என் மேகம் ???

Thursday, November 13, 2008

இனிதாகத் தொடங்கட்டும் காலை...

குழந்தைகளைக் காலையில் எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்புவது ஒரு பெரிய வேலை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் தான் விடியும். குழந்தைகளைப் பொறுத்தும் உள்ளது. சின்னவள் காது பட "என் பொண்ணு தங்கம், அம்மா கேட்கறதுக்கு முன்னாடி பல் தேச்சுட்டு பால் எங்கேனு கேட்பாள்" என்றால் போதும், அடுத்த நிமிடம் சொன்னது நடக்கும். பெரியவளுக்கு இதெல்லாம் "ஜுஜுபி". எவ்ளோ பார்த்திருக்கிறோம் நாங்க என்று, கெஞ்சினால் மிஞ்சும் டைப்.

காலையில் எழும் பொழுதே காலை வேலைகளின் திட்டத்தை ஒத்திகை பார்க்கும் நான், குழந்தைகளை எழுப்பும் விதம் பற்றி ஆழ்ந்து யோசித்தது கிடையாது. நேரம் இருந்தால் கொஞ்சல், கெஞ்சல் இல்லாவிட்டால் மிரட்டல் என்று தான் ஓடும்.

சமீபத்தில் தோழி ஒருவர் "எனக்கு குழந்தைகள் காலையிலேயே சிரித்தபடி எழுவது தான் பிடிக்கும். எனவே முடிந்தவரை மிரட்டாது எழுப்ப பார்ப்பேன் என்றார்" என்றார். அட, நாம் ஏன் யோசிக்கவில்லை என்று தோன்றியது. ஒரே டெக்னிக்கிற்கு எல்லா நாளும் சிரித்து எழ வைக்க அவர்கள் என்ன சாவி கொடுத்த பொம்மைகளா? அதன் பிறகு ஆழ்ந்து கவனித்ததில் , பள்ளியில் ஏதேனும் சுவாரஸ்யமான பிக்னிக் செல்வது என்றால், புதிதாகக் பள்ளிக்கு ஏதேனும் கொண்டு செல்ல வேண்டி இருந்தால் அவர்களாகவே சுறுசுறுப்புடன் எழுந்து விடுகிறார்கள் என்பதை.

எனவே நமது வேலை அந்த மாதிரி ஏதேனும் செய்வது. சில சமயம் அம்மாவை ஆச்சர்யப்படுத்த என்று நான் வாக்கிங் சென்று வருவதற்குள் ரெடி ஆவார்கள். சின்ன சின்ன டெக்னிக் கூட வேலை செய்தது. சும்மா போய் தட்டி எழுப்பாது "கிச்சு கிச்சு" மூட்டுவேன். அவர்கள் எழும் வரை விட மாட்டேன். சிரித்து சிரித்து அவர்கள் எழும் பொழுது சுறுசுறுப்பும் சேர்ந்து இருக்கும். சில சமயம், ஒரு வாழ்த்து அட்டை பண்ணனும், சீக்கிரம் பாலைக் குடிச்சிட்டு பண்றியா என்றால் ஆவலாக ஓடி வருவார்கள்.

இப்பொழுது எல்லாம் முடிந்த வரை அவர்கள் சிரிப்புடன் எழ வைக்கவே முயற்சிக்கிறேன். என்ன கொஞ்சம் டெக்னிக் யோசிக்க வேண்டி உள்ளது, ஆனால் முயற்சி வெற்றி பெற்றால், எரிச்சல் இல்லாது சிரிப்புடன் எழும்பொழுது மனம் நிம்மதியாக உள்ளது; இனிதாகத் தொடங்குகிறது காலை...

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்.


முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்

9 comments:

butterfly Surya said...

நல்ல {IDEA}பதிவு..

வாழ்த்துக்கள்..

சூர்யா
சென்னை

butterfly Surya said...

உங்கள் குட்டிஸ்களுக்கு
"குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"

சூர்யா

அமுதா said...

வருகைக்கும் , கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சூர்யா.

Unknown said...

மிக அருமை.

அழுதுகொண்டு எழுந்தால் அது அனைவருக்குமே பேட் மார்னிங் தான்.

குழந்தைகள் ஆனந்தமாய் எழுந்திருக்க இன்னொரு வழியும் இருக்கு.

சீக்கிரம் தூங்கப்பழக்குதல். போதிய தூக்கம் இல்லாததால் தான் காலையில் எழ மனமில்லாமல் அதிக நேரம் தூங்குகிறார்கள்.

butterfly Surya said...

நன்றி..

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

//பள்ளியில் ஏதேனும் சுவாரஸ்யமான பிக்னிக் செல்வது என்றால், புதிதாகக் பள்ளிக்கு ஏதேனும் கொண்டு செல்ல வேண்டி இருந்தால் அவர்களாகவே சுறுசுறுப்புடன் எழுந்து விடுகிறார்கள் என்பதை.//

ஹாஹா, இதில் மட்டும் எந்தக் குழந்தையும் விதி விலக்கல்ல.

அமுதா said...

/*சீக்கிரம் தூங்கப்பழக்குதல்.*/
உண்மை தான். நன்றி புதுகை தென்றல்.


நன்றி ராமலஷ்மி மேடம்

butterfly Surya said...

சீக்கிரம் தூங்க பழகுதல்..மிக நல்லது.. அதுமட்டும் இல்லாமல் அன்றாடம் அவர்கள் பள்ளியில் என்ன நடந்தது ?? How was the day ?? என கலந்து பேசிவிட்டால் {They feel quite relaxed} உடனே தூங்கி விடுகிறார்கள்.. அனுவத்தில் கண்டது...

தமிழ் அமுதன் said...

ஆனா! சனி, ஞாயிறு பாருங்க
பிள்ளைங்க காலைல ஆறு மணிக்கெல்லாம்
முழிச்சுடுதுங்க ஸ்கூல் நாள்தான்!
நல்லா தூங்குறது!