என் மேகம் ???

Wednesday, January 7, 2009

திகட்டாத மழலை இன்பம்




என் குட்டிப் பெண் ஐந்து வயதை நெருங்குகிறாள் என்றாலும் மழலையின் சுவடுகள் இன்னும் விலகவில்லை. அவள் தோழி வீட்டில் அவளைப் பேசச் சொல்லி மழலை இன்பம் துய்க்கின்றனர். "குது" "குதிதை" எல்லாம் இப்பொழுது "குரு" "குதிரை" என்று ஒழுங்காக வருகிறது. என்றாலும் இன்னும் அவள் பெயர், அவளின் மழலையாலும் பெயரின் தன்மையாலும் அவள் கூறும் பொழுது புரிவதில்லை. இன்னும் "மஞ்சரி" "சஷ்மிதா" எல்லாம் "மஞ்சலி" "ஃப்ரஷ்னிதா" தான்.

இன்னும் சொற்பிரயோகங்களில் மழலை ததும்புகிறது. இன்னும் "நேற்று" என்பது "நாளைக்கு" தான், "முன்னாடி பின்னாடியாகவும்", "பின்னாடி முன்னாடியாகவும்" உள்ளது. "பள்ளம் உயரமாக" இருப்பதாகவும் "பிசைந்த சப்பாத்தி மாவு" "கசங்கிய மாவு" என்றும் உள்ளது.

என் தோழி கூறுவார் , "எனக்கு மட்டும் சக்தி இருந்தால் என் வாழ்க்கையை எனது குழந்தையின் மூன்று வயதில் உறையச் செய்து விடுவேன்" என்று . உண்மை தான். இன்னும் கொஞ்ச நாளில் இம்மழலைப் பேச்சு இருக்காது என்ற எண்ணமே, இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கச் சொல்கிறது. அவள் வளர்வதைக் காணக்காண இன்பமுறும் மனம், இன்னும் சற்று நாளில் காணாமல் போய்விடும் மழலைப் பேச்சிற்குத் துடிக்கின்றது.

பி.கு: இதுல எத்தனை "இன்னும்" வந்ததுனு கண்டுபிடிங்க :-)

****************************************************************

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

"அம்மா உனக்கு நான் புது எக்ஸ்ர்சைஸ் சொல்லித் தரவா?" என்றாள் என் குட்டிப்பெண்
"சரி"
எப்பொழுதும் போல் கொஞ்சம் கஷ்டமான எக்ஸ்ர்சைஸ் செய்து, "ம், பண்ணு" என்றாள்.
"நீ பெரிய ஆளுடா. அம்மாவால செய்ய முடியாது"
"அம்மா, நீ தான் பெரிய ஆளு. நான் சின்ன பொண்ணு"
"இல்லைடா, நீ எக்ஸ்ர்சைஸ்-ல பெரிய ஆளு"
"ம்... நீ சமையல் செய்றதுல பெரிய ஆளு" (ஆஹா ஐஸ் மழை..)
சற்று பொறுத்து , "நீ எல்லாத்துலயும் பெரிய ஆளு, எக்ஸ்ர்சைஸ் தவிர..". (ஹச்...ஹச்...)

*****************************************************************

நான் கொஞ்சம் மூட் அவுட். உர்ரென்று இருந்தேன். சின்னப் பெண் வந்தாள். அம்மா எங்களை மாதிரி ஜாலியா இரேன். ஏன் கோபமா இருக்க? நோ ஆங்க்ரி.. ஸ்மைல்... வாயை சிரிப்பது போல் இழுத்துப் பிடித்து... நீ சிரிச்சிட்டே இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு மூட் அவுட்டாக இருக்குமா என்ன? என் குழந்தையிடம் எனக்கு வேண்டியதுதான் என் குழந்தையாலும் என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது

*****************************************************************
சினிமா போயிருந்தோம். தந்தையின் மடியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள். இடைவேளையின் பொழுது ஏதேனும் உண்ண வாங்கிக் கொள்ளச் சொன்னேன். "அப்பா, எனக்கு ஒரு பாப்கார்ன். நான் வரலை... என் செல்ல அம்மாட்ட இருக்கேன்" என்று தியேட்டர் அதிர ஒரு அறிவிப்புடன் வந்துவிட்டாள். "என் செல்ல அம்மா" ட்யலாக் வேறு ஆக்ஷன் ரீப்ளேயாக 2 முறை தியேட்டர் அதிர ஓடியது. இப்பொழுதெல்லாம் இப்படித் தான் ஊர் கேட்க ஏதாவது சொல்லி, சில சமயம் சிரிக்க வைக்கிறாள், சில சமயம் நெளிய வைக்கிறாள்.
*****************************************************************

11 comments:

அ.மு.செய்யது said...

//நோ ஆங்க்ரி.. ஸ்மைல்... //

நோ ஆங்கிரி..குழந்தைகள் என்றாலே வாழ்க்கை ஜாங்கிரி..

படிக்க படிக்க இனிமை...

ஆயில்யன் said...

