என் மேகம் ???

Wednesday, November 19, 2008

இன்று என்பது பரிசு

ம்ம்... என் பெண் வளர்கிறாள் என்று பல விஷயங்களில் தெரிகிறது. அப்படி ஒண்ணு தான், நமக்கு கிடைக்கும் அறிவுரைகள். உண்மையில் இந்த வயதில் (10) இவ்வளவு யோசிக்கிறார்களே என்று ஆச்சரியமாக உள்ளது. அன்று, இரவு நேரங்கழித்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். பல இடங்களில் கல்லூரி படிக்கும் வயது பெண்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.

நான்:
ம்.. நீ பெரியவள் ஆனால் எப்படி இருக்கப் போறியோ?
அவள் : அம்மா, நம்மகிட்ட மூணு இருக்கு, "நேற்று, இன்று நாளை". நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். நேற்று என்பது முடிந்து விட்டது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். இன்று தான் இப்ப நம்மகிட்ட இருக்கு , அதனால் அதைப்பத்தி மட்டும் யோசிக்கணும்

நான் : அப்ப நாளைக்கு என்ன லன்ச் தருவனு, ஏண்டி இன்னிக்கே கேக்கற?
அவள்: நாளைக்கு என்ன பண்றதுனு நிச்சயம் ப்ளான் பண்ணுவ, அதனால் கேட்கிறேன். இது ரொம்ப கிட்ட இருக்கு , அதனால் இதைப் பத்தி பேசலாம்.

ரொம்ப தெளிவாத் தான் இருக்காங்க. இவள் என்று இல்லை, என் தோழியின் பெண்ணும் ஏறக்குறைய இவள் வயது தான். அம்மா எதைப் பற்றியாவது கவலைப்பட்டால் "ஏம்மா இதுக்கெல்லாம் கவலைப்படற... இன்னிக்கு நடக்கறதை யோசி" என்று கூறுகிறாள்.

மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர்த்து விட்டு போனாள் "நேற்று என்பது வரலாறு, நாளை என்பது புதிர், இன்று என்பது பரிசு... பரிசை அனுபவி" (Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

உண்மைதானே??

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா அற்புதம்.. இன்று என்பதும் பரிசு தான்.. குழந்தைகளும் நம் பரிசு தான். அனுபவியுங்கள்.. :)

ச.பிரேம்குமார் said...

//(Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

உண்மைதானே??
//

உண்மையே தான் :)

ராமலக்ஷ்மி said...

"இன்று என்பது பரிசு”
அழகாக விளக்கியிருக்கிறாள் மகள்.
அந்த புரிதல் அறிவு அவளுக்கு
கடவுள் தந்த பரிசு. அவள் உங்களுக்கு
கடவுள் தந்த பரிசு:)!

RAMYA said...

மீ த பிரஸ்ட்

ரம்யா

RAMYA said...

//

மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர்த்து விட்டு போனாள் "நேற்று என்பது வரலாறு, நாளை என்பது புதிர், இன்று என்பது பரிசு... பரிசை அனுபவி" (Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)
//

ஆருமையான மகள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறாள்.

இச்செயல் தந்தைக்கே முருகன் உபதேசம் செய்ததை நினைவு படுத்துகிறது. சரித்திரம் என்பது நமக்கு ஒரு எடுத்துக்காட்டுதானே. அருமையான மகள் உங்கள் மகள். சரியான முறையில் வழி நடத்துங்கள். நல்ல குணவதியாக வருவாள்.

மகளுக்கு எனது ஆசிகள்

ரம்யா

அமுதா said...

நன்றி பிரேம்குமார்
நன்றி முல்லை
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி & இராமலஷ்மி மேடம். குழந்தைகள் கடவுள் கொடுத்த பரிசு தான். /* கடவுளுக்கு நான் படைத்த மலர்களை பூமாலையாக்கி எனக்கே தந்தார்...நீ பிறந்தாய் */

அமுதா said...

நன்றி ரம்யா. /* அருமையான மகள் */ உண்மை தான். பல நேரங்களில் அவளது maturity என்னைத் திகைக்க வைக்கின்றது...ஆசிகளுக்கு நன்றி ரம்யா.

anujanya said...

குழந்தைகளிடமும், சிறார்களிடமும் நாம் கற்க வேண்டியது அதிகம். நமது பொறுமையின்மையால் பல சமயங்களில் அவர்களை நாம் சட்டை செய்யாது, கற்க மறுக்கிறோம். சகோதரி சந்தனமுல்லை போலவே நீங்களும் உங்கள் மகளின் ஒவ்வொரு தருணத்தையும் கவனித்து, மகிழ்வது பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

அமுதா said...

வருகைக்க்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் உங்ககிட்ட இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.
இனிமே உங்க மக கிட்ட இருந்தும் நிறய கத்துக்கனும் போல இருக்கே.

இன்று என்பது பரிசு

வாஸ்தவம் தான்.
யாராவது சொன்னாத்தான் உரைக்குது.

அமுதா said...

நன்றி அமித்து அம்மா...அமித்து என்ன சொல்லிக் கொடுக்கிறாள்-னு சொல்லுங்க...

butterfly Surya said...

The Great Guru Osho Says:

Forget the Past

Live in the Present

Welcome the Future

அமுதா said...

நன்றி சூர்யா

butterfly Surya said...

குழந்தைகளுக்கு இருக்கும் தைரியம் நம்க்கு இல்லையோ என தோன்றுகிறது..

நம்ம வீட்டிலும் இது போலத்தான்.

தமிழ் அமுதன் said...

நான் உங்ககிட்ட இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.
இனிமே உங்க மக கிட்ட இருந்தும் நிறய கத்துக்கனும் போல இருக்கே.


இததான் நானும் சொல்லனும்னு
நெனச்சேன்!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?