என் மேகம் ???

Thursday, November 12, 2009

திண்ணை தொலைத்த வீடுகள்

திண்ணை என்பது..
உறவும் நட்பும்
அளவளாவும் பூந்தோட்டம்
களைத்த வழிப்போக்கரும்
சற்றே இளைப்பாறலாம்
ஓய்வாக அமர்ந்து
பராக்கும் பார்க்கலாம்

பரபரக்கும் வாழ்க்கையில்
உட்கார நேரமில்லை
உறவாட பொழுதில்லை
முகமறியா மனிதர்
புன்னகைத்தாலும் ஐயம்...
அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?

மனிதம் மறையும் உலகில்
மனதைத் தொலைத்தனர் மனிதர்கள்
திண்ணை தொலைத்தன வீடுகள்

19 comments:

pudugaithendral said...

திண்ணை இது எனக்கு என் பழைய ஞாபகங்களைத் தரும் வார்த்தை.

அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?//

நிஜம்தான். அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்

ராமலக்ஷ்மி said...

//திண்ணை என்பது..
உறவும் நட்பும்
அளவளாவும் பூந்தோட்டம்
களைத்த வழிப்போக்கரும்
சற்றே இளைப்பாறலாம்
ஓய்வாக அமர்ந்து
பராக்கும் பார்க்கலாம்//

ஆமாங்க ஒரு காலத்தில்!

//
பரபரக்கும் வாழ்க்கையில்
உட்கார நேரமில்லை
உறவாட பொழுதில்லை
முகமறியா மனிதர்
புன்னகைத்தாலும் ஐயம்...
அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?//

இதுதான் நிகழ்காலம்:(!

//மனிதம் மறையும் உலகில்
மனதைத் தொலைத்தனர் மனிதர்கள்
திண்ணை தொலைத்தன வீடுகள்//

வருத்தமாய் இருந்தாலும் இதுதானே உண்மை, அருமை அமுதா.

க.பாலாசி said...

உண்மைதான் எத்தனை திண்ணைகளை தொலைத்திருக்கிறோம். இன்னும் சில கிராமப்புற வீடுகளில் திண்ணைகள் இருக்கிறது....

நல்ல ஆதங்க கவிதை....

ஹேமா said...

இடைவிட்டு வந்தாலும் ஞாபகச் சின்னமாய் ஆகிவிட்ட திண்ணையோடு வந்திருக்கிறீர்கள் அமுதா.நீங்கள் சொல்வது உண்மையே !

சுந்தரா said...

அன்றைப்போல் இன்றில்லை...என்றேனும் இனி அன்றுபோல் காலம் வருமோ?

தொலைத்த விஷயங்களில் திண்ணை முக்கியமானதுதான்...

அழகான கவிதை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திண்ணை - இந்த வார்த்தையைக் கூட இப்போது கவிதை, கதைகளில் மட்டும்தான் பார்க்க முடியுது அமுதா.

திண்ணையைப் பார்க்கவாவது ஊருக்கு போகனும் போல :)

இந்தக் கவிதையும் திண்ணை நினைவுகளை தூண்டிவிட்டது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?
//
அதானே.. :(

அழகான கவிதை.. அமுதா.

பின்னோக்கி said...

//பராக்கும்
//பரபரக்கும்

சூப்பர்

திண்ணைக் கவிதைய புத்தகமாவே போட்டுடலாம் போலயிருக்கு :)

"உழவன்" "Uzhavan" said...

முற்றமே இல்லாமல் போன நம் வாழ்வில் திண்ணை எப்படி இருக்கும்? :-)
கவிதையின் கடைசி வரி அற்புதம்

தமிழ் said...

அருமையாக‌ இருக்கிற‌து

/சற்றே இளைப்பாறலாம்
ஓய்வாக அமர்ந்து
பராக்கும் பார்க்கலாம்

பரபரக்கும் வாழ்க்கையில்
உட்கார நேரமில்லை
உறவாட பொழுதில்லை
முகமறியா மனிதர்
புன்னகைத்தாலும் ஐயம்...
அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?
/
அதிலும் சில‌ வார்த்தைக‌ளும் வ‌ரிக‌ளும் அழ‌காக‌ அற்புத‌மாக‌ இருக்கிற‌து

Ungalranga said...

நல்ல கவிதை மா!

திண்ணை என்பது மக்களின் மனதை சொல்வதாயும் இருந்தது.

நல்ல மனம்..பெரிய திண்ணை.

இன்றைய சின்ன மனம்..திண்ணையில்லா வீடுகள்!!

அருமையான வரிகள் ..மேலும் கலக்குங்க!!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகான கவிதை இதயத்தில் முகவரி எழுதி போனது! மனம் தொலைத்த நாட்களை தேட தொடங்கியது....

புலவன் புலிகேசி said...

எங்கள் வீட்டுத் தின்ணையை என் விபரம் தெரியாத வயதில் இடித்த போது அழுதது நினைவு வருகிறது.

Deepa said...

ரொம்பப் பிடிச்சிருக்கு அமுதா கவிதை!

ஆமாம், திண்ணைகள் இருக்கும் வீடுகளே கொள்ளை அழகு தான்.
கிரில் கேட்டுகளால் நமக்கு நாமே சிறை வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

மனதைத் தொலைத்தனர் மனிதர்கள்]]

சரியா சொன்னீங்க.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

"திண்ணை தொலைத்த வீடுகள்"

nice...
i enjoy very much...

தமிழ் அமுதன் said...

அட ..!மீண்டும் ஒரு திண்ணை கவிதை ...! இதுவும் அருமை நன்றி...!

மாதவராஜ் said...

தலைப்பு மிக அடர்த்தியாய் உள் இழுக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்.