அன்பு மகளே!!!
சில வருடங்களாக
ஒவ்வொரு வருடமும்...
கிருஷ்ண ஜெயந்தி
வந்து கொண்டிருந்தது
உன் பாதம் பட்டபின் தான்
குழலோசை கேட்டது
விநாயகர் சதுர்த்தியில்
கொழுக்கட்டைகள் வெந்தன
நீ கேட்ட பொழுதுதான்
அவை பூரணமாயின
தீபாவளி வாணங்களுடன்
வெடித்துக் கொண்டிருந்தது
நீ புன்னகைத்த பொழுதுதான்
வாணங்களின் வண்ணங்கள்
எனக்குத் தெரிந்தன
நினைவுகளின் ஏக்கத்துடன்
வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது
என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்டும் காணச் செய்ய...
என்று உன்னால் தான் இதோ!!!
வாழ்க்கையை வாழ்கிறேன்
ஒவ்வொரு நாளும் திருநாளாக...
கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...
7 comments:
என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்டும் காணச் செய்ய...
என்று உன்னால் தான் இதோ!!!
வாழ்க்கையை வாழ்கிறேன்
ஒவ்வொரு நாளும் திருநாளாக...
கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...
]]
பெற்றோருக்கான இயல்பான சிந்தனை
அழகான வரிகளில்
நல்ல தாய் - வரிகள் - நல்லதாய்
வானத்தில் சிறகடிக்கும், எண்ணங்களின் திருவிழா தொடரட்டும்
நீ கேட்ட பொழுதுதான்
அவை பூரணமாயின //
உண்மையில் பண்டிகைகளின் முழுமையான கொண்டாட்டங்களே குழந்தைகள் வந்தபின்னர் தான் நமக்கு தெரிகிறது அமுதா.
நானும் உணர ஆரம்பித்திருக்கிறேன் :)))))))
நல்ல கவிதை
நமக்காக வாழ்ந்த நாட்கள் போய், நம் குழந்தைகளுக்காக வாழும் நாட்களில் உள்ள மகிழ்வே தனிதான்.
உண்மை தான் ஏற்று கொள்கிறேன்.கவிதை நல்லா இருக்குங்க..!!
அட!
:)
கவிதை நல்லா இருக்கு!
//என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்டும் காணச் செய்ய...
என்று உன்னால் தான் இதோ!!!
வாழ்க்கையை வாழ்கிறேன்
ஒவ்வொரு நாளும் திருநாளாக...
கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...//
உண்மை உண்மை! :-)
Post a Comment