இரண்டு வருடமாயிற்று இவ்வலைப்பதிவைத் தொடங்கி என்றாலும் சமீப காலமாகத் தான் நான் விடாது எழுதுகிறேன். பல நாட்களாக என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் அமிர்தவர்ஷினி அம்மா, மேலும் என்னை ஊக்குவிக்க பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார்கள். தினம் கையில் ஸ்டார் வாங்கினேன், ஐஸ்க்ரீம் வாங்கினேன் அப்படினு என் குட்டிகள் சொல்லிட்டு, நீ வாங்கி இருக்கியா? எங்க காட்டு என்ற கேள்விகளுக்கு இப்ப நான் "பட்டர்ஃபிளை" வாங்கி இருக்கேன் என்று பறை சாற்ற வழி செய்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள் பல. என்னை இப்பதிவுலகுக்கு அறிமுகப்படுத்திய சந்தனமுல்லைக்கு கோடானு கோடி நன்றிகள்.
இப்பொழுது பட்டாம்பூச்சி செல்ல நான் விழையும் வலைப்பூ நண்பர்கள்:
ஏழு பேருக்குதான் ஒரிஜனலா கொடுக்கணுமாம், ஆனாலும் மூன்று கூட நல்ல எண் தான் என்று சொல்லிவிட்டார்களாம். கொடுக்க நினைத்த சிலர் ஏற்கனவே வாங்கி விட்டார்கள், சிலர் கையால் விருது வாங்கலாம் கொடுக்க முடியாது, அந்த அளவு எழுத்துக்களில் மிளிர்பவர்கள். எனவே மூன்றே நல்ல எண்ணாக நினைத்து, நான் விருதைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் மூவர்:
திகழ்மிளிர் - இவருடைய ஒவ்வொரு வலைப்பதிவும் வண்ணங்கள் நிறைந்தவை, கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியானவை. கவிதைகள் அருமையானவை. இவரது "தமிழ்" பதிவில் தமிழின் இனிமையைக் காணலாம். சொல் அகராதியும், படித்ததில் பிடித்தவையும் இனிமை இனிமை.
வண்ணத்துப்பூச்சியார் - இவரது பதிவில் சினிமா உலகங்கள் பற்றிய பார்வைகளைப் பதிக்கிறார். குழந்தைகளுக்கான திரைப்படங்களைப் படங்களுடன் விமர்சிப்பது அழகு
பூந்தளிர் தீஷு - தன் மகள் தீஷுவின் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இவ்வலைப்பக்கத்தில் குழந்தைகளுக்கான பல activities நான் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகளின் டி.வி நேரத்தைக் குறைக்கும் வண்ணம் இருந்தன சில விளையாட்டுகள், சில சமயங்களில் வயதிற்கேற்ற சின்ன சின்ன மாற்றங்களுடன்.
இந்த பதிவில் எனக்கு ஊக்கமளிக்கும் ஒவ்வொரு Followers-க்கும் , பின்னூட்டமளித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடங்கி வைத்த புதுகை தென்றல் முதல் தொடரும் ஜீவன், ஆயில்யன் , அமிர்தவர்ஷினி அம்மா, RAMYA, உயிர் நீ நிகழ் , நட்புடன் ஜமால், சுமி, தேவன்மயம், SUBRA, ஹரிணி அம்மா, அ.மு.செய்யது, வழிப்போக்கன், கணினி தேசம், அகநாழிகை, Vanakkam Chennai, அபுஅஃப்ஸர் வரை அனைவருக்கும் நன்றி.
சில நாட்களுக்கு முன் வெளியான "என் பெண் வளர்கிறாள்" கவிதையில் "வேணும்.. வேணாம்..!" என்று ஒருவர் மிகவும் ஊக்கமளித்து "நிறைய எழுதுங்க" என்று பின்னூட்டமிட்டிருந்தார். சரியாக அதே வேளையில் தான் அனானி ஒருவர் "என்ன எழுதுகிறாய்?" என்ற சாயலில் ஒன்றிரண்டு பின்னூட்டமிட்டு என்னை யோசிக்க வைத்திருந்தார். எனவே இந்த "நிறைய எழுதுங்க" பின்னூட்டம் கூட ஒரு கலாய்த்தலோ என்று எண்ணி அந்த பின்னூட்டத்தை வெளியிட மிகவும் யோசித்துப் பின் "நன்றி" என்ற ஒற்றைச்சொல்லுடன் பின்னூட்டத்தை வெளியிட்டேன். அப்பொழுது இராமலஷ்மி மேடம் அதே போல் ஒரு பின்னூட்டமிட்ட பின் , மேலும் உற்சாகம் கொண்டேன். பின் தைரியமாக "வேணும்.. வேணாம்..!" வலைப்பதிவுக்குச் சென்று பார்த்த பொழுது எனது படைப்புகளும் அங்கு பகிரப்பட்டுள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுள் உற்சாகமூட்டிய அவருக்கும், ராமலஷ்மி மேடமுக்கும் எனது நன்றிகள் பல. அதன் பின்பு பலர் பின்னூட்டம் இட்டதில், இன்று ஒரு விருதும் வாங்கி மனம் பூரிக்கிறது. என் வலைப்பதிவுக்கு வருகை தரும்/தந்த பின்னூட்டம் இட்ட/இடாத அனைவருக்கும் எனது நன்றிகள்.
