அவரவர்க்கு தான் தெரியும் இழப்பின் ஆழம். சின்ன சின்ன விஷயங்கள் இருக்கும் வரை தெரிவதில்லை. ஆனால் இனி கிடைக்கவே கிடைக்காது, அந்த முகத்தைப் பார்க்க முடியாது என்ற உணர்வில் தோன்றும் வலி அவரவர்க்கே தெரியும். வாழ்வின் பாதையில் போகப் போகத்தான் அதிகம் கடந்து செல்கின்றன வெற்றிடங்கள்....என்றாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
அதீதம் ஜனவரி 6, 2012 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்துள்ளது “காட்சிப்பிழை”
ஒவ்வொரு நொடியும்
ஏற்படுகின்றன
சில வெற்றிடங்கள்
ஒருவருக்கேனும்
நிரப்பவே இயலா
வெற்றிடமாக...
உறைந்து போன
கணங்களின்
நினைவுத்துளிகளாக
காலத்துடன்
கடந்து செல்கின்றன
வெற்றிடங்கள்
விடை காண நேரமின்றி
கடந்து போகின்றன
சில கேள்விகளும்
வெற்றிடம் நோக்கிய
பயணம் என்றாலும்
மறக்க வைக்கும்...
காட்சிப் பிழையாக
நீண்டு தெரிகிறது
வாழ்க்கை