மெதுவாகச் சுற்றிய என் உலகம்
வேகம் கொண்டது, உன் வரவால்
நேற்று போல் உள்ளது
நீ என் கைகளுக்குள்
கவலையின்றித் துயின்றது...
இன்று
என் தோளை எட்டிப் பிடித்து
என்னை அணைத்து சிரிக்கிறாய்...
என் கண்ணீர் மட்டும் துடைத்தவள்
கண்ணீருக்குக் காரணம் தேடுகிறாய்
கதைகள் கேட்டு மகிழ்ந்தவள்
கதை கூறி மகிழ்விக்கிறாய்
தாலாட்டுகளில் கண் மலர்ந்தவள்
உன் மடியில் என்னைத் தாலாட்டுகிறாய்
என்ன செய்யலாம் என்று கேட்டவள்
இப்படி செய்யலாமா என்று கேட்கிறாய்
உன் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
நான் முகம் மலர்கிறேன்
உன் முக மலர்ச்சியில்
நான் புத்துயிர் பெறுகிறேன்.
10 comments:
என் கண்ணீர் மட்டும் துடைத்தவள்
கண்ணீருக்குக் காரணம் தேடுகிறாய்
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் .
நன்றி பூங்குழலி...
என்னமோ இருக்குங்க உங்க எழுத்துல.. நான் தவறாம படிக்கிறேன்.. நெறைய எழுதுங்க..
நன்றி....
//என் கண்ணீர் மட்டும் துடைத்தவள்
கண்ணீருக்குக் காரணம் தேடுகிறாய்
கதைகள் கேட்டு மகிழ்ந்தவள்
கதை கூறி மகிழ்விக்கிறாய்//
ஆத்மார்த்தமான நெகிழ்ச்சி இழையோடுகிறது அத்தனை வரிகளிலும்.
வேணு.. வேணாம்..! said...
//என்னமோ இருக்குங்க உங்க எழுத்துல..//
//நெறைய எழுதுங்க..//
இவர் சொல்வது ரொம்ப உண்மை. இந்தக் கவிதையைப் படித்ததும் மற்ற எல்லா கவிதைகளையும் படித்து விட்டு வந்தேன்.
நானும் சொல்கிறேன்:
"நிறைய எழுதுங்கள்"
என் பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி அக்கா. உங்களிடம் இருந்து இவ்வார்த்தைகள் வருவதில் மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகளில்லை... மிக்க நன்றி
ஒருதாயாக இவைகளை நானும் உணர்கிறேன் என்றாலும் இவ்வளவு அழகாக வார்த்தைகளை வடிக்கத் தெரியவில்லை.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகை தென்றல்
awesome.. post more..
நன்றி பரத்
Post a Comment