என் மேகம் ???

Tuesday, December 16, 2008

அழகான வேஷதாரியே...பூக்களுக்கு மேக்கப் போடணுமா, அதன் அழகை ரசிக்க? குழந்தைகளுக்கு வேஷம் போடணுமா அவர்களை ரசிக்க? என்றாலும், இந்த சுட்டீஸ் வேஷம் போட்டாலும் போடாவிட்டாலும் அழகு தான்.நந்தினி ப்ரீ-கேஜி போகும்பொழுது , நல்லா குறள் சொல்லுவானு, திருவள்ளுவர் வேஷம் போட கூட்டிட்டு போனால், சேலை கட்டி அம்மனாகணும்னு அடம். அம்மனுக்கு ஒரே கிராக்கி, கிடைக்கலை. அப்புறம் அவங்க கிருஷ்ணரா தான் வருவேன்னுட்டாங்க. இப்படி அவங்க இஷ்டத்துக்கு போட்டால் தானே அவங்க சிரிப்பாங்க... அழ வைக்கவா வேஷம் போடறோம்?


கொஞ்ச நாள் முன்னாடி தான் யாழினிக்கு "முட்டைகோஸ்" வேஷம் போடச் சொன்னாங்க. இந்த மேடம், கிருஷ்ண ஜெயந்திக்கு அழகா கிருஷ்ணர் வேஷம் போட்டால், ஒரு ஃபோட்டோ எடுக்கறதுக்குள்ள, எல்லாத்தையும் கலைச்சுட்டு சிரிப்பாங்க. இவங்களை எப்படி முட்டைகோஸ் ஆக்கறதுங்கற கவலையை, எங்கே ட்ரெஸ் கிடைக்குங்கற கவலை மறக்க வச்சது. திருவான்மியூர்ல இருந்து மைலாப்பூர், ஐஸ் ஹவுஸுனு சுத்தி, வடபழநில பிடிச்சேன். (பேசாமல் அடையார்ல ஒரு கடை ஆரம்பிச்சரலாமானு யோசிக்கிறேன்...)வேஷம் போடற நாள் வந்துச்சு. அம்மாடி, அழகழகா பட்டாம் பூச்சியா, குட்டீஸ்... பூ, வண்டு, தேவதை, முயல், மயில், காய்கறி, பழம் ... எல்லாம் அவங்க தான். இந்த அம்மா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை டாய்லட் போற ஆளு , என்ன செய்வாங்களோனு, கடைசி நிமிஷம் தான் டிரஸ்சை போட்டு விட்டோம். இங்கே ,எங்களுக்கு ஒரே டென்ஷன் டிரஸ் குத்துமோ, வேர்க்குமோ, டாய்லட் போக வேண்டி இருக்குமோ, தாகமா இருக்குமோ, பசிக்குமோ அப்படி இப்படினு நல்லா பண்ணணுனங்கிற கவலை தவிர எல்லா கவலையும். பாருங்க, கிட்டதட்ட முக்கால் மணி நேரம் காத்திருந்து மேடையில பண்ணிட்டு ஓடிவராங்க. அவங்களுக்கு ஒரே சந்தோஷம். அடுத்த நிமிஷம் ட்ரெஸ் கழட்டியாச்சு.

அப்பாடானு இருந்தது. இப்பல்லாம் ஏதாவது நிகழ்ச்சிக்கு தேர்வு பண்ணிணாலும் சந்தோஷமா இருக்கு, தேர்வு பண்ணாட்டியும் சந்தோஷமா இருக்கு (அலைச்சலும் டென்ஷனும் மிச்சம்). வர வெள்ளிக் கிழமை மேடம் ஸ்கூல்ல ஏரோப்ளேன் ஓட்டணுமாம் ;-).

உங்க பிள்ளைங்களுக்கு வேஷம் போட உடை வாங்க சென்னையில் சில கடைகள் இங்கே...

11 comments:

நட்புடன் ஜமால் said...

புகைப்படங்கள் அருமை

மீதம் படித்துவிட்டு ...

நட்புடன் ஜமால் said...

\\பூக்களுக்கு மேக்கப் போடணுமா, அதன் அழகை ரசிக்க? குழந்தைகளுக்கு வேஷம் போடணுமா அவர்களை ரசிக்க? என்றாலும், இந்த சுட்டீஸ் வேஷம் போட்டாலும் போடாவிட்டாலும் அழகு தான்.\\

குழந்தை என்றாலே அழகுதானே

ரிதன்யா said...

என் பொண்ணு நல்லா டான்ஸ் பன்றதால அவங்க வகுப்பில அவங்கள முன்னால் நிறுத்திடுவாங்க. அதனால் ஆடை தனியா இருக்கும்.

ம் அது ஒரு சுகமான அனுபவம்

சரவணகுமரன் said...

அழகு...

சந்தனமுல்லை said...

எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த முதல் படம்..எவ்ளோ கலர்புல்லா, தலைவர்கள், சாமிங்கள்ளாம் கேஷுவலா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க!! lol

ஆயில்யன் said...

//வர வெள்ளிக் கிழமை மேடம் ஸ்கூல்ல ஏரோப்ளேன் ஓட்டணுமாம் ;-).
///


அடேங்கப்ப்ப்ப்பா! :)))

நல்லா பார்த்து கவனமா பொறுமையா ஓட்ட சொல்லுங்க !

அமிர்தவர்ஷினி அம்மா said...

அடேங்கப்பா இவ்ளோ சின்ன வயசிலயே பைலட் ஆகியாச்சா,

கங்க்ராஜீலேஷன்ஸ்.

அம்மனும் அழகு, முட்டைகோசும் அழகு. இப்படிக்கூட ட்ரஸ் இருக்கா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் போட்டோல சூலமெல்லாம் வெச்சுக்கிட்டு அழகா போஸ் குடுக்கறாங்க.

ராமலக்ஷ்மி said...

//எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த முதல் படம்..எவ்ளோ கலர்புல்லா, தலைவர்கள், சாமிங்கள்ளாம் கேஷுவலா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க!!//

அதே அதே:)))!!

ஏரோப்ளேன் எப்படி ஓட்டினாங்க என்பதையும் கண்டிப்பா பதிவிடுங்க.

படங்கள் அருமை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பூக்களுக்கு மேக்கப் போடணுமா//ரைட்............

தமிழ் அமுதன் said...

ஒரே செடில பல விதமான
பூக்கள் பூத்தா எப்படி இருக்கும் ?

அப்படி இருக்கு அந்த முதல்
போட்டோ!