கண்ணாடி நொறுங்கி முகமிழந்து நின்ற காரைச் சலனமின்றி பார்த்தேன். எனக்கே என் குணம் வியப்பாக இருந்தது. முதன்முதலில் கார் எங்கள் வீட்டுக்கு வந்தது நினைவில் நிழலாடியது. காரை என் கணவர் வீட்டு வாசலில் நிறுத்த முயன்ற பொழுது சுவரில் பட்டு சிறு கீறல் விழுந்தது. அதற்கு நான் செய்த ஆர்ப்பாட்டத்தில் சில நாட்களுக்கு என் தம்பி காரைத் தொடவே இல்லை. என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும் , சேதமாகும் என்பதைப் புரிந்து கொள்", என்று கூறிய பொழுது அதுதான் நிதர்சனம் என்று உணர்ந்தேன். அதன் பிறகு காருக்கு ஏற்பட்ட காயங்கள் என்னை பாதிப்பதில்லை.
கார் வாங்குவது என்பது என் கனவிலும் இருந்தது கிடையாது. அது ஒரு ஆடம்பரச் சின்னமாகவே வெகு நாட்களுக்கு என்னுள் இருந்தது. இரு குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள் என்று வெளியே செல்லும் தேவை ஏற்பட்ட பொழுது, கார் அவசியமானது. குழந்தைகளை கவனிதுக்கொள்ள பெரியவர்கள் வீட்டில் இருக்கமுடியாத சூழலில், கிட்டதட்ட எனது இரு வருட வாழ்க்கை காரைச் சார்ந்தே இருந்து வந்தது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பெற்றோர் வீட்டிற்கு வர அல்லது, பெற்றோர் வீட்டில் பள்ளி முடிந்து குழந்தைகளை விட என்று அதன் ஓயாத அலைச்சலில் தான் குழந்தைகள் பற்றிய கவலை இன்றி என்னால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிந்தது. காருக்கும், ஒழுங்காக வேலைக்கு வந்த ஓட்டுநருக்கும் நன்றிகள்.
பல அடிகள் பட்டிருந்தாலும் எப்பொழுதும், காருக்கு தான் சேதம்... இந்த கடைசி நிமிடம் வரை. சென்ற வாரம் ஓர் இரவு, என் உறவினர், போக்குவரத்து நிறைந்த சாலையில், இரு சக்கர வாகனம் வழுக்கிவிட, கீழே விழுந்து மயக்கமானார். அவரை மருத்துவமனையில் சேர்த்து நாங்கள் செல்லும்வரை காத்திருந்த முன்பின் அறியா மனிதருக்கு நன்றிகள். இறைவன் அருளால் சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.
மறுநாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு காரில் செல்லும் வழியில், ஓட்டுநர் முன்னால் சென்ற லாரியின் "சடன் பிரேக்கிற்கு" ஈடு கொடுக்க முடியாது லாரியின் அடியில் காரை விட்டார். கார் அடியை வாங்கிக்கொண்டு , இறைவன் அருளால் உள்ளிருப்போரைக் காயமின்றிக் காப்பாற்றியது. ஓட்டுநர் சற்றே மெதுவாகச் சென்றிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த காரைப் பிரியும் நேரம் வந்துவிட்டது. அதன் புகைப்படம் ஒன்றும் இல்லை என்றும் தோன்றியது. ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது. அவர்தான் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களும் அதிக பிரச்னைகளின்றி காத்தது போல் ஓர் உணர்வு. எத்தனையோ "இப்படி செய்திருந்தால்" இருந்தாலும், பிரச்னைகளைத் தாங்கும் வலிமை தந்த இறைவனுக்கு நன்றிகள்.
22 comments:
இப்போதைக்கு இறைவனக்கு நன்றி
இன்னும் படிக்கலை
அவனுக்கு நன்றி சொல்லிட்டு வாறேன்.
ம்ம்ம் ஒர் அனுபவ குறிப்பு
"இறைவனுக்கு நன்றி"
பழையகாருக்கு விடைக்கொடுக்கும் இந்த நெகிழ்வான நேரத்தில் புது காருக்கும் வாழ்த்துச் சொல்கிறேன்..:-) ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!
அதன் பிறகு காருக்கு ஏற்பட்ட காயங்கள் என்னை பாதிப்பதில்லை. ]]
அருமை.