ஓகே... விழா & நன்றியுரை முடிந்துவிட்டது. ந்ன்றி , வணக்கம்.
21 comments:
விருது வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும்..நீங்கள் பகிர்ந்தளிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நீங்கள் போட்ட ஆளுயர மாலையை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நானும் விடை பெறுகிறேன்:)! நன்றி. வணக்கம்.
//நீ வாங்கி இருக்கியா? எங்க காட்டு என்ற கேள்விகளுக்கு இப்ப நான் "பட்டர்ஃபிளை" வாங்கி இருக்கேன் என்று பறை சாற்ற வழி செய்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள் பல.//
இப்போ நீங்களும் பெருமையா சொல்லிக்கலாம். :-))
//எனவே இந்த "நிறைய எழுதுங்க" பின்னூட்டம் கூட ஒரு கலாய்த்தலோ என்று எண்ணி...//
நெசமாதாங்க சொல்றோம், நிறைய எழுதுங்க!!
விருது பெற்றமைக்காக உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துகள் !!!!!! இன்னும் நிறைய எழுதி எழுத்துலகம் வளர வகை செய்யுங்கள் !!!
:)
வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்கள் வழி பெற்றவருக்கும்.
\\. என் வலைப்பதிவுக்கு வருகை தரும்/தந்த பின்னூட்டம் இட்ட/இடாத அனைவருக்கும் எனது நன்றிகள்.\\
அழகு ... ஆரோக்கியம் ...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்
என்னை மிஸ் பண்ணிட்டீங்களே மாடம் பின்னூட்டமளித்து ஊக்கமளிக்கும்" லிஸ்ட்டில்??? lol
முல்லை@/*என்னை மிஸ் பண்ணிட்டீங்களே மாடம் */
ஆகா மேடம். வலைப்பதிவுக்கு என்னை அறிமுகப்படுத்திய உங்களை நான் மறப்பேனா? ஏற்கனவே நீங்க தான் என்னை அறிமுகப்படுத்தினீங்கனு ஒரு பதிவுல சொல்லி இருக்கேன். மேலும் உங்களோட தினம் பேசுவதால், தனியே இங்கு சொல்லவில்லை. இந்த பதிவுலேயும் சொல்லி இருக்கணும். மன்னிச்சிடுங்க... பின்னூட்டம் வழியாக மட்டும் அல்லாது, நேரடியாகவும் என்னை ஊக்கப்படுத்தும் சந்தனமுல்லைக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
அது!! விடமாட்டோம் இல்ல!! lol!
/*அது!! விடமாட்டோம் இல்ல..*/
கோடானு கோடி நன்றிகளும்... கோடானு கோடி மன்னிப்புகளும்
//வலைப்பதிவுக்கு என்னை அறிமுகப்படுத்திய உங்களை நான் மறப்பேனா?//
இப்படியெல்லாம் பகிரங்கமா என்னை காட்டிக் கொடுக்காதீங்க! :))
நண்பர்கள்கிட்டே செல்லமா சண்டை போடறது ஜாலியாதான் இருக்கு!!
வாழ்த்துக்கள் விருதிற்கு.
விடாமல் தொடர்ந்து எழுத அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
நன்றி அமுதா விருந்து தந்தற்கு.
அமுதா.. மட்டற்ற மகிழ்ச்சி.
ஒரு வினாடி திகைத்து போனேன்.
கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
அந்த ஏக்கத்தில் தான் குழந்தைகளுக்கான திரைப்படங்களை தேடி தேடி பார்த்து அவற்றை தமிழில் எழுத ஆரம்பித்தேன்.
10 -15 பின்னூட்டங்களுக்கு மேல் கூட வந்ததில்லை.
சில சமயம் சோர்ந்தும் விட்டேன். ஆனால் என மனத்திருப்திக்காக தொடர்ந்து இரவெல்லாம் எழுதி வந்தேன்.
ஆனால் விருது என்றதும் இன்ப அதிர்ச்சி. அதுவும் பட்டாம்பூச்சி விருது என்றதும் மிகவும் மகிழ்ச்சியும் அளவு கடந்த உற்சாகமும் கொண்டேன்...
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...
நன்றி அமுதா..என்னை மீண்டும் படபடக்க செய்தமைக்காக..
தங்களின்
அன்பிற்கு மிக்க
நன்றிங்க
என்றும் அன்புடன்
திகழ்
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை ஏற்க வில்லை. அவரது மகள் நடத்தும் சங்கமம் நிகழ்ச்சியின் விளம்பரம் இந்த அறிவிப்பு.
சித்திரை(April) மாதம் புது விதை விதைக்க படும் . எனவேபட்ட அது புத்தாண்டு. பின் அறுவடை செய்வதை கொண்டு கொண்டாடுவது பொங்கல். அந்த அடிப்படை கூட தெரியவில்லை இந்த சுயநல தமிழின தலைவருக்கு. முன்னோர்கள் (தமிழர்கள்) முட்டாள்கள் இல்லை.
Post a Comment