என் மேகம் ???

Monday, January 5, 2009

கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன?

நேற்று என் மகள் இடைவிடாது அவளைப் படிக்க வைக்குமாறு மிரட்டியதால், வேறு வழியின்றி பாடம் கற்றுக்கொடுக்க அமர்ந்தேன். ஆங்கில இலக்கணம் நாளை பரீட்சையாம். மேடம் ஒரு பேப்பர் கொடுத்தார்கள். நான் உண்மையிலேயே மிரண்டு விட்டேன். ஒரு பக்கம் முழுக்க விலங்குகளின் ஒலிகளைப் பற்றிய ஒரு டேபிள், இன்னொரு பக்கம் பொருட்களின் ஓசைகள் பற்றிய ஒரு டேபிள். hyenas laugh, owl hoots, spoon clinks, clothes swish என்று பல விஷயங்கள். கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன என்று தோன்றியது. 10 வயது குழந்தைகள் இதை மனப்பாடம் செய்து போய் கேட்கப்படும் நாலு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நிச்சயமாக இதில் புரிந்து படிக்க ஒன்றுமில்லை, மனப்பாடம் தான் செய்ய வேண்டும். Cat mews, bees hum, bells jingle என்று சிலவற்றை வேண்டுமானால் புரிய வைக்கலாம். மீதி எல்லாம் memory power இருக்கும் குழந்தைகளால் மட்டுமே முடியும். மற்ற குழந்தைகள் என்ன செய்வார்கள்?

இது போல தான் states and capitals இருக்கும். என்றாலும் அது நம் நாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு கோணத்தில் பரவாயில்லை என்று தோன்றியது. என்றாலும்... என்னத்த சொல்ல? ஆயிரம் குறை கூறினாலும் அதைத்தானே படிக்க வைத்து மதிப்பெண் பெற வேண்டி இருக்கிறது...

12 comments:

புதுகை.அப்துல்லா said...

//ஆயிரம் குறை கூறினாலும் அதைத்தானே படிக்க வைத்து மதிப்பெண் பெற வேண்டி இருக்கிறது...
//

:((((

அ.மு.செய்யது said...

//
கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன? //

இது கேள்வி !!!

கோபம் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது தான்.

மகி said...

அதிகம் தான் தருகிறார்கள்

முடிந்த அளவு கற்றுக்கொடுக்க யாரும் இங்கில்லை.

நட்புடன் ஜமால் said...

ஆம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையையே மாற்ற வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன? //

உங்கள் கோபம் நியாயமானதே...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

ஆனால் கற்றுக்கொடுக்கும் முறையே குற்றமாகத்தான் இருக்கிறது

என்ன செய்யலாம் என்ற பொருமலோடுதான் இதையும் கடந்து போக வேண்டியிருக்கிறது.

சந்தனமுல்லை said...

அமித்து அம்மாவின் கருத்துதான் எனக்கும்!
இப்படி சிலபஸ் வைத்திருந்தால் கண்டிப்பாக அதற்கு ஒரு வேல்யூ இருக்கும். மேலும், இது அவர்கள் வொக்காபுலரியை அதிகப்படுத்துவதாகக்
கூட இருக்கலாம்! அதைக் குறைக் கூற முடியாதெனினும், சொல்லிக் கொடுக்கும் முறையை சுவாரசியமா மாற்றலாம்! இன்னும் ஒலி/ஒளிகளோடு, சிறுமியர் விரும்பும் வண்ணம்..இப்படி வெறும் மனப்பாடம் செய்வதைவிட்டுவிட்டு!ம்ம்..ஆனா பந்து இப்போ உங்க மைதானத்தில்..நீங்க இன்னும் இண்டராக்டிவ்-வா கத்துக்கொடுக்க முயற்சி செய்யலாமே, அமுதா!!:-)

அமுதா said...

அனைவரது வருகைக்கும் நன்றி.

/*நீங்க இன்னும் இண்டராக்டிவ்-வா கத்துக்கொடுக்க முயற்சி செய்யலாமே, அமுதா!!:-)*/
நன்றி முல்லை. கிட்டதட்ட அப்படிதான் கற்றுக்கொடுத்தேன். நீ பாவாடையைச் சுத்தி உட்காரும்பொழுது என்ன சத்தம் வரும் "swish" என்று. இது போல பல. ஆனால் எல்லோரும் அப்படி சொல்ல மாட்டார்கள். மேலும் கிட்டதட்ட 40 விதமான ஒலிகளை எப்படி சொல்லிக்கொடுத்தாலும் மனப்பாடம் செய்துதான் ஆக வேண்டும். மேலும் இது மட்டுமே அவர்கள் பாடம் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளைப் பெற்றோர் பாடப்புத்தகத்தை எடுக்க வைக்கப் போராடுவதை நான் பார்த்துள்ளேன். நிச்சயம் இதைப் படிக்க வைப்பதற்குள் அவர்கள் பாவம். சொல்லிக்கொடுப்பதற்கும் ஓர் அளவு வேண்டும் என்பதே என் கருத்து. ஒரு 10 படிக்கலாம், 40 என்பது too much. நிஜமாகவே எனக்கு பல மறந்து விட்டது அதன் கடினததை இங்கு நான் கூறுவதற்கு...

Thamira said...

அவற்றை விதவிதமான ஒலிக்குறிப்புகளுக்கான ஆங்கில வார்த்தைகளாகத்தான் பார்க்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். வேண்டுமாயின் கற்றலில் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம், முல்லை சொல்வதைப்போல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலைப்பு அசத்தலுங்க..

நான் கூட இதை சொல்லிக்கொடுக்க கொஞ்சம் தடுமாறித்தா ன் போனேன்.. ஆனா அதை வச்சு சில கதைகளில் வந்ததை நினைவு வச்சிக்கிட்டு அவளே ஒரு மாதிரி ஞாபகத்துக்கு கொண்டுவந்துகிட்டா.. அதான் லைப்ரரியிலிருந்து மேஜிக் ட்ரீ ஹவுஸ் மாதிரி குட்டி புக் எல்லாம் கொண்டுவராங்களே.. அதுல நடுவீல் இந்தமாதிரி வொக்காப்லரிகளும் வருது.. :)

தமிழ் அமுதன் said...

சரிதான்....... கற்றுகொண்டால் குற்றமில்லை!

A N A N T H E N said...

"கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன?"

:D

Suresh S R said...

எனக்கும் இதே கோபம் உண்டு.