என் மேகம் ???

Tuesday, November 4, 2008

வயது தந்த பாடம்

பல பிள்ளைகளைப் போல் எங்களுக்கும் பெற்றோரை மகிழ்விக்க ஆசை தான். நட்சத்திர விடுதி, விமானப் பயணம், வெளிநாடு என எல்லாம் இன்று அனுபவிக்க அன்று பாடுபட்டு அவர்கள் படிக்க வைத்ததன் பலன் தானே?

சும்மா கூப்பிட்டால் வருவார்களா? பிறந்த நாள் கொண்டாட்டம், L.T.A என்று காரணம் சொல்லி, நட்சத்திர விடுதி, விமானப் பயணம் எல்லாம் அவர்களையும் பார்க்க வைத்தாயிற்று. அடுத்தது வெளிநாடு. திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் என்று ஒரு டூர் போகலாமா என்று யோசித்தோம். பிள்ளைகள் சற்று பெரிதானால் சுற்றுலா நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் தலை தூக்க, பிள்ளைகளின் வயதைக் கருதி திட்டத்தை சற்றுத் தள்ளிப் போட்டோம். எதிர்பாராத விதமாக, வீட்டில் ஓர் இழப்பு. பிள்ளைகளின் வயதைக் கருதியவர்கள், பெற்றோருக்கு வயதாகிறதே என்று யோசிக்க மறந்தோம். நாம் பொறுப்பான பெற்றோராக யோசிப்பது போல், பெற்றோரின் பொறுப்பான பிள்ளைகளாகவும் யோசித்திருக்க வேண்டும் என்று மனதை உறுத்துகிறது.

8 comments:

தமிழ் அமுதன் said...

எதிர் பாராத இழப்பு!
என்னதான் செய்ய முடியும்!
உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு
உபயோகமாக இருக்கும் கண்டிப்பாய்!
உங்கள் நோக்கமும் அதுவாகத்தான்
இருக்கும்!........நன்றி!

ரிதன்யா said...

ஆம்..
பல விசயங்களை நாம் காம் கடந்துதான் தெரிந்துகொள்கிறோம்.
நானும் பட்டதுண்டு.

ஆயில்யன் said...

//சற்றுத் தள்ளிப் போட்டோம். எதிர்பாராத விதமாக, வீட்டில் ஓர் இழப்பு. //

:((

உங்களின் கருத்தோடு இணைந்துக்கொள்கிறேன்!

பல முறை என் பாட்டி,தன் ஆசையினை தெரிவித்திருந்தும்,வசதி வாய்ப்புக்கள் இருந்தும் கூட தவற விட்ட குலதெய்வ கோவில் பயணம் அவ்வப்போது வந்து நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது என்னில் :((

மனம் கனத்துப்போகும் நேரங்களில் எல்லாம் பாட்டியின் படம் பார்த்து கண்ணீர் விட்டு மன்னிப்பு கோருகிறேன்!

ராமலக்ஷ்மி said...

என்ன செய்வது. எட்டி யோசிக்காதது குற்றமல்ல. காலம் உணர்த்திய பாடம் கசப்பானதுதான். இந்தப் பகிர்தல் உங்கள் பாரத்தை இறக்குவதற்காக மட்டுமல்ல எல்லோருக்கும் 'பாடம்' சொல்லத்தான், நன்றி அமுதா.

அமுதா said...

நன்றி ஜீவன்
நன்றி ரிதன்யா
நன்றி ஆயில்யன்
நன்றி ராமலஷ்மி மேடம்

சந்தனமுல்லை said...

:-(

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த உறுத்தல் எல்லா செயல்களிலும் தலை காட்டுகிறது.

என் பெண்ணுக்கு வளையல் எடுக்கிறேன். ஆனால் என் அம்மாவிற்கு செயின் எடுக்க முடியவில்லை. இதை என்ன சொல்லலாம்.

நாம் பொறுப்பான பெற்றோராக யோசிப்பது போல், பெற்றோரின் பொறுப்பான பிள்ளைகளாகவும் யோசித்திருக்க வேண்டும் என்று மனதை உறுத்துகிறது
செயல்படுத்துகிறேன். நல்ல வழிகாட்டி பதிவு.

எதிர்பாரா இழப்பிற்கு அஞ்சலிகள் / அனுதாபங்கள்

அமுதா said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.