என் மேகம் ???

Tuesday, November 25, 2008

அது ஒரு மழைக்காலம்




மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...


முறுக்கைக் கொறித்தபடி, பாடல் பாடி, கையில் கிடைத்த காகிதமெல்லாம் படகாக மாறிய மழைக்கால நினைவுகள் மனதை நனைக்கின்றது. இன்று, என்னருகே என் பெண்கள் "மழையே மழையே சீக்கிரம் போயிடு..." என்று டோராவைப் பாடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு நாள் குடை கொண்டு போகாது வெளியே சென்றிருந்தோம். லேசாகத் தூறியது மழை.

"அம்மா, மழை பெய்யுது, வா காருக்குப் போகலாம்" என்றனர் குட்டீஸ்.
"ம்... கொஞ்சம் மழையில நனைஞ்சு தான் பாருங்களேன்" என்றேன் நான்.
"நீ தானேம்மா மழைல நனைஞ்சா சளி பிடிக்கும்னு சொல்லுவ?"
"ம்... அப்புறம் மழையை அனுபவிக்கத் தெரியாமல் போய்டும். அதனால லேசா தூறும் வரைக்கும் கொஞ்சம் நனைவோம்...நாங்கள்ளாம் என்ன பாடுவோம் தெரியுமா? "மழை வருது, மழை வருது...."

சுகமாக இருந்தது அந்த தூறல்.

22 comments:

சந்தனமுல்லை said...

:-)

புதுசா இருக்கு..இந்த பாடல்!

ஏர் ஓட்டுற மாமனுக்கு எடுத்து வைங்க
சும்மா இருக்குற மாமனுக்கு சூடு
வைங்க - அப்படின்னுதான்
கேள்விப்பட்டிருக்கேன்! டிப்ரண்ட் வெர்ஷன்..:-) ஒருவேளை உழைப்பை/விவசாயத்தை கொண்டாறத்துக்காகவும் இப்படி இருந்திருக்கலாம் வரிகள்!

ராமலக்ஷ்மி said...

அய்யோ பாவமுங்க அந்த தேடாத மாப்பிள்ளை:))))!

நல்ல அனுபவம் கற்றுக் கொடுத்தீர்கள் குட்டீஸுக்கு:)!

அமுதா said...

/*ஒருவேளை உழைப்பை/விவசாயத்தை கொண்டாறத்துக்காகவும் இப்படி இருந்திருக்கலாம் வரிகள்*/
நன்றி முல்லை. இருந்திருக்கலாம்...

அமுதா said...

நன்றி இராமலஷ்மி மேடம்.

/*நல்ல அனுபவம் கற்றுக் கொடுத்தீர்கள் குட்டீஸுக்கு:)!*/
இயற்கையைக் கண்டு மிரளக் கற்றுக்கொடுத்து விட்டோமோ என்று தோன்றிய பயத்தில் அன்று மழையை இரசிக்க கற்றுக் கொடுத்தேன் :-)

ராமலக்ஷ்மி said...

சந்தனமுல்லை said...
//சும்மா இருக்குற மாமனுக்கு சூடு
வைங்க -//

அப்போ ‘தேடாத’ மாப்பிள்ளை என்பதற்கும் பொருள் தேட விழையாமல் வெட்டியா உட்கார்ந்திருக்கும் மாப்பிள்ளைக்கு எனக் கொள்ளலாமா?

ராமலக்ஷ்மி said...

ஆமாங்க கண்டிப்பா ரசிக்கக் கற்றுக் கொடுக்கணும். நாமதான் உடல் நலம் சுகாதாரம்னு பல நேரங்களில் அவர்களின் இயல்பையே மாற்றி விடுகிறோமோ எனத் தோன்றும்.

ஆயில்யன் said...

கொஞ்சம் மழையில் நனையலாம்!

இயற்கை தரும் விசயங்களில் என்றுமே துன்பம் நிறைந்திருப்பதில்லை!

ஆயில்யன் said...

பாட்டு வேற மாதிரியும் நான் கேட்டதுண்டு!

//மழை வருது மழைவருது
நெல் அள்ளுங்கோ
முக்காப்படி அரிசிபோட்டு
முறுக்கு சுடுங்கோ
ஏறி வர மாமனுக்கு
எடுத்து வையுங்கோ
சும்மா இருக்கற மாமனுக்கு
சூடு வையுங்கோ!
//

ஒருவேளை ஊருக்கு ஊரு வித விதமான வரிகள் போட்டு பாடியிருப்பாங்க போல!

Uma said...

மழையில் நனைவது போன்ற சின்ன சின்ன ஆசைகளை அனுபவிக்க கற்றுத் தர வேண்டும்

தமிழ் அமுதன் said...

