என் மேகம் ???

Thursday, November 13, 2008

பரிசும் பாராட்டும்

கை நிறைய பரிசுகளுடன்
களித்து இருந்தாள் என் மகள்

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாக
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

பின்னாளில் ஒரு நாள்
எத்தனை உயரம் சென்றாலும்
எத்தனை திறன் இருந்தாலும்

என்றோ செய்த
உப்பில்லா சாம்பார் மட்டுமே
பேசப்படும் நேரத்தில்...

நிறைகள் எல்லாம் கடமையாகவும்
குறைகள் மட்டுமே கருத்தாகவும்
மாறும் நேரத்தில்...

மனதிற்கு இதம் தர வேண்டும்
சில கதகதப்பான நினைவுகளென
மேலும் மேலும்
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

5 comments:

தமிழ் அமுதன் said...

என்ன! போங்க! எப்படி எப்படியெல்லாம்
யோசிச்சு கலங்கடிக்குறீங்க!


இன்னிலேர்ந்து வீட்டுல ''சிங்க மணிய''
புகழ்ந்து தள்ளுரதுதான் மொத வேல!
ரசத்த ஊத்துனாலும் சாம்பார் 'சூப்பர்''
அப்படின்னு தான் சொல்ல போறேன்!

சரியா ? நான் சொல்லுறது ?
பொண்ண பெத்துடோம்ல!

அமுதா said...

வருகைக்கு நன்றி ஜீவன். ரசத்தை சாம்பார்னு சொன்னீங்கனா, உண்மையாகவே சாம்பாரை சூப்பர்-னு சொல்றப்ப அதன் நிஜம் மறைந்து விடும். என் தோழி ஒருவர் அடிக்கடி, "பாராட்டுக்கள் எல்லாம் அம்மா அப்பா தந்ததோடு சரி" என்று அடிக்கடி கூறுவார் அதன் தூண்டுதலே இக்கவிதை. கொஞ்ச நாள்ல குழந்தைகள் நிறைய பாராட்டு தருவார்கள். அப்பொழுது இந்த ஏக்கம் மறைந்து விடும் :-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா நச்சுன்னு தாக்கிட்டீங்க.

நல்ல கவிதை

குழந்தைகளின் வாயிலாகவே நம் நிலைமை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

என்றோ செய்த
உப்பில்லா சாம்பார் மட்டுமே
பேசப்படும் நேரத்தில்...

நிறைகள் எல்லாம் கடமையாகவும்
குறைகள் மட்டுமே கருத்தாகவும்
மாறும் நேரத்தில்...

மனதிற்கு இதம் தர வேண்டும்
சில கதகதப்பான நினைவுகளென
மேலும் மேலும்
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

EXCELLENT

ராமலக்ஷ்மி said...

//மனதிற்கு இதம் தர வேண்டும்
சில கதகதப்பான நினைவுகளென
மேலும் மேலும்
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்//

அருமை அமுதா. உண்மைதான். எவ்வளவு ஆத்மார்த்தமாக சிந்தித்திருக்கிறீர்கள்!

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி அமித்து அம்மா