என் மேகம் ???

Friday, January 2, 2009

கொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...

மின்னலாக மின்னிய புன்னகைக்கு
"என் தங்கம்" என்ற கொஞ்சலில்
உருவானது ஓர் இடிச்சத்தம்
யார் வெள்ளி யார் தங்கம்...
யார் வைரம் யார் பிளாட்டினம்...
என்ற கேள்விகளில் தவித்தாலும்,

தித்திப்பான முத்தத்திற்குச் சொன்ன
"என் குலாப்ஜாமூன்" என்ற பாராட்டில்
துவங்கியது இனிய போராட்டம்
குலாப்ஜாமூனா இரசகுல்லாவா ...
இருவரில் யார் லட்டு என்று
தீர்ப்பிற்குத் திணறினாலும்...

அக்காவிற்குப் பிடித்த நிறமென
அவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து
எனக்கு எந்நிறமும் சம்மதம் என
மீதியை எடுத்துக் கொண்ட பொழுது
பலூனின் மதிப்பு ஏறிப்போனது

அவளுக்கு கிட்காட் பிடிக்கும்
ஒன்று எடுத்துக் கொள்ளவா
என்று அவள் அக்கா எடுத்த மிட்டாயும்
என்றும் திகட்டாத இனிப்பானது

நீ வெனிலா நான் ஸ்ட்ராபெர்ரி
என்று உருகி வழிகிறது
மழலைகளின் பாசமும் உற்சாகமும்...
எனது அடுத்த கொஞ்சலின் ஆரம்பம் வரை...

11 comments:

அ.மு.செய்யது said...

//அக்காவிற்குப் பிடித்த நிறமென
அவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து
எனக்கு எந்நிறமும் சம்மதம் என
மீதியை எடுத்துக் கொண்ட பொழுது
பலூனின் மதிப்பு ஏறிப்போனது//

உங்கள் கவிதையின் மதிப்பும் ஏறிப் போனது அமுதா !!!!

அருமை !!!

நட்புடன் ஜமால் said...

\\"கொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ..."\\

பெண் பேசுவது கொஞ்சுவது போல தான் இருக்கும்

இதிலே கொஞ்சி பேசும் பெண்ணா சரி உள்ளே போவோம்...

நட்புடன் ஜமால் said...

\\நீ வெனிலா நான் ஸ்ட்ராபெர்ரி
என்று உருகி வழிகிறது
மழலைகளின் பாசமும் உற்சாகமும்...\\

அழகு மழலைகள்

நீங்கள் சொல்லியதும் அழகு வரிகள்

கணினி தேசம் said...

அமுதா,

மகிழ்ச்சி தரக்கூடிய போராட்டம்தான்.

:-)))

கணினி தேசம் said...

எது வாங்கினாலும் ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி வாங்குவீங்கள?

இல்ல வேணும்னே வேற மாதிரி வாங்கிக் கொடுத்து வேடிக்கை பார்ப்பீங்களா?

அமுதா said...

நன்றி செய்யது...
நன்றி ஜமால்...

கணினி தேசம்... /*எது வாங்கினாலும் ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி வாங்குவீங்கள?*/
அது அவங்க விருப்பத்தைப் பொறுத்தது. அவங்க முடிவு செய்வாங்க ஒரே மாதிரியா இல்லையானு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

//
அக்காவிற்குப் பிடித்த நிறமென
அவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து
எனக்கு எந்நிறமும் சம்மதம் என
மீதியை எடுத்துக் கொண்ட பொழுது
பலூனின் மதிப்பு ஏறிப்போனது

அவளுக்கு கிட்காட் பிடிக்கும்
ஒன்று எடுத்துக் கொள்ளவா
என்று அவள் அக்கா எடுத்த மிட்டாயும்
என்றும் திகட்டாத இனிப்பானது//

இதுதாங்க பாசம் என்பது!
அதைப் பார்த்துப் பார்த்துப்
பூரிக்கும் தாய்மை உங்களது!
அதைப் பகிர்ந்ததால்
நாங்களும் பெற்ற
பரவசத்தை என்னவென்பது?

வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்!

சந்தனமுல்லை said...

//இதுதாங்க பாசம் என்பது!
அதைப் பார்த்துப் பார்த்துப்
பூரிக்கும் தாய்மை உங்களது!
அதைப் பகிர்ந்ததால்
நாங்களும் பெற்ற
பரவசத்தை என்னவென்பது?

வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்!//

ரிப்பீட்டு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

//அக்காவிற்குப் பிடித்த நிறமென
அவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து
எனக்கு எந்நிறமும் சம்மதம் என
மீதியை எடுத்துக் கொண்ட பொழுது
பலூனின் மதிப்பு ஏறிப்போனது//

உங்கள் கவிதையின் மதிப்பும் ஏறிப் போனது அமுதா !!!!

அருமை !!!

வழிமொழிகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீ காற்று நான் மரம்

போல

நீ வெனிலா நான் ஸ்ட்ராபெர்ரி//

என்றும் மகிழ்ச்சி நிலவ வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

நன்றாக அனுபவித்து ரசித்து

எங்களுடனும் பகிர்ந்து...........நன்றி ....வாழ்த்துக்கள்