என் மேகம் ???

Tuesday, July 27, 2010

நீர்க்குமிழிக் கனவுகள்

நீர்க்குமிழி ஊதுகிறாள்
சின்னப் பெண்

வண்ணமயமாக பறக்கின்றன
என் கனவுகள் போல

காலம் போல காற்று
பட்டென உடைக்கிறது

கலகலவென சிரித்து
மீண்டும் ஊதுகிறாள்

சிறுமியாக மாறிடும்
கனவொன்று மிதந்து செல்கிறது
நீர்க்குமிழியாக...

8 comments:

Unknown said...

நீர்க்குமிழி மேல் சிறுமியின் கனவுகள் ... அற்புதமான கவிதை.. பாராட்டுக்கள்..

பின்னோக்கி said...

கனவுகளாய் நீர்க்குமிழி. பிரம்மாதமான கற்பனை.

சென்ஷி said...

அருமையா இருக்குதுங்க..

அம்பிகா said...

\\கனவுகளாய் நீர்க்குமிழி. \\அழகான கவிதை.

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

நீர்க்குமிழி மேல் சிறுமியின் கனவுகள் அருமை

ஹேமா said...

அழகு நீர்க்குமிழியாக நீங்கள் !

பூங்குழலி said...

சிறுமியாக மாறிடும்
கனவொன்று மிதந்து செல்கிறது
நீர்க்குமிழியாக

அழகான அற்புதமான கவிதை

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

சிறுமியான கனவோடு நானும் மிதந்து...