என் மேகம் ???

Saturday, January 31, 2009

காலியான வீடு

அந்த வீடு
காலியாக இருந்தது
இருந்தும் இல்லாமல்...

நல்லதொரு நாளில்
அவர்கள் வந்தார்கள்

வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது
குழந்தையின் சிரிப்பில்
தினம் பூபாளம் கேட்டது
புன்னகையின் வாசம்
பக்கத்திலும் பரவியது

நல்லதொரு நாளில்
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
அவர்கள் சொந்த வீடு
குடி பெயர்ந்தார்கள்

இந்த வீட்டில
மழலையின் சுவடுகள்
இன்னும் இருக்கிறது..
வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள்

19 comments:

ஆதவா said...

அருமை சகோதரி,,,

பருவம் மாறி, தொலைந்து போன தன் மழலையைத் தேடும் ஒவ்வொரு (என்னைப் போன்ற) மனிதனுக்கும் இக்கவிதை நினைவுச் சுவட்டைத் தீண்டாமல் செல்லாது.. மிக அழுத்தமான வரிகள்.. தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்
ஆதவன்

அமுதா said...

தங்கள் ஊக்கமளிக்கும் சொற்களுக்கு நன்றி ஆதவன் .

அப்துல்மாலிக் said...

//வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள் //

நல்ல வரிகள் அமுதா..

ராமலக்ஷ்மி said...

கவிதை வெகு நன்று.

ஆதவன் பார்வை ஒருவிதமாக இருக்க எனக்கு இன்னொன்றையும் உணர்த்துகிறது அமுதா, ”எதுவுமே காலியாக இருக்க முடியாது” என்று.

ஹேமா said...

அமுதா,இரவல் வீட்டில் சுவடுகளைப் பதிப்பதைவிட சொந்த வீட்டில் பதிவது நல்லதுதானே.என்றாலும் இருந்த இடம் வெறுமைதான்.

தேவன் மாயம் said...

வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது
குழந்தையின் சிரிப்பில்
தினம் பூபாளம் கேட்டது///

ஒவ்வொரு வரியும்
அருமை...

தேவன் மாயம் said...

இந்த வீட்டில
மழலையின் சுவடுகள்
இன்னும் இருக்கிறது..
வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள் ///

மௌனமாய் அழும் மனம்
யாருக்குப்புரியும்??

அ.மு.செய்யது said...

//வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள் //

அருமை அமுதா...ச‌லிப்ப‌டைய‌ வைக்கும் வ‌ர்ண‌னைக‌ளின்றி, எளிமையான‌ ந‌டையில்
அழ‌காக‌ ப‌திவு செய்வ‌தே உங்க‌ள் ப‌ல‌மாக‌ இருக்கிற‌து.

தொட‌ருங்க‌ள்..வாழ்த்துக‌ள்...

தேவன் மாயம் said...

வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது
குழந்தையின் சிரிப்பில்
தினம் பூபாளம் கேட்டது
புன்னகையின் வாசம்
பக்கத்திலும் பரவியது///

அழியாத
நினைவுகளை
அழகாக
கோர்த்துவிட்டீர்..

அமுதா said...

நன்றி அபுஅஃப்ஸர்


நன்றி ராமலஷ்மி மேடம்

//எதுவுமே காலியாக இருக்க முடியாது

உண்மை

அமுதா said...

நன்றி ஹேமா

//அமுதா,இரவல் வீட்டில் சுவடுகளைப் பதிப்பதைவிட சொந்த வீட்டில் பதிவது நல்லதுதானே.என்றாலும் இருந்த இடம் வெறுமைதான்.

உண்மை. மகிழ்ச்சியோடு சொந்த வீடு சென்றாலும் , பழகிய பிணைப்புகளின் நினைவால் காலியான வீடு வெறிச்சென்று தோன்றுகிறது.

அமுதா said...

கருத்துக்கு நன்றி செய்யது

கருத்துக்கு நன்றி thevanmayam

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை..:)

அமுதா said...

நன்றி முத்துலெட்சுமி

சந்தனமுல்லை said...

:-) அருமை..

அமுதா said...

நன்றி முல்லை

எம்.எம்.அப்துல்லா said...

வார்த்தை எளிமையிலும் அழுத்தம் தர முடியும் என்பதற்கு இந்தக் கவிதை ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

//வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள் //

அழகா சொல்லியிருக்கீங்க

அமுதா said...

நன்றி அப்துல்லா
நன்றி அமித்து அம்மா