மழைத்துளிகள்
மண்ணைக் கிளறின
மண்வாசனை
மனதைக் கிளறியது
காகிதக் கப்பல்
சுழன்று சுழன்று
மூழ்கிய காட்சி
நெஞ்சுள் சுழன்றது
தாரணிப் பாப்பாவின்
தொலைந்த கம்மல்
மழையோடு ஒதுங்கியது
மனதுள் வந்தது
மொறுமொறு முறுக்கும்
சூடான வடையும்
அம்மாவின் கைமணத்துடன்
வாசம் வீசியது
இப்பொழுதும்
அதே மழைதான்...
படகுகள் மிதந்து செல்கின்றன
வாசலில்...
மழை ஒதுக்கிய குப்பைகள்
கடையின் வாசத்துடன்
முறுக்கும் வடையும்...
மண்வாசனை ...
மறைந்து போனது
23 comments:
நேற்று பெய்த மழையில்!
இன்று முளைத்த கவிதை?
அன்றைய மழையும்!
இன்றைய மழையும்!
ஒப்பீடு அழகு!
//இப்பொழுதும்
அதே மழைதான்...
வாசலில்...
மழை ஒதுக்கிய குப்பைகள்
மண்வாசனை ...
மறைந்து போனது //
ம்ம்ம்...!...மலரும் நினைவுகள். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
மொறுமொறு முறுக்கும்
சூடான வடையும்
அம்மாவின் கைமணத்துடன்
வாசம் வீசியது]]
மீண்டும் அந்த மழை நாட்களுக்கு சென்று விட்டேன் ...
நாங்க இங்கே வெயில்லே காஞ்சுப்போய் இருக்கிறோம், உங்களுக்கு இப்போ மண்வாசனை பற்றி அசைப்போடுகிறீர்கள்.........
நன்றி ஜீவன்
நன்றி சத்ரியன்
நன்றி ஜமால்
நன்றி அபுஅஃப்ஸர்
எழுத்துகளை அள்ளி கொள்ளச்செய்கின்றன கவிதை..
மண்வாசனையும் முறுக்கு வாசனையும் ப்ப்ச்ச்....அசத்துறீங்க..!
நன்றி செய்யது.
//
காகிதக் கப்பல்
சுழன்று சுழன்று
மூழ்கிய காட்சி
நெஞ்சுள் சுழன்றது
//
:-) நல்லாருக்கு!
நன்றாக இருக்கிறது
நன்றி முல்லை
நன்றி திகழ்மிளிர்
அமுதா மழையில் நனைந்தீர்களா....நினவில் நனைந்தீர்களா !மண்வாசனை அது எந்த நேரத்திலும் மூக்கின் ஓரம்தான்.மறையாது...மாறாது.
நகர வாழ்க்கை அப்படி... கிராம வாழ்க்கை கொஞ்சம் பரவாயில்லை... எங்கள் வாழ்க்கை(?????)...
/*ஹேமா said: மண்வாசனை அது எந்த நேரத்திலும் மூக்கின் ஓரம்தான்.மறையாது...மாறாது.*/
ஆமாம் ஹேமா. நன்றி
நன்றி ArangaPerumal
மழை மண்வாசனையோடு சேர்த்து ஒரு அருமையான கவிதையும் கொடுத்துட்டு போயிருக்கு
நல்லா இருக்கு அமுதா.
தாரும் சிமெண்டும் மண் வாசனையை பொத்திவைத்துக்கொண்டனவோ!!.. கவிதை நன்று!
நன்றி அமித்து அம்மா
நன்றி உழவன்
நன்றாக இருக்கிறது
அனுபவிது எழுதியது போல
உங்கள் கவிதைகள் எனது ஞாபகத்தைக் கிளறின...
நல்ல கவிதை...
மழைக்காலத்தில் சுடச்சுட... வடையோ முறுக்கோ எதுவானாலும்.... ம்...
நன்றி பிரபு
நன்றி அன்புமணி
மழையினை ரசித்த காலங்களை நினைவு படுத்திய இனிமையான வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி ராஜா
மறைந்து போன மண்வாசனையை நினைவு கூர்ந்திருந்தாலும், படித்து முடிக்கையில் மறையாமல் மனதில் நின்றது மண்வாசனை. நல்ல கவிதைக்கு நன்றி அமுதா!
Post a Comment