என் மேகம் ???

Friday, January 16, 2009

சென்னை சங்கமம்

இந்த தடவை எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே சென்னை சங்கமம். அதனால் அப்பப்ப எட்டிப் பார்க்க முடிஞ்சுது. சில உறவுகளையும் நட்புகளையும் சந்தித்த பொழுது எல்லோருக்கும் அவர்கள் பகுதியில் நடக்கும் "சங்கமம்" எட்டிப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. ஆங்காங்கே கண்ணில் தென்பட்ட "சங்கமம்" இடங்களில் நல்ல கூட்டம் தெரிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலையொட்டி படம் காண மாயாஜால் சென்றிருந்தோம். கரகாட்டம், மயிலாட்டம் என்று கிராமிய நிகழ்வுகளும் மாட்டு வண்டி, குதிரை வண்டி சவாரிகளும் இருந்தன. சவாரிகள் எல்லாம் யானை விலை குதிரை விலையாக இருந்தன. இவ்வளவு செலவு பண்ணிதான் கிராமத்தைக் குழந்தைகளுக்கு காட்ட முடிகிறது என்று தோன்றியது.

பத்து வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் , இலையுதிர்காலம், வசந்த காலம், கோடை காலம், குளிர்காலம் என்று பருவங்களை இயற்கை பறை சாற்றுவது காண அழகாக இருந்தது. அதை விட என்னைக் கவர்ந்தது, அந்தந்த காலத்திற்கேற்ப கொடிகளை பறக்கவிட்டதோடு ஊரே பருவங்களைக் கொண்டாடியது. அக்கொண்டாட்டங்களைப் பார்த்த பொழுது, இயந்திரத்தனமான சென்னை வாழ்க்கை நினைவுக்கு வந்தது. படிக்கும் காலங்களிலாவது கோடைத் திருவிழாவுக்கு ஊருக்கு ஓடுவோம். இப்பொழுது அதுவும் இல்லை.

இப்பொழுது சங்கமம் சற்றே எனது இரு ஏக்கங்களையும் தீர்த்தது. பொங்கல் வந்துடுச்சு, சங்கமம் நடக்குதாம் போய் பார்க்கலாம் என்று குழந்தைகளிடம் சொன்ன பொழுது, ஊரில் திருவிழாவுக்குத் தயாரான துடிப்பு இருந்தது. நாங்க எட்டிப் பார்த்த பொழுது ஒரு நாள் கரகாட்டம், ஒரு நாள் சங்கீதம் அப்புறம் மேஜிக் ஷோ நடந்துச்சு. எல்லோரும் கைதட்டி இரசிச்சாங்க, நாங்களும் இரசிச்சோம். இன்று காலை தான் ஸ்டேஜ் எல்லாம் கலைச்சு எடுத்துட்டுப் போனாங்க. சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி.

6 comments:

Anonymous said...

At Vada Palani?

நட்புடன் ஜமால் said...

\\சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி.\\


நல்லது ...

ராமலக்ஷ்மி said...

//சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி. //

சந்தேகமில்லாமல். அந்தக் கலைஞர்களையும் ஊக்குவித்து வாய்ப்புக் கொடுத்த மாதிரியும் ஆகிறது. இல்லாவிடில் அக்கலைகள் மறைந்தே போய் விடும். சின்ன வயதில் திருவிழாக் காலங்களில் கோவில் சப்பரங்கள் வீதி உலா வருகையில் பார்த்ததுதான் கரகாட்டம், பொம்மைகுதிரை ஆட்டமெல்லாம். அதன் பிறகு காணும் வாய்ப்பே இன்றி போயிற்று.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

சந்தனமுல்லை said...

சுவாரசியம்!!

///சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி.//

ஆமா அமுதா!! குழந்தைகள் நல்லா எஞ்சாய் செய்திருப்பார்கள் இல்லையா!!

அ.மு.செய்யது said...

சென்னை சங்கமத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் உங்கள் பதிவை படித்ததே அந்த திருவிழாவிற்கு சென்ற திருப்தி தான்...

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவதில் ஏதோ பிரச்சினை..சரி செய்யுங்கள்.