என் மேகம் ???

Sunday, November 22, 2009

பதில் வராத கடிதங்கள்

காகிதமோ மின்வடிவோ
மனதைச் சுமந்து வருபவை...
அன்பு, கோபம், வலி
என்று ஏதோ ஒன்றைத்
தாங்கி வருபவை...

கடிதங்கள்!!!

முகவரி தொலைத்த கடிதங்கள்
இடம் மாறி மறைந்தோ
எழுதப்படாமல்...
நினைவுகளில் மட்டும் நிறைந்தோ...
முகம் இழந்து கரைந்திருக்கலாம்

முகவரி தொலைத்ததோ
நம் முகம் தொலைத்ததோ...
பதில் வராத கடிதங்களால்...
மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்
நிராகரிப்பின் வலி

10 comments:

ராமலக்ஷ்மி said...

நிராகரிப்பின் வலி அத்தனை எளிதில் ஆறுவதில்லை. அருமையான கவிதை அமுதா.

சந்தனமுல்லை said...

சீக்கிரம் மெயில் வரும் அமுதா..நோ ஃபீலிங்ஸ்!! வீட்டுலே காலையிலே போட்ட சண்டைக்கு இவ்ளோ ஃபிலீங்ஸா!! ;-)))

அ.மு.செய்யது said...

அதுக்கு திட்டியாவது ஒரு பதில் எழுதிரலாம்ல.
பதில் வராத கடிதங்கள் .......நிராகரிப்பின் வலி தான்.

நெஞ்சில் நிற்கிறது கவிதை !!! வாழ்த்துக்கள் அமுதா ..!!

tamiluthayam said...

மனிதனுக்கு தான் எத்தனை வலிகள். எல்லா வழியிலும்
அவனுக்கு வலிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்
நிராகரிப்பின் வலி

நிஜம்தான், தாங்கமுடியாத உறுத்தல் அது.

பின்னோக்கி said...

//முகவரி தொலைத்ததோ
//நம் முகம் தொலைத்ததோ

வைர வரிகள் அமுதா. அருமையான வார்த்தை பிரயோகம். தொடருங்கள்.

அரங்கப்பெருமாள் said...

உண்மைதான் அமுதா.

பதிலை எதிர்பார்த்திருப்பது ஒரு சுகம்தான். ஆனால் பதிலே வராத போது... தெரியாமல் போனது அவரிகளின் பதில் மட்டுமல்ல், அவர்களின் மனமும் கூடத்தான்.

Deepa said...

//சந்தனமுல்லை said...
சீக்கிரம் மெயில் வரும் அமுதா..நோ ஃபீலிங்ஸ்!! வீட்டுலே காலையிலே போட்ட சண்டைக்கு இவ்ளோ ஃபிலீங்ஸா!! ;-)))
//
செண்டிமெண்டலா யாரும் எதுவும் எழுதிடக் கூடாதே.. உடனே வந்து கலாய்க்க வேண்டியது.. ஏன், ஏன் முல்லை?
நீங்க ஃபீலுங்க அமுதா!
;-)))

நிற்க, எந்தக் காரணத்தினால் பதில் வராது போனாலும் நிராகரிப்பின் வலியாகவே தோன்றும். அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்

pudugaithendral said...

பதில் வராத கடிதங்களால்...
மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்//

எனக்கு கோபமே வரும். போஸ்ட் ஆபீஸ் போகத்தேவயில்லை, உக்காந்த இடத்துலேயே தட்டி, அனுப்ப முடியாம அப்ப்டி என்னன்னு தோணும்.

"உழவன்" "Uzhavan" said...

ஆமாங்க.. பதில் வராத கடிதங்களால் மனதில் ஒரு வலி இருக்கும். கடிதம் சரியா போய்ச் சேர்ந்ததானு ஒரு குழப்பமும் இருக்கும்.