என் மேகம் ???

Friday, November 21, 2008

தாய்மை என்றோர் உணர்வு...

அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். "அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.

9 comments:

ராமலக்ஷ்மி said...

//"உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.//

தாய்மை என்பது உன்னதமானது. உண்மைதான் என எங்களையும் சொல்ல வைக்கிறது பதிவு. வாழ்த்துக்கள் அமுதா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம், நல்லா இருக்கு குட்டிக்கதை.

அமுதா said...

நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி அமித்து அம்மா

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு கதை!

அமுதா said...

நன்றி முல்லை

தமிழ் அமுதன் said...

நல்லா எழுதி இருக்கீங்க!

நள்ளிரவில் குழந்தை அழுதால்
தாய்க்கு முன்னர் விழித்து கொள்ளும்
தகப்பன்களும் உண்டு!!

தமிழ் தோழி said...

தாய்மை என்பது வரையருக்க முடியாதது.உங்கள் சிறுகதை அருமை.
வாழ்த்துக்கள் அமுதா.

நட்புடன் ஜமால் said...

simply superb.

Dhiyana said...

ரொம்ப நல்லா இருக்கு அமுதா... வாழ்த்துக்கள்.