-------------------
கடைசி பத்தி கனக்க செய்துவிட்டது
இந்த பதிவின் மூலமாக ஒளிந்திருக்கும் ஒரு ட்ரீட்டை கொண்டு வரச்செய்த இறைவனுக்கு நன்றி
//ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது. அவர்தான் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களும் அதிக பிரச்னைகளின்றி காத்தது போல் ஓர் உணர்வு //
சமீபகாலமாக எனக்கும் இதே போன்ற உணர்வுகள்தான் அமுதா. :((
ம்ஹூம் என்ன செய்வது, அவ்வப்போது வானத்தை பார்த்துக்கொள்வதோடு சரி.
//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!//
Listla irundhu enna kazhati vitta mullaikku en kandanangal :(((((((((((
போகாத ஊருக்கு வழி தேடற மாதிரி
இல்லாத காருக்கு ட்ரீட் கேட்பது நியாயமா சொல்லுங்க...
// G3 said...
//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!//
Listla irundhu enna kazhati vitta mullaikku en kandanangal :(((((((((((//
பப்புவை எங்கேயாவது சொல்லியிருக்கேனா....அது மாதிரி it goes without saying!! V3-க்குள் நீங்களும் அடக்கம்!! ஓக்கே!! :-))
நல்ல வேலை யாருக்கும் காயமின்றி தப்பித்தீர்களே. அதுவே இறைவனின் பெரிய கொடை...
:-)
அமுதா,உண்மை.கார் என்பது அமையவேணும்.காலப்போக்கில் கார் என்பது மாறி குழந்தையாகவே ஆகிவிடும்.முதல் தரம் கீறல் விழும்போது அதன் வலி உணர்வுபூர்வமாகவே இருக்கும்.எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.
நாங்களும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.
எங்களுக்கெல்லாம் கார் இன்னும் ஒரு கனவாவே இருக்கு..!
கார் என்பது இன்றளவும் ஒரு கனவு தான் எல்லோருக்கும்.. புதிய கார் என்றாலே ஏக எதிர்பார்ப்பு தான்.. வந்ததும் அதுவும் குடும்பத்தில் ஒருவராகிவிடும். எங்க வீட்டில் காருக்கென்றே பெயர் எல்லாம் வைத்திருக்கிறார் துனைவியார்!!.
கார் வாங்கிய முதல் மூன்று மாதங்களுக்கு நானும் இப்படி தான்.. அடிக்கடி இரவில் ஹண்ட் ப்ரேக் போட்டோமா இல்லையா என்று எழுந்து வந்து பார்ப்பது உண்டு..!!.. ஓ யெஸ் சும்மா சும்மா வந்து பார்த்ததுக்கு திட்டு விழுந்ததும் உண்டு.. !
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
//என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும் , சேதமாகும் என்பதைப் புரிந்து கொள்", என்று கூறிய பொழுது அதுதான் நிதர்சனம் என்று உணர்ந்தேன்.//
ரொம்பச் சரி. ஆரம்ப காலத்தில் நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போது சாதரணமாக எடுத்துக் கொள்கிறேன்!
//ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது.//
உண்மைதான். ஒருவகையில் வீடு, வாகனம் போன்றவற்றின் மீது நாம் வைக்கும் பிடிமானம் அது ஒரு பொருள் என்பதால் அல்ல, அதோடு பின்னிப் பிணைந்த நினைவுகளால்தான் என்பதை எவ்வளவு அருமையாக உணர்த்திவிட்டீர்கள்!
நம்மோடு நம் வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு சில அஃறினைகளும் நம்மை சில சமயம் அழவைத்துவிடுகின்றன என்பது உண்மையே..
காருக்கு நன்றி சொன்ன உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.
படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
இறைவனுக்கு நன்றி.
உயிரற்றவை என்றாலும் சமயத்தில் காயங்களை வாங்கிக் கொண்டு நம்மை காக்கும் பொருட்களை தெய்வமாக கும்பிட்டாலும் தகும்.
காயமின்றி காத்த காருக்கும் நன்றிகள்!!!!!!!
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?
அட ! என்னாச்சு கண்ணாடிதானே உடைஞ்சுது சரி விடுங்க சட்டுபுட்டுன்னு வேற காரை வாங்கிடுங்க ! ஒ.கேய்ய்ய்!
//G3 said...
//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!//
Listla irundhu enna kazhati vitta mullaikku en kandanangal :((((((((((
//
:(((
ஜி3 பேரவை கடுமையான கண்டனங்களை இச்சமயத்தில் ஆச்சிக்கு தெரிவித்துக்கொள்கிறது!
(இடம் கண்டுபுடிச்சு லொக்கேஷன் மேப் ரெடி செஞ்சு ஒன்வே செக்பண்ணி முன்னதாகவே வரும் தங்கச்சிய கயட்டிவுட்டீங்களே ஆச்சி )
Post a Comment