என் மேகம் ???

Tuesday, January 27, 2009

தந்தை பாசம்



உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...

உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...

சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...

20 comments:

சந்தனமுல்லை said...

//பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ... //

மெத்தப் பிடித்தன இவ்வரிகள்!

அ.மு.செய்யது said...

//நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...//


அருமை அமுதா...

அழகான வரிகள்..

அ.மு.செய்யது said...

//உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ... //

தந்தையின் பாசத்தை வார்த்தைகளில் வார்த்தெடுத்தமைக்கு
நன்றிகளும் வாழ்த்துகளும்....

அப்துல்மாலிக் said...

தந்தை பாசம்...
தலைப்பே சொல்லுது பாசம்

அப்துல்மாலிக் said...

//என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...//

உண்மைதான்..
மறக்கமுடியுமா..

அப்துல்மாலிக் said...

//பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ... //

ஆஹ்... சொல்ல வார்த்தைகள் இல்லை..
ஒரு தந்தைக்குரிய வரிகள்..

நட்புடன் ஜமால் said...

\\உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...\\


இதுவே காதல்

தந்தையானாலும் சரி
காதலனாலும் சரி
கணவனாலும் சரி

நட்புடன் ஜமால் said...

\\நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...\\

மீண்டும் காதல்.

நட்புடன் ஜமால் said...

\\என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ... \\

நான் தந்தையான போது இந்த உணர்வு தான் எனக்கும்.

வார்த்தைகளில் வடிக்க தெரியவில்லை.

உங்களை போன்றோரின் வரிகளில் என் வலி உணர்ந்து வாழ்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...\\

ம்ம்ம் அருமை.

கவிதையும் இந்த வரிகளும்.

ராமலக்ஷ்மி said...

//சொல்லத் தேவையில்லை\\
ஆயினும் சொல்கிறேன்.
உன்னதமான உணர்வுதனை உயிர்ப்புடன் தந்திருக்கிறீர்கள்!

தமிழ் அமுதன் said...

ஒரு தாய், ஒரு தந்தையின் உயிருக்குள்ளும்,உணர்வுக்குள்ளும்

கூடுவிட்டு கூடு பாய்ந்து உணர்ந்து வடித்த கவிதை!

அனைத்து வரிகளும் நூறு சதவீதம் எனக்கும் பொருந்தும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜீவன் said...

ஒரு தாய், ஒரு தந்தையின் உயிருக்குள்ளும்,உணர்வுக்குள்ளும்

கூடுவிட்டு கூடு பாய்ந்து உணர்ந்து வடித்த கவிதை!//

வார்த்தைகளில்லாமல் வழிமொழிகிறேன் மேற்சொன்னவற்றையே.

ஆயில்யன் said...

//என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் .//


நச்சுன்னு இருக்கு அக்கா!


அழகாய் அப்பாவின் பாசம் வெளிப்படுத்தும் அன்பு மனம் அம்மாவுக்குத்தான்....! :)))

ரிதன்யா said...

//நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...//

அனிச்சை மலரோ உன் அப்பா.

தேவன் மாயம் said...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...
///

பெற்றவர்க்குப் பிள்ளை
பார்மில்லைதான்..

பாச மலர் / Paasa Malar said...

அழகான கவிதை அமுதா...

Dhiyana said...

//பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...
//

அழகு..

ஹேமா said...

//பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ... //

தந்தையின் தவிப்பும் ஏக்கமும்.எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தாச்சு.இப்பவே தொலைபேசி எடுக்கப்போறேன்.

மேவி... said...

"என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ... "
முற்றிலும் உண்மை......