முகமா முகமூடியா?
நேற்று வரை
நான் பார்த்த
உன் முகம்
இன்று ஏன்
மாறிவிட்டது?
இது தான்
உன் முகமா
அல்லது முகமூடியா?
நான் காண்பது
உன் முகமா முகமூடியா
என்ற தேடலில்
என் முகத்தைத்
தொலைத்துவிட்டேன்
தொலைந்தது
என் முகமா முகமூடியா?
கவிதை
ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது...
13 comments:
அருமையான படம் ...
\\உன் முகமா முகமூடியா
என்ற தேடலில்
என் முகத்தைத்
தொலைத்துவிட்டேன்
தொலைந்தது
என் முகமா முகமூடியா?\\
மிகவும் அருமை ...
\\ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது...\\
அழகான உண்மை ...
Short and Sweet "கவிதைங்க" !!!!!!
//"முகமா முகமூடியா?"//
பலநூறு முறை பலரும்
பலரைப் பார்த்து திகைத்து
தேடும் நிஜம்
சுடும் நிஜம்.
//
ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது...//
இதுவும் நிஜம்
பொதுவான ஓர் கருத்து
பல்வேறு செடியில்
பல்வேறு நிறங்களில்
பூக்கும் நிஜம்.
வாழ்த்துக்கள் அமுதா.
ஆஹா.. முகமூடியை கிழித்துவிட்டீர்கள்
நல்ல வரிகள்..
//ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது... //
கவிதைக்கே ஒரு கவிதை....தந்த கவிஞர்..
வாழ்த்துக்கள் அமுதா
'கவிதை' பூ அழகாய் மலர்ந்திருக்கு :)
அனுஜன்யா
// அ.மு.செய்யது said...
Short and Sweet "கவிதைங்க" !/
ரிப்பிட்டூ!!
உங்களின் திண்ணையின் கதைக்குப் பிறகு அசத்திய இன்னொரு கவிதை
அசத்தல்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது...
ஆம் இங்கேயும் பூத்திருக்கிறது.
கவிதையின் வாசத்தில் தமிழே / தமிழ்மணமே மணக்கிறது.
வாழ்த்துக்கள் தோழி
முகமூடியின் கவிதைக்காக நீங்கள் கொடுத்திருக்கும் படமே ஆயிரம் அர்த்தங்களோடு அமைந்திருக்கிறது.
இரண்டாவது கவிதை "கவிதை" ரொம்ப பிடித்திருந்தது அமுதா.
/ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது... /
உண்மைதான்
Post a Comment