அழகான உலகம்
அன்பான மனிதர்கள்
சில தீயவர்கள்
பார்த்து இரு பாப்பா
என்று சொல்ல ஆசை...
என் சொல்வேன்?
அக்கம் பக்கம் பழகாதே
அசுரர்கள் உண்டு என்றா?
தலை நிமிர்ந்து சென்றால்
ஆயுதத்தால் தாக்குவார்கள் என்றா?
எனக்கு புரியவில்லை.. எவ்வயதில்
உன் கையை நான் விடுவேன்?
பதின் வயதில் என் அம்மா
வயிற்றில் நெருப்புடன் நின்றாள்
அப்படி இல்லை நான் என
பெருமை பேச வந்தேன்
பெற்றவுடன் கட்டிக்கொள்ள
எரிமலை கொடுக்கிறது சமூகம்
என்றாலும் பெண்ணே...
என்றென்றும் போராட்டமே!!
தலை நிமிர்ந்து வாழ்வோம்
தலை குனிந்து ஒதுங்கோம்!!!
தேவை தனிமனித ஒழுக்கம் என்றே...
ஓங்கி குரல் கொடுப்போம்!!!
அதீதம் #மகளிர் தின சிறப்புக் கவிதை. சுட்டி என் சொல்வேன்? - அதீதத்தில்