///ஏர் ஓட்டுற மாமனுக்கு எடுத்து வைங்க
சும்மா இருக்குற மாமனுக்கு சூடு
வைங்க - அப்படின்னுதான்
கேள்விப்பட்டிருக்கேன்!///


நானும் இப்படித்தான் கேள்வி பட்டு இருக்கேன்!

எனக்கும் மழைல நனைய ரொம்ப
புடிக்கும் ஆனா அப்போ இடி இடிக்க கூடாது!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏர் ஓட்டுற மாமனுக்கு எடுத்து வைங்க
சும்மா இருக்குற மாமனுக்கு சூடு
வைங்க

ரிப்பீட்டேய்
நானும் இப்படிதான் பாடியிருக்கேன்.
கொஞ்சம் மப்பும் மந்தாரமும் இருந்ந்தாப் போதும், எல்லாரும் கைய கோத்துக்கிட்டு பாட ஆரம்பிச்சுடுவோம்.

எனக்கு எங்கம்மா சொல்லித்தந்தாங்க.//
இப்படி சொல்லிக்கத்தான் எவ்வளவு பெருமையா இருக்கு. இல்ல. இப்ப

ரொம்ப சுகமான கற்றுக்கொடுத்தல்.
ரம்யமான சூழ்நிலை, அருமையான அம்மா
அழகான பிள்ளைகள்
திருஷ்டி சுத்தி போடுங்க உங்க குடும்பத்துக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏர் ஓட்டுற மாமனுக்கு எடுத்து வைங்க
சும்மா இருக்குற மாமனுக்கு சூடு
வைங்க - அப்படின்னுதான்
கேள்விப்பட்டிருக்கேன்! டிப்ரண்ட் வெர்ஷன்..:-) ஒருவேளை உழைப்பை/விவசாயத்தை கொண்டாறத்துக்காகவும் இப்படி இருந்திருக்கலாம் வரிகள்!

யப்பா பப்பு ஆன்ட்டி
நல்லா ஆராய்ச்சி பண்றாங்கோ

Sanjai Gandhi said...

//மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...//

வாவ்.. அது ஒருக் கனாக் காலம்.. மறந்தே போச்சி.. கிராமப் புறங்களில் இது போல எவ்ளோ பாடல்கள்.. எல்லாம் கேலியும் கிண்டலுமாய் மொத்த வரிகளும் மனப்பாடமாய் இருக்கும்.. இப்போ எல்லாம் மறந்துப் போச்சி.. :(

ஆனா இந்த வரிகள்ல எதோ மாற்றம் தெரியுது..

RAMYA said...

//
மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...
//

சூப்பரா எழுதி இருக்கீங்க அமுதா. கிராமத்து மனம் வீசும் பாடல் வரிகள் மனதை வருடி கொண்டே சென்றது. அஹா என்ன அருமையான வரிகள். நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க.

தேடி வந்த மாப்பிள்ளைக்கு எண்ணி வைங்க தேடாத மாப்பிள்ளைக்கு சூடு போடுங்க...

suuuuuuuuuuuuuuper
repeeeeeeeeeeeeettu

அமுதா said...

முல்லை... சும்மா கலக்கறீங்க. அமித்து அம்மா சொனன மாதிரி "நல்லா ஆராய்ச்சி பண்றீங்கோ"

வாங்க ஆயில்யன். ரொம்ப நன்றி.

அமுதா said...

நன்றி உமா
நன்றி ஜீவன்
நன்றி அமித்து அம்மா
நன்றி சஞ்சய்
நன்றி ரம்யா

அமுதா said...

எல்லாரும் "ஏர் ஓட்டற மாமனுக்கு..." என்று கூறியதால், என் பெண்களுக்கு அப்படியே சொல்லிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாங்க பாடினதை விட இது கருத்து சொல்ல நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...\\

ஆகா ஆகா ஆகா (பருத்திவீரன் styleல படிங்க).

அந்த நாள் ஞாபகம் நெஞிலே வந்ததே

அமுதா said...

நன்றி ஜமால்..

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
பாட்டு வேற மாதிரியும் நான் கேட்டதுண்டு!

//மழை வருது மழைவருது
நெல் அள்ளுங்கோ
முக்காப்படி அரிசிபோட்டு
முறுக்கு சுடுங்கோ
ஏறி வர மாமனுக்கு
எடுத்து வையுங்கோ
சும்மா இருக்கற மாமனுக்கு
சூடு வையுங்கோ!
//

ஒருவேளை ஊருக்கு ஊரு வித விதமான வரிகள் போட்டு பாடியிருப்பாங்க போல!

//

எங்க ஊர்லையும் இப்படி தாங்க சொல்லி கொடுத்தாங்க..

அன்புடன் அருணா said...

இவையெல்லாம் பொத்திப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷ உணர்வுகள்....என் உணர்வுகளை எழுதியது போல இருந்தது.
அன்புடன் அருணா

அமுதா said...

வருகைக்கு நன்றி அருணா
வருகைக்கு நன்றி பூர்ணிமா