நான் சிலிர்க்கிறேன்

உன் கைகொட்டலில்
நான் கரைகிறேன்

உன் மழலையில
நான் மயங்குகிறேன்

உன் கோபத்தில
நான் கலங்குகிறேன்

உன் பசியில்
நான் பரிதவிக்கிறேன்

உன் அழுகையில்
நான் உருகுகிறேன்

உன் விளையாட்டில்
நான் திளைக்கிறேன்

உன் தூக்கத்தை
நான் இரசிக்கிறேன்

உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்

(படங்கள் : இணையம்)
17 comments:
இனிமையான ரெட்டைவரி கவிதைகள்...
இந்த படங்களை போட்டுவிட்டாலே போதுமே..கவிதை எழுத வேண்டுமா என்ன ??
அருமை அமுதா !!!!
மழலை இன்பம்
மறுபடி பொங்குது
மருமகனைக் கண்டு
சரியா அமுதா:)?
அழகு வரிகள் படங்களைப் போலவே!
அழகான படங்கள்
அழகான வரிகளோடு ...
\உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்\\
இது ரொம்ப பிடித்தது ...
உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்//
அருமையான வரிகள்.
கலக்கறீங்க. வாழ்த்துக்கள்.
/*இந்த படங்களை போட்டுவிட்டாலே போதுமே..கவிதை எழுத வேண்டுமா என்ன ??*/
நன்றி அ.மு.செய்யது. மழலை எவ்வளவு பார்த்தாலும், எழுதினாலும், பேசினாலும் அருமைதான்.
/*மழலை இன்பம்
மறுபடி பொங்குது
மருமகனைக் கண்டு
சரியா அமுதா:)? */
உண்மை ... உண்மை...
/*அழகான படங்கள்
அழகான வரிகளோடு ... */
நன்றி ஜமால்
நன்றி முல்லை
நன்றி திகழ்மிளிர்
நன்றி புதுகைத் தென்றல்
ரெட்டை வரிகளில்
பல காவியங்கள்...
//உன் பசியில்
நான் பரிதவிக்கிறேன்//
ஒவ்வொரு தாய்க்கும் உள்ள
உண்மையான......
வாழ்த்துக்கள் அமுதா
நன்றி அபுஅஃப்ஸர்
மழலை அமுதத்தை அமுதாவின் வார்த்தைகளில் அள்ளிப் பருகினேன்.
ஆனால் பருகப்பருக திகட்டாததல்லவோ அவ்வமுதம்!!!!!
//நானானி said...
மழலை அமுதத்தை அமுதாவின் வார்த்தைகளில் அள்ளிப் பருகினேன்.
ஆனால் பருகப்பருக திகட்டாததல்லவோ அவ்வமுதம்!!!!!
நன்றிங்க... ஆமாம்... பருகப் பருகத் திகட்டாத அமுதம்
திருக்குறள் கதைதான் எழுதறீங்கன்னு பார்த்தா, வள்ளுவர் மாதிரியே ரெண்டு அடியில கவிதையெல்லாம் எழுதி அசத்தறீங்க.
ம், வாழ்த்துக்கள்
அடடா...இவ்ளோ நாள் உங்க வலைப்பூ பக்கம் வராம போய்ட்டேனே....அருமையான வரிகள்...நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்!
(வலைப்பூ முகவரி தந்த ஆயில்ஸ் அண்ணாவிற்கு நன்றி!)
அருமை..!
Post a Comment