என் மேகம் ???

Tuesday, July 27, 2010

கொலை செய்யாதீங்க ப்ளீஸ்....

சிறகு விரிக்கப்போகும் பிள்ளைகளைக் காணும் ஆயிரம் ஆசைகளுடன் இறைவனுக்கு நன்றி கூறி வாகனத்தில் வரும் ஒரு குடும்பம்.

மதம் பிடித்த யானையாக கட்டுப்பாடின்றி காரில் வரும் ஒரு கும்பல்.

மத யானையின் வழியில் இருந்து விலகி வந்தாலும் தடைகளைத் தகர்த்து நாசம் செய்திடும் யானை..

யாருக்கு என்ன என்று யோசிக்கிறீர்களா? எங்கோ ஒரு குடும்பம் அழிகிறது (அ) பிள்ளையோ/தாயோ/தந்தையோ அன்புக் குடும்பத்தை இழந்து தனிமரம் ஆகின்றனர் (அ) யாரையாவது இழந்து தவிக்கும் குடும்பம்

எங்கேனும் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது... குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களால்.
"குடி குடியைக் கெடுக்கும்"... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் பிறர் குடியைக் கெடுக்கும். தற்கொலையே குற்றம்... கொலை செய்ய ஏன் துணிகிறீர்கள்?

கொலை செய்யாதீங்க ப்ளீஸ்....குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும் கொலைக்கான முயற்சிதான்

8 comments:

Chitra said...

AVOID DRUNK DRIVING

.. a good post with a great message!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னிக்குத்தான் நியூஸ் ல படிச்சேன்..உக்ரைன்ல போய் மருத்துவம் படிக்கிர பையன் லீவுக்கு வந்த இடத்துல குடிச்சுட்டு வண்டி ஓட்டி .. காமன்வெல்த் கேம்ஸ்க்காக இரவு பகலா வேலை செய்யவந்திருக்கிற ஒரு இளைஞர் கூட்டம் மேல் ஏத்திகொன்னுட்டான்.. :(

நட்புடன் ஜமால் said...

தற்கொலை செஞ்சுக்காதீங்கன்னும் சொல்லனும்

நல்ல இடுக்கை.

Deepa said...

Great post Amudha.
Well done.

பின்னோக்கி said...

சரியாக சொன்னீர்கள். அந்த குடிபோதை ஓட்டுனர்கள் மக்களிடம் பட்ட பாடு ஒரு பாடம் எல்லாருக்கும்.

தமிழ் அமுதன் said...

good post..!

ஹேமா said...

நல்லதொரு பதிவு அமுதா.
கேட்டுகிட்டா எவ்வளவோ நல்லது.

ராமலக்ஷ்மி said...

தேவையான இடுகை.