என் மேகம் ???

Friday, March 19, 2010

கனவுஐஸ்க்ரீம் மணலும்
சாக்லேட் மரங்களும்
பழரச ஆறும்
பரந்து விரிந்த தீவில்
பசியாறி ஆடிப்பாடிய
ஒரு குழந்தையின் கனவில்
பெரியவர்களைக் காணவில்லைதங்க மணலும்
பணம் காய்க்கும் மரமும்
வெள்ளி ஓடையும்
காசு மழை பொழியும்
கனவொன்றில் அவர்கள்
பசி தாகத்தோடு
தொலைந்து கொண்டிருந்தார்கள்...

21 comments:

ராமலக்ஷ்மி said...

//ஒரு குழந்தையின் கனவில்
பெரியவர்களைக் காணவில்லை//

//பசி தாகத்தோடு
தொலைந்து கொண்டிருந்தார்கள்...//

பகீரெனும் வரிகள். வழக்கம் போல அழுத்தம் அருமை.

பூங்குழலி said...

அருமை .ஒரு அழகிய கனவு போலவே விரிகிறது

நட்புடன் ஜமால் said...

முதல் படம் மிக அருமை.

முதல் பத்திக்கு வலு சேர்க்கிறது இரண்டாம் பத்தி


வாழ்வின் நிதர்சனம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

class.... படத்தேர்வும் அருமை.

ஆயில்யன் said...

படத்தேர்வும் அருமை!

சந்தனமுல்லை said...

:-)) Gud one

பின்னோக்கி said...

இரு வேறு உலகத்தின் மனதிலிருப்பதை அழகாக கவிதையாக்கியிருக்கிறீர்கள். உலகத்தரமான படைப்பு இது.

எம்.எம்.அப்துல்லா said...

அழகான கவிதை.

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமை

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு அமுதா!

தமிழ் said...

அற்புதம்

Deepa said...

aRputham Amudha!

அகஆழ் said...

அருமை அமுதா
ஒரு இதமான கனவு
ஒரு சுமையான கனவு
முதல் பாதி என் வயதை குறைத்தது
இரண்டாவது என்னை மேலும் முதுமை ஆக்கிவிட்டது

KarthigaVasudevan said...

நல்லா இருக்குங்க.
:)

அம்பிகா said...

ஆஹா!
கனவு அருமை.
அழுத்தமான கற்பனை.

மாதவராஜ் said...

கவிதை நல்லா வந்திருக்குங்க.

அன்பரசன் said...

அருமையான வரிகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கனவுகள் அருமையாக தொடரட்டும்

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் அமுதா. உங்களை ஏப்ரில் 1 ஆம் தேதி தேவதையில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும் மேலும் வளர பெஸ்ட் விஷஸ்.

அமுதா said...

நன்றி வல்லிசிம்ஹன் மேடம்

ராமலக்ஷ்மி said...

தேவதைக்கு வாழ்த்துக்கள் அமுதா:)!

நான் இனிதான் வாங்கிப் பார்க்கணும்.