதே ஏற்படுத்தினோம். கதை புத்தகங்கள் பல வாங்கிக் கொடுத்து, படிக்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல, ஒரு பக்க கதைகள் அவளுக்கு சலித்துப் போவது போல் தெரிந்தது. எனவே நூலகத்தில் அவள் வயதிற்கு (9) உரிய சற்று பெரிய கதைகளாக , புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்தேன். ஒரு பக்கத்திற்கு மேல் படிக்கவில்லை என்றதும், அவளுக்குப் பிடிக்கவில்லை என்று எண்ணினேன். பின் ஒரு நாள், அவளுடன் கதை படிக்க நானும் அமர்ந்தேன். அப்பொழுது தான் புரிந்தது, நாவல் போல் தொடர்ச்சியாகப் படிப்பது புதிதாக இருப்பதால், தடுமாறுகிறாள் என்று. ஓரிரண்டு அத்தியாங்கள் அவளுடன் சேர்ந்து நானும் படித்தேன். அதன் பிறகு அவள் புரிந்து சுவாரஸ்யத்துடன் படிக்கலானாள். இப்பொழுதெல்லாம், அவளே அவள் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கிறாள். அவளுக்கென வாசிப்பில் பிடித்தவை, பிடிக்காதவை என ஒரு தனித்தன்மை உருவாகுவதைக் காண வியப்பாக உள்ளது.
சிறு சிறு விஷயம் என்று நாம் குழந்தைகளிடம் பல விஷயங்களைக் கவனிப்பதில்லை. சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் , எப்பொழுது விரல் பிடிக்க வேண்டும், எப்பொழுது விட வேண்டும் என்று உணர்ந்து, அவர்களுக்கு நாம் சரியான நேரத்தில் வழிகாட்டலாம்.
8 comments:
உஙகளின் வழிகாட்டல்
எனக்கு உபயோகப்படும்.
"என் பெண் வளர்கிறாள்:
அருமை.
என்றுமே பெண் குழந்தைகள் வளர்ப்பு அழகான ஒன்று.
நான் இப்போதே கற்பனையில் மிதக்கிறேன்
வருகைக்கு நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...
ஹை என் மகளின் பெயரும் அம்ருதவர்ஷினி தான்.
:)))))
வருகைகு நன்றி புதுகைத் தென்றல்
//இப்பொழுதெல்லாம், அவளே அவள் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கிறாள். அவளுக்கென வாசிப்பில் பிடித்தவை, பிடிக்காதவை என ஒரு தனித்தன்மை உருவாகுவதைக் காண வியப்பாக //
அருமை! இப்படி தாங்களாகவே படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது மிக ந்ல்ல பழக்கம்!
//சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் , எப்பொழுது விரல் பிடிக்க வேண்டும், எப்பொழுது விட வேண்டும் என்று உணர்ந்து, அவர்களுக்கு நாம் சரியான நேரத்தில் வழிகாட்டலாம். //
எப்போதும் ஸ்பூன் ஃபீட் பண்ணிக் கொண்டிராமல் அவர்களது தனித்தன்மை வளர என்ன செய்ய வேண்டும் என்பதை நுணுக்கமாகக் கவனித்து ரத்னச் சுருக்கமாக மேற்கண்ட வரிகளில் காட்டியிருக்கிறீர்கள். அற்புதம். பாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்.
கருத்துக்கு நன்றி இராமலஷ்மி மேடம்.
Post a Comment