என் மேகம் ???

Wednesday, November 5, 2008

சின்ன சின்ன கேள்விகள்???

"ஏம்மா எப்ப பார்த்தாலும் என்னையே சொல்ற?", பெரியவளின் கேள்வி. "நீ பெரியவள், அதனால் நீ தான் விட்டுக்கொடுக்க வேண்டும்", என்றவுடன் சின்னவளிடம் பெரியவளின் முணுமுணுப்பு , "இன்னும் கொஞ்ச நாளில் நீயும் பெரியவள் ஆவ, நீயும் அம்மாட்ட திட்டு வாங்குவ". (எவ்வளவு வளர்ந்தாலும் சின்னவள் சின்னவளாகத் தான் இருப்பாள் என நான் கூறியது அவளுக்குப் புரியவில்லை)

******************************

திடீரென்று ஒரு நாள் என் சுட்டிப் பெண் , "அம்மா எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க?" என்றாள். திரு திரு என்று விழித்து "ஏன்" என்றோம். "அப்ப தான் நிறைய கிப்ட் கிடைக்கும்" என்றாள். (ஓ... பரிசுகளின் உண்மை விலை தெரியும் வரை இப்படியே கவலை இன்றி இரு பெண்ணே...)

***********
"அப்பா, நான் பெரியவள் ஆகி என்ன செய்யப் போறேன்?"
"நல்லா படிச்சா எங்களை மாதிரி கம்ப்யூடர்-ல வேலை பண்ணலாம்".
(படிக்காட்டி நிறைய சாய்ஸ் என்று அவரும் கூறவில்லை... அவளும் கேட்கவில்லை...)
*********************************
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து "பூவா தலையா" விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அருகில் வந்து, "அம்மா, ஒரு ரூபாய்ல ஒண்ணும் பண்ண முடியாது தானே?" என்றாள். சாக்லேட் வாங்கலாம் என்பது தவிர என்ன பதில், ஏன் இந்த கேள்வி என்று யோசித்துக் கொண்டே, சட்டென்று நினைவு வர, "வெய்ட் பார்க்கலாம்" என்று பதில் கூறினேன். அவளுக்கு எடை பார்ப்பது பிடிக்கும். சற்று நேரம் தேடி ஒரு ரூபாய் நாணயத்தைக் கையில் கொடுத்த பொழுது புரிந்தது, "தொலைந்த நாணயம் தேட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியில் உதித்த கேள்வி" என்று.
****************************
மாமாவின் குட்டிப்பயலோடு விளையாடிக் கொண்டிருந்தாள். என்னடா செல்லம்... தம்பி உன்னையே பார்க்கிறான் பாரு என்றவுடன், வெட்கப் பார்வை. சற்று நேரம் கழித்து... "நான் ஆரஞ்ச் ட்ரெஸ் போட்டது தான் தம்பிக்கு ரொம்ப புடிச்சிருக்கு... அதனால் இனி நான் ஆரஞ்ச் ட்ரெஸ் தான் போடுவேன். ஏம்ப்பா, நான் பெரியவள் ஆனால் என்ன ட்ரெஸ் போட்டால் தம்பிக்கு பிடிக்கும்?" (குட்டீஸ் உலகத்தில இது எத்தனை பெரிய பிரச்னை? நீ எது போட்டாலும் பிடிக்கும்டா செல்லம்...)
*************************

10 comments:

புதுகைத் தென்றல் said...

பிள்ளைகளை வளர்ப்பதை பாக்கியமாக கருதும் இந்தத் தலைமுறையினர் நாம் பி்ள்ளைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கிறோம்.

பாராட்டுக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தைகளின் உலகமும், அதன் கேள்விகளும் தரும் சுகம் அலாதிதான். உண்மையில் நமக்கு மிகப் பொறுமை வேண்டும், அவர்களின் கேள்விக்கு அழகாய் பதில் சொல்ல. நீங்கள் நல்லாவே பதிலிட்டு இருக்கிறீர்கள்.


"இன்னும் கொஞ்ச நாளில் நீயும் பெரியவள் ஆவ, நீயும் அம்மாட்ட திட்டு வாங்குவ".
ம் என்ன சொல்றது.,

அம்மா எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க?" என்றாள். திரு திரு என்று விழித்து "ஏன்" என்றோம். "அப்ப தான் நிறைய கிப்ட் கிடைக்கும்" என்றாள்
:)))))))

தொலைந்த நாணயம் தேட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியில் உதித்த கேள்வி" என்று.
:))))))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

குழந்தைகளின் உலகம் தனிதான் அக்கா.

அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது மிக கடினம்....

அமுதா said...

நன்றி புதுகை தென்றல், அமித்து அம்மா & சுடர்மணி

ராமலக்ஷ்மி said...

குழலினிது யாழினிது:)!

ஜீவன் said...

என் அஞ்சு வயசு பொண்ணு : அப்பா மாடு
எப்படிப்பா பால் கொடுக்குது?

நான்: ராத்திரில ரொம்பநேரம் முழிச்சுகிட்டு
தொண,தொணன்னு பேச கூடாது!
பேசாம தூங்கு காலைல ஸ்கூல் போகணும்.


சில கேள்விகள எப்படி சமாளிக்குறதுன்னே
தெரியல!

தீஷு said...

//குட்டீஸ் உலகத்தில இது எத்தனை பெரிய பிரச்னை??

வேற பிரச்சனை இல்லாத உலகம்... வளராமலே இருந்திருக்கலாம் என எனக்கு அப்ப அப்ப தோனும்

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி தீஷு அம்மா


ஜீவன், ஏதாவது சொல்லி சமாளிங்க. பதில் சரியாக் சொல்லவில்லை என்றால் உங்களிடம் கேள்வி கேட்க தயங்குவார்கள்.

ஆயில்யன் said...

//
திடீரென்று ஒரு நாள் என் சுட்டிப் பெண் , "அம்மா எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க?" என்றாள். திரு திரு என்று விழித்து "ஏன்" என்றோம். "அப்ப தான் நிறைய கிப்ட் கிடைக்கும்" என்றாள். (ஓ... பரிசுகளின் உண்மை விலை தெரியும் வரை இப்படியே கவலை இன்றி இரு பெண்ணே...//

நானும் கூட இப்படித்தான் ஒரு நாள் கேட்டேன்! அடிசெருப்பாலன்னுட்டாரு எங்க அப்பா! (அவ்ளோ தப்புங்களா??)

ஒரு வேளை வாழ்க்கையின் உண்மை நிலை புரியும் வரை இப்படியே கவலை இன்றி இருடான்னு ஃபீல்பண்ணியிருப்பாரோ?????

:)))))))))))))))))))))

அமுதா said...

/*நானும் கூட இப்படித்தான் ஒரு நாள் கேட்டேன்! அடிசெருப்பாலன்னுட்டாரு எங்க அப்பா! (அவ்ளோ தப்புங்களா??)*/
சொல்றதோட விட்டாரேனு சந்தோஷப்படுங்க...