என் மேகம் ???

Thursday, November 27, 2008

பத்தோடு ஒன்று பதினொன்றுபத்தோடு ஒன்று பதினொன்று என
காதலில் கசிந்துருகி
ஊடலில் பிணங்கி
வருடங்கள் உருண்டோடின
இனிய நினைவுகள்
மனதை நனைக்கின்றன..நம் தோட்டத்தில்
முட்கள் அவ்வப்பொழுது
முளைத்து மறைந்தன
நாம் நட்ட பூச்செடிகள்
என்றும் பூத்துக் குலுங்குகின்றன

வளர்பிறையாக இரு நிலவுகள்
நம் வானத்தில்...அன்று ஒற்றைக் குடையுள்
இருவரும் நனைந்த மழை
இன்றும்
மனதை நனைக்கின்றது...

நிலவுகள் தம் வானத்தில்
நீந்தும் அவ்வேளையில்
காத்திருப்போம்
அம்மழைக் காலத்திற்கு...
(படங்கள் : இணையம்)

டிஸ்க்கி: இது எனது 50-வது பதிவு. இதைத் தொட ஊக்கமளித்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.

14 comments:

SurveySan said...

50க்கு வாழ்த்துக்கள் :)

இரண்டு 'நனைக்கின்றன' வருது. கவிதை விதிப்படி இது சரியா? ;)

புதியவன் said...

//அன்று ஒற்றைக் குடையுள்
இருவரும் நனைந்த மழை
இன்றும்
மனதை நனைக்கின்றது...//

அழகான வரிகள். கவிதைகள் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

’பத்தோடு ஒன்று பதினொன்று’
நாற்பத்தொன்பதோடு ஒன்று
ஐம்பதாக மலர்ந்து உங்கள் வானத்தில் இன்னொரு நட்சத்திரமாக பிரகாசிக்கிறது அமுதா.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

நிலவுகள் தம் வானத்தில்
நீந்தும் அவ்வேளையில்
காத்திருப்போம்
அம்மழைக் காலத்திற்கு...

//

நல்லாருக்குங்க, அம்பாதவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

கொஞ்சம் குசும்பா ஒரு கமெண்ட் போடலாம்னு நெனச்சேன்.அம்பதுல வேண்டாம்.

சந்தனமுல்லை said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அமுதா! அப்படியே 50வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் வாழ்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

HATS OFF TO YOU FOR 50TH POST.

அழகுக் கவிதை. அருமைப் படம்

வாழ்த்துக்கள் சதம் தாண்டி பயணிக்க.,

அமிர்தவர்ஷினி அம்மா said...

திருமணநாள் வாழ்த்துக்கள்

இந்நாளின் எல்லாம் வல்ல இறையை ப்ரார்த்தித்து, உங்களின் கனவுகள் அனைத்தும் இனிதே நிறைவேற வேண்டுகிறேன்

தமிழ் அமுதன் said...

முதலில் வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு!

கவிதையும் அருமை!

மழைக்கு தோன்றியதோ?

//நிலவுகள் தம் வானத்தில்
நீந்தும் அவ்வேளையில்
காத்திருப்போம்
அம்மழைக் காலத்திற்கு...//

''நூறாண்டுகள் வாழட்டும் உங்கள் நேசம்''

ச.பிரேம்குமார் said...

//அன்று ஒற்றைக் குடையுள்
இருவரும் நனைந்த மழை
இன்றும்
மனதை நனைக்கின்றது...

நிலவுகள் தம் வானத்தில்
நீந்தும் அவ்வேளையில்
காத்திருப்போம்
அம்மழைக் காலத்திற்கு...
//
அழகான கவிதை அமுதா :)

திருமண நாள் வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அமுதாக்கா!

அமுதா said...

வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்வாழ்த்துக்கள்.. திருமணநாளா? :)

தமிழ் said...

வாழ்த்துகள்

அமுதா said...

நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி (ஆம்)
நன்றி திகழ்மிளிர்