//பி.கு: இதுல எத்தனை "இன்னும்" வந்ததுனு கண்டுபிடிங்க :-)///

இதுக்குள்ள இருக்கற ”இன்னும் ”சேர்த்தா இல்ல சேர்க்காமலா :)))))

ஆயில்யன் said...

//பி.கு: இதுல எத்தனை "இன்னும்" வந்ததுனு கண்டுபிடிங்க :-)//

சேர்த்து - 10

சேர்க்காம - 9


(ஹைய்ய்ய்ய் இந்த விளையாட்டு நொம்ப நல்லாருக்கு - நானெல்லாம் நொம்ப்ப்ப்ப்ப் வெட்டியான ஆளுன்னு இப்பவாது புரிஞ்சுருக்கணும் !)

:))))))))))))))))))))

ஆயில்யன் said...

//... நீ சமையல் செய்றதுல பெரிய ஆளு" (ஆஹா ஐஸ் மழை..)
சற்று பொறுத்து , "நீ எல்லாத்துலயும் பெரிய ஆளு, எக்ஸ்ர்சைஸ் தவிர..". (ஹச்...ஹச்...)//


:)))

ஒரு வேளை டக்குன்னு ஞாபகம் வந்திருக்கும்போல ஆஹா சமையல்ன்னு அவசரப்பட்டு சொல்லிட்டோமேன்னு :))))))

பிறகு நிதானிச்சு பொதுவா மாத்திட்டாங்க பாப்பா!

ஆயில்யன் said...

//என் குழந்தையிடம் எனக்கு வேண்டியதுதான் என் குழந்தையாலும் என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது///


எதை நீ பிறருக்கு கொடுக்கிறாயோ அதையே நீ பிறரிடமிருந்து எடுத்துக்கொள்கிறாய்ன்னு ஒரு தத்துவம் இருக்கு!

அன்பை கொடுத்தால் அன்பை பெறுவீர்கள்!

மகிழ்ச்சியினை கொடுத்தால் மகிழ்ச்சியினை பெறுவீர்கள்!

:)))))

புதுகை.அப்துல்லா said...

//இப்படித் தான் ஊர் கேட்க ஏதாவது சொல்லி, சில சமயம் சிரிக்க வைக்கிறாள், சில சமயம் நெளிய வைக்கிறாள்.
//

ச்சோ ஸ்வீட் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவள் வளர்வதைக் காணக்காண இன்பமுறும் மனம், இன்னும் சற்று நாளில் காணாமல் போய்விடும் மழலைப் பேச்சிற்குத் துடிக்கின்றது.
:)-

சற்று பொறுத்து , "நீ எல்லாத்துலயும் பெரிய ஆளு, எக்ஸ்ர்சைஸ் தவிர..". (ஹச்...ஹச்...)
:)-

என் குழந்தையிடம் எனக்கு வேண்டியதுதான் என் குழந்தையாலும் என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது//
தேவையான மெசேஜ்


"என் செல்ல அம்மா" ட்யலாக் வேறு ஆக்ஷன் ரீப்ளேயாக 2 முறை தியேட்டர் அதிர ஓடியது.
choo chwwwwwwwwweeeeeeeeeet

அப்துல்மாலிக் said...

மழலைப்பேச்சு... இசையைவிட இனிமை... அதைக்கேட்பதற்கு இரு காதுகள் போதாது....

//"எனக்கு மட்டும் சக்தி இருந்தால் என் வாழ்க்கையை எனது குழந்தையின் மூன்று வயதில் உறையச் செய்து விடுவேன்" //

உண்மைதான்.... நானும் பலமுறை நினைத்தது உண்டு.... வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\"திகட்டாத மழலை இன்பம்"\\

திகட்டவே திகட்டாது ...

Dhiyana said...

//என் தோழி கூறுவார் , "எனக்கு மட்டும் சக்தி இருந்தால் என் வாழ்க்கையை எனது குழந்தையின் மூன்று வயதில் உறையச் செய்து விடுவேன்" என்று .//

உண்மை அமுதா. தீஷுவுடைய பழைய போட்டோ பார்த்தால், இனிமேல் இப்படி எப்பொழுதுமே பார்க்க முடியாதுனு நினைத்துக் கொள்வேன்.

தேவன் மாயம் said...

என் குட்டிப் பெண் ஐந்து வயதை நெருங்குகிறாள் என்றாலும் மழலையின் சுவடுகள் இன்னும் விலகவில்லை. அவள் தோழி வீட்டில் அவளைப் பேசச் சொல்லி மழலை இன்பம் துய்க்கின்றனர். "குது" "குதிதை" எல்லாம் இப்பொழுது "குரு" "குதிரை" என்று ஒழுங்காக வருகிறது. என்றாலும் இன்னும் அவள் பெயர், அவளின் மழலையாலும் பெயரின் தன்மையாலும் அவள் கூறும் பொழுது புரிவதில்லை. இன்னும் "மஞ்சரி" "சஷ்மிதா" எல்லாம் "மஞ்சலி" "ஃப்ரஷ்னிதா" தான்.///

நல்லாத்தானே பேசுது!!!!
எல்லாத்தையும் பதிந்து வைங்க!!!

தேவா...