என் மேகம் ???

Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Tuesday, February 17, 2009

இரத்தம் - மின்னஞ்சலில் வந்த சில தகவல்கள்

இந்த பதிவில் உள்ள சுட்டிகளைக் குறித்துக் கொள்ளுங்கள். என்றேனும் யாருக்கேனும் பயன்படும். இவை மின்னஞ்சலில் வந்த தகவல்கள்

1. BLOOD to 9600097000 - BLOOD DONOR WILL CALL U

2. சுட்டிகள்
http://www.indianblooddonors.com/
http://www.bharatbloodbank.com/
http://www.chennai-madras.com/emergencynumbers/bloodbanks.htm
http://www.friendstosupport.org


3. இரத்த வகையைப் பற்றி சில தகவல்கள்:

இரத்தவகை - மக்களிடம் இருக்கும் சதவீதம்

O + ...... 40 %
O - ...... 7 %
A + ...... 34 %
A - ...... 6 %
B + ...... 8 %
B - ...... 1 %
AB + ...... 3 %
AB - ...... 1 %


என் அனுபவம்:
மீட்டிங் செல்லும் அவசரத்தில் இருந்த பொழுது எட்டிப்பார்த்தது இரத்தம் வேண்டி ஒரு மின்னஞ்சல். வந்து பார்ப்போம் என்று தலைகாட்டிய எண்ணத்தை மாற்றி "forward" என்று அனைவருக்கும் அனுப்பிவிட்டு சென்று விட்டேன்.

மின்னஞ்சல்கள் நிறைய மக்களைச் சென்றடைவதாலும், இரத்த தானம் பற்றிய விழிப்புணர்ச்சி உள்ளதாலும், இரத்தம் கிடைப்பது எளிதென்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.

அன்று ஐந்து மணிக்குள் நான்கு யூனிட் இரத்தம் கிடைத்தால் மறுநாள் அறுவை சிகிச்சை நடக்கும் என்பது நிலை. AB+ இரத்தம் நான்கு யூனிட் தேவைப்பட்டது. இரத்த வங்கிகளில், நமக்கு நான்கு யூனிட் இரத்தம் தேவை என்றால், நான்கு பேர் இரத்ததானம் செய்தபின் வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில், ஒருவருக்கு இரத்தம் கொடுக்க எண்ணம் இருந்தது என்றாலும், அவர் இருந்தது தேவைப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில். எனவே வந்து கொடுக்க இயலவில்லை. என் அலுவலகத்திலிருந்து ஒருவர் சென்றார். இரத்ததானத்திற்காக இரத்தத்துடன் தங்கள் பொன்னான நேரத்தையும் செலவிடுபவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேற்சொன்ன சுட்டியில் இருந்து கிடைத்த எண்களில் சிலரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. சரியாக நான்கு மணி போல்தான் இரத்தம் கொடுக்க நால்வரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. இரத்தம் தேவைப்பட்டவர்கள் சின்ன நகரத்தில் இருந்து வந்ததால் அவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். இரத்தம் கிடைத்த பின் தான் அவர்கள் சற்று தெளிவு பெற்றனர். மின்னஞ்சலும், சுட்டிகளும் மிகவும் உதவின என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது.


இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை இயன்ற அளவு பயன்படுத்தி உதவுவோம். எனவே, முடிந்தால் இரத்ததானம் செய்யுங்கள், இல்லை என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை "forward" பண்ணுங்கள், இரத்தம் இன்னும் தேவைப்பட்டது எனில், யாரேனும் கொடுக்க வாய்ப்பு உள்ளது.