என் மேகம் ???

Thursday, July 22, 2010

மருத்துவமனை பொழுதுகள்

தூய்மையின் நெடியா
வலியின் நெடியா
என்று புரியாது
நகரும் நொடிகள்....

வந்து செல்வோருடன்
வந்து செல்லும்
அலுப்பும் மாற்றமும்

வீட்டின் நிம்மதி
பணத்தின் மதிப்பு
நட்பின் ஆறுதல்
உறவின் பலம்
என்று...
வாழ்க்கை பாடத்துடன்
ஊர்ந்து செல்லும்
மருத்துவமனையில் பொழுதுகள்

7 comments:

Chitra said...

வீட்டின் நிம்மதி
பணத்தின் மதிப்பு
நட்பின் ஆறுதல்
உறவின் பலம்
என்று...
வாழ்க்கை பாடத்துடன்
ஊர்ந்து செல்லும்

..... நிஜம்தான்..... அருமையாக சொல்லி இருக்கும் விதம், அழகு.

sathishsangkavi.blogspot.com said...

//தூய்மையின் நெடியா
வலியின் நெடியா
என்று புரியாது
நகரும் நொடிகள்....//

உண்மையான வரிகள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வந்து செல்வோருடன்
வந்து செல்லும்
அலுப்பும் மாற்றமும்//

என்ன தெளிவா சொல்லிட்டீங்கப்ப்பா..

pudugaithendral said...

எப்பவும் உங்கள் கவிதைகளின் ரசிகை. இந்தக் கவிதையும் ரொம்ப பிடித்திருக்கு

Deepa said...

Nalla irukku amudha.

பின்னோக்கி said...

நிதர்சனமான வரிகள்.

sakthi said...

nice lines amutha