நேற்று...
உன் விரல் பிடித்து
உன் வகுப்பறை வரை வந்து
உன்னை முத்தமிட்டு
உன் வாசத்தோடு
நான் நகர்ந்த பொழுது
மகிழ்ச்சியில் பொங்கியது மனம்
இன்று...
என் விரல் விட்டு
என்னை முத்தமிட்டு
உன் வகுப்பறை நோக்கி
என் வாசத்தோடு
நீ நகரும்பொழுது
கொஞ்சம் ஏக்கம்...
கொஞ்சம் பெருமிதம் என
விம்மியது மனம்
நாளை...
உன் கனவுகளின் வாசத்தோடு
புத்தம் புதிய சிறகுகளோடு
உன் வானத்தில் சிறகடிக்கும்
நாளைக் காணத் தயாராகு
என்று மெல்லச் சொல்கிறது மனம்...
26 comments:
//கொஞ்சம் ஏக்கம்...
கொஞ்சம் பெருமிதம் என
விம்மியது மனம்//
யதார்த்தம் அழகு..
நேற்றைய நினைவு
இன்றைய பெருமிதம்
நாளையைப் பற்றிய கனவு..
மழலையின் வளர்ச்சியில் நெகிழும் மனதை சொல்லியிருக்கும் விதம்
வெகு அழகு அமுதா.
நன்றி செய்யது
நன்றி இராமலஷ்மி மேடம்
//நேற்று...
உன் விரல் பிடித்து
உன் வகுப்பறை வரை வந்து
உன்னை முத்தமிட்டு
உன் வாசத்தோடு
நான் நகர்ந்த பொழுது
மகிழ்ச்சியில் பொங்கியது மனம்
//
உண்மை.. அனுபவம்லே
தாய்மையின் மகிழ்ச்சி, பெருமிதம் தன் குழந்தை பற்றிய எதிர் காலக் கனவுகள் அத்தனையும் கவிதையில் காண முடிகிறது...அழகான கவிதை...
//என் வாசத்தோடு
நீ நகரும்பொழுது
கொஞ்சம் ஏக்கம்...
கொஞ்சம் பெருமிதம் என
விம்மியது மனம்
//
யதார்தம்.. பெற்றோரின் மனநிலயை அழகாக சொல்லிருக்கீங்க
வாழ்த்துக்கள் அமுதா
நன்றி அபுஅஃப்ஸர்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதியவன்
அருமையான் கவிதை
//புத்தம் புதிய சிறகுகளோடு
உன் வானத்தில் சிறகடிக்கும்
நாளைக் காணத் தயாராகு
என்று மெல்லச் சொல்கிறது மனம்...//
:-) நல்லாருக்கு அமுதா!
நன்றி முல்லை
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்க்கி
உன்னை முத்தமிட்டு
உன் வாசத்தோடு
நான் நகர்ந்த பொழுது
மகிழ்ச்சியில் பொங்கியது மனம்///
குழந்தை அழுவலையா?
நல்லா எழுதியிருக்கீங்க!!!
உன் கனவுகளின் வாசத்தோடு
புத்தம் புதிய சிறகுகளோடு
உன் வானத்தில் சிறகடிக்கும்
நாளைக் காணத் தயாராகு
என்று மெல்லச் சொல்கிறது மனம்..///
பட்டாம்பூச்சிக்கு
சிறகு வந்தால்
பறக்க விடவேண்டும்
சரியான பாதையில்..
இதுதான் வாழ்வின் நிஜம் இல்லையா..
நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள்
நன்றி thevanmayam...
//குழந்தை அழுவலையா?
ம்ஹூம்... முதல் நாள் இல்லை.. அதுக்கு அப்புறம் தனி கதை
//இதுதான் வாழ்வின் நிஜம் இல்லையா..
உண்மை பாசமலர்.. வருகைக்கு நன்றி
நன்றி வண்ணத்துப்பூச்சியார்
நேற்று - இன்று - நாளை
பாசம் - நேசம் - பெருமிதம்
ஆரவாரமில்லாமல் அழகா சொல்லியிருக்கீங்க அமுதா
நேற்று இன்று, நாளை : ரொம்ப நல்லாருக்கு. நானும் எதிர்நோக்குகிறேன்.
//உன் கனவுகளின் வாசத்தோடு
புத்தம் புதிய சிறகுகளோடு
உன் வானத்தில் சிறகடிக்கும்
நாளைக் காணத் தயாராகு
என்று மெல்லச் சொல்கிறது மனம்//
நினைத்தாலே கஷ்டமா இருக்கு அமுதா. இப்போ எல்லாத்துக்கும் அம்மா. கொஞ்ச நாளில் ?
அமுதா உங்கள் வீடு வந்திருக்கிறேன்.அழகாய் இருக்கிறது உங்கள் கவிதைகள் போலவே.அமுதா குழந்தைகளின் வளர்ச்சியில் எத்தனை இன்பம்.பெற்றவர்களின் கனவுகள்தான் எவ்வளவு.அதன் கருவில் அருமையான வரிகள்.வாழ்த்துக்கள்.இன்னும் வருவேன்.
(தந்தை)தாய், மகன்(ள்) உறவு கால கட்டங்களோடு காண்பிக்கையில் அதன் உணர்வு தானாகவே அமர்ந்துவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் நேன்றைய இன்றைய பொழுதுகள் கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே செல்லுகிறது.. நாளைய பொழுதுகளில் பெற்றோர் கனவை நிறைவேற்றும்படியான சூழ்நிலை பலருக்கு வாய்ப்பதில்லை.
அருமையான கவிதை.. அற்புதமான எழுத்துக்கள்.. தொடருங்கள்
நன்றி ஜமால்
நன்றி அமித்து அம்மா
நன்றி தீஷு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா. மீண்டும் வாருங்கள்
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதவா
நல்லா இருக்கு அமுதா.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா
நல்லா இருந்துச்சு.
Post a Comment