
புதுகைத் தென்றலின், தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, வாரத்திட்டம் -6 பார்த்து, நம்மளும் ஒரு சூப் ரெசிபி போடலாம்னு பார்க்கிறேன். ரெசிபினு ஒண்ணு போடறது இதான் முதல் முறை. படம் எல்லாம் இல்லை, இந்த ஞாயிற்றுக்கிழமை செய்தால் ஃபோட்டோ புடிச்சு போடறேன்.
எங்கள் ஊரில், உடம்பை கொஞ்சம் தேற்ற வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டால் போதும், தினம் ஒரு வகை என எலும்பு சூப், ஆட்டுக்கால் சூப், நாட்டுக்கோழி சூப் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள். சைவத்தை விட அசைவ சூப் ரொம்ப சிம்பிள் வேலை போல் எனக்கும் ஒரு ஃபீலிங். இங்கே கொடுத்து இருக்கும் ரெசிபியை ஆடு/கோழி வகையறா சூப்பிற்கு உபயோகிக்கலாம்.
தேவையானவை:
நெஞ்செலும்பு - கால் கிலோ
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்றவாறு
அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
அலங்கரிக்க
கொத்துமல்லி நறுக்கியது சிறிதளவு
செய்முறை:
முதலில் அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நெஞ்செலும்பைச் சேர்த்து சற்று வதக்கிவிட்டு, 4 தம்ளர் தண்ணீரும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். குக்கரில் 4 விசில் வந்த பின்பு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும் (கோழி என்றால் 4 விசிலே போதும்). தேவை என்றால் சிறிது கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். நன்கு கலந்து, கொத்துமல்லி தூவி பறிமாறவும்.
7 comments:
//கோழி என்றால் 4 விசிலே போதும்//
ரசித்தேன்! :)
கொஞ்சம் ''அஜினோமோட்டோ''
சேர்த்தா இன்னும் நல்லா இருக்குமாம்.
இந்த குளிர்காலத்துக்கேற்ற பதிவாத்தான் போட்டிருக்கீங்க.
இதப்பாத்து நான்கூட ஒரு சில்லி சிக்கன் ரெசிப்பி போடலாம்னு இருக்கேன்.
intha postukana linkai thamil valaipoo thiratiyil podunga. nandri
ajinomotto not good for health
நன்றி
தங்கமணி இனிமே நான்வெஜ் கெடயாது அப்படின்னு சொல்லிட்டாங்க, இப்ப போயி எலும்பு சூப்ப ஞாபகப்படித்திட்டீங்களே
Post a Comment