குழந்தைகள் பேசுவது இனிமை. அவர்கள் தாய்மொழி பேசினாலே புரியாது, ஆனால் இனிக்கும். மழலை மாறாத என் மகள் ப்ரீ-கேஜியிலிருந்து எல்.கே.ஜி செல்லும் பொழுது கூறியது "நான் இங்கலீஷ் கத்துக்கப் போறேன்" என்பதே (சுட்டி டி.வி வழியாக அவங்க தமிழ் நல்லாவே கத்துகிட்டாங்க :-)). மேடம் இப்ப "டாக் இங்கலீஷ்" என்றால், ஒரு டேப்பை ஓட்டுவார்கள். ஒன்றும் புரியாது. ஆனால் "accent" மட்டும் இருக்கும். தமிழ் பேசுவது போல் இருக்காது. இதோ அவள் ஆங்கிலம் (அவளைப் பேச வைக்க நடு நடுவே எழும் குரலை மன்னிக்கவும்)
6 comments:
ஹஹ்ஹா...ரொம்ப நல்லா இருக்கு!!
பப்புவுக்கு அக்கா போல இருக்கே!! அவளும் இப்படிதான் பேசுவா..அவங்க ஸ்கூல்ல யாராவது வீட்டுல் ஆங்கிலத்துல பேசுங்கன்னு சொன்னாங்களேன்னு நான் ஏதாவது சொன்னா, இப்படிதான் இருக்கும் அவளோட பதிலும்!! நான் ரொம்ப கவலைப்பட்டேன்..ஆனா இப்போ இல்லை..பப்பு மட்டும்தானோன்னு!! :-)) kids are always kids!!
ஆனாலும் கொஞ்சம் மிரட்டூறீங்க நீங்க..;-)) ஆயில்ஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!
நன்றி முல்லை. அவள் அக்கா நந்தினியும் இப்படி தான் இங்கலீஷ் பேசுவாள். வீட்ல இங்கலீஷ் பேசுங்கனு சொன்னதை எல்லாம் நாங்க கண்டுக்கலை. ஸ்கூல்லயே கத்துக்கட்டும் என்று விட்டு விட்டேன். அதே போல் நந்து கற்றுக் கொண்டாள். அய்யோ.. நான் மிரட்டலைப்பா. சாதாரணமாக பேசினாலே இப்படித்தான்.
super
ரொம்ப நல்லா இருக்கு...
//அய்யோ.. நான் மிரட்டலைப்பா. சாதாரணமாக பேசினாலே இப்படித்தான்.//
என் குரலை கேட்கிறவங்க கூட மிரட்டுறேன் என சொல்லுவாங்க..
\\
ஆனாலும் கொஞ்சம் மிரட்டூறீங்க நீங்க..;-)) ஆயில்ஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!
\\
அண்ணே உங்களை கூப்பிட்டிருக்காங்க....:)
\\
ஆனா இப்போ இல்லை..பப்பு மட்டும்தானோன்னு!! :-)) kids are always kids!!
\\
ரிப்பீட்டு....:)
Post a Comment