இறைவா!
ஏன் கொடுத்தாய் ஆறறிவு?
இல்லாதிருந்தால்..
தற்காப்புக்காக மட்டுமே
தலைகள் விழுந்திருக்கும்.
இன்றோ....
இனமென்றும், மதமென்றும், மொழியென்றும்
மண்ணென்றும், பொன்னென்றும், போதையென்றும்,
மனமென்றும், மனச்சிதைவென்றும்...
நித்தம் ஒரு காரணமென்று
எண்ணற்ற காரணங்கள்
எண்ணற்ற தலைகள்..
ஆறறிவு என்பது
அன்பால் உலகை உய்விக்க
அமைதி பூமி உருவாக்க
என்று அனைவரும்
உணர்வது எப்பொழுது?
கூறிடுவாய் இறைவா!!
5 comments:
//ஆறறிவு என்பது
அன்பால் உலகை உய்விக்க
அமைதி பூமி உருவாக்க
என்று அனைவரும்
உணர்வது எப்பொழுது?//
இறைவனுக்கு மட்டுமே தெரியும் இதன் விடை. இறைஞ்சுவோம் நாம் அவனிடமே!
/ஆறறிவு என்பது
அன்பால் உலகை உய்விக்க
அமைதி பூமி உருவாக்க
என்று அனைவரும்
உணர்வது எப்பொழுது?
கூறிடுவாய் இறைவா!! /
அருமை
நல்லா இருக்கு அமுதா.. ஏன் கொடுத்தான் ஹ்.ம்
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
.............
Post a Comment