என் மேகம் ???

Monday, November 10, 2008

என் கேள்விக்கு என்ன பதில்?

குழந்தைகள் என்றாலே "இதனால் என்ன ஆகும், என்ற விளம்பரம் போல்", ஓயாத அவர்களின் கேள்விகள் தான். கேள்வி கேட்பது ஈஸி, பதில் சொல்வது ... என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், குழந்தைகள் வேறு எங்கு கேட்க முடியும் பெற்றோர், ஆசிரியரைத் தவிர. ஆசிரியரிடம் கூட சில எல்லைகள் உண்டு, பெற்றோரிடம் தேவைப்படாது (குழந்தையாக இருக்கும் வரையாவது...).

சிலரிடம் பேசும் பொழுது , குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற இயலுவதில்லை என்று புரிகிறது. என்றாலும் குழந்தைகளிடம் நாம் கவனமாக பதில் உரைக்க வேண்டும். "இப்படி எல்லாம் கேள்வி கேட்காதே", என்றால், "எப்படி எல்லாம்" என்று எப்படி தெரியும் அவர்களுக்கு? இது, கேள்வி கேட்காதே என்று தான் அவர்களுக்குத் புரியும். சில முறைகள் "தெரியாது" என்று கூறினால், "இதுவும் தெரியாதோ", என்று கேள்விகள் அவர்களிடமிருந்து வராமலே போகக்கூடும்.

கேள்வி-பதில் தான், பல விஷயங்களைப் புரிந்து கொள்ள மிகுந்த உதவி செய்யும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே முடிந்த வரை குழந்தைகளின் வயதிற்கேற்ப பதில் கூற முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவர்களது கேள்விகளுக்கு மதிப்பு கொடுத்து பதில் சொல்ல முயற்சிப்பதே, அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், அவர்களுடனான நெருக்கமும் அதிகரிக்கும். அவர்கள் வளர வளர அவர்களது தனித்தன்மையும் வளர்கிறது என்று உணர்ந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

11 comments:

ஆயில்யன் said...

//இப்படி எல்லாம் கேள்வி கேட்காதே", என்றால், "எப்படி எல்லாம்" என்று எப்படி தெரியும் அவர்களுக்கு? இது, கேள்வி கேட்காதே என்று தான் அவர்களுக்குத் புரியும். சில முறைகள் "தெரியாது" என்று கூறினால், "இதுவும் தெரியாதோ", என்று கேள்விகள் அவர்களிடமிருந்து வராமலே போகக்கூடும்.//

சரியாய் புரிந்து சரியாய் சொல்லியிருக்கீங்க அக்கா!

ம்ம் குழந்தை வளர்ப்பு சம்பந்தமா நிறைய சேதிகள் கைவசம் வைச்சிருக்கீங்க போல நிறைய பேருக்கு பயன்படும்!

அமுதா said...

நன்றி ஆயில்யன்

Dhiyana said...

நீங்கள் சொல்வது சரி அமுதா. ஆனா சில நேரங்களில் சில கேள்விகளுக்கு பதில் சொல்வது ரொம்ப கஷ்டமாயிருக்கு. உதாரணத்துக்கு,
"பாப்பா கை எங்க இருக்கு?",
"அம்மா கை எங்க இருக்கு?",
எல்லாம் பதில் சொல்லி முடித்த பிறகு,திரும்ப "பாப்பா கை எங்க இருக்குனு?" ஆரம்பிப்பாள். வேலை நேரத்தில எப்படி கேள்விகளை நிறுத்தலாமென யோசிக்கத் தோனும். ஆனா அது தப்புனும் தெரியும்.

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு!

இந்த கட்டுரைய
படிக்கும்போது ஒரு
சின்ன பயம் வருது
கண்டிப்பா அது தேவையான
பயம்தான்.

ஜாக்கிரதை உணர்வு
அதிகரிக்குது!

குழந்தை வளர்ப்பு சம்பந்தமான
மேலும் பல தகவல்களை
உங்களிடம் எதிர் பார்க்கிறேன்!

அமுதா said...

நன்றி தீஷு அம்மா. ஆனால் சில வேளைகளில் நாம் பதில்களைக் கேள்விகளாகவே தரலாம். "அம்மா சொன்னேனே, பாப்பா கை எங்க இருக்குனு சொல்லு" என்று திருப்பி திருப்பி கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் அவர்களைக் கேட்க ஆரம்பித்தால், வேறு கேள்விகள் வரும். என்றாலும் நாம் கவனமாக் இந்த கேள்விகளைத் திருப்ப வேண்டும். கேள்விகளை நான் தவிர்ப்பதாக எண்ணம் வரக்கூடாது.

அமுதா said...

நன்றி ஜீவன். என் அனுபவங்களை இயன்ற அளவு பகிர்ந்து கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா நல்ல வழிகாட்டல் பதிவு

அமுதா said...

நன்றி அமித்து அம்மா

சந்தனமுல்லை said...

நல்ல பாயிண்ட்ஸ்!!

butterfly Surya said...

குழந்தைகளிடம் காட்ட வேண்டியது மூன்று.

1. பொறுமை
2. பொறுமை
3. மேல உள்ள இரண்டும்.

அமுதா said...

கருத்துக்கு நன்றி சூர்யா. பொறுமை கடைபிடிப்பது தான் பெரிய வேலை