என் மேகம் ???

Thursday, August 27, 2009

இப்பொழுதெல்லாம்...

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த குழந்தைத் தனம்?
இளமை துள்ளலுடன்
நுழைந்த பொழுதோ?

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த இளமை துள்ளல்?
பொறுப்புகளின் சுமை
கூடிப் போனபொழுதோ?

என்றாலும் ...
இப்பொழுதெல்லாம்...

சொப்புகளில் உன்னுடன்
சமைக்கும்பொழுது
குழந்தைத்தனம் என்னுள் இருக்கிறது

என்னைப் பிடி என்று
நீ ஓடும்பொழுது
எனக்குள் இளமை துள்ளுகிறது

நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு....

(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))

30 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருக்கு

(இது இன்னுமொரு அண்ட் நவ் ஆ)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட இது இன்னும் முடியலயா.. :)
நல்லாருக்கு :)

Jerry Eshananda said...

கவிதையை வாழ்த்த மனசிருக்கு,ஆனா....பின்னூட்டமிட பயமாயிருக்கு.
இதென்ன...மகளிர் ஸ்பெஷல் பதிவா?இல்ல நான் தான் தெரியாம வந்துட்டனா

நட்புடன் ஜமால் said...

நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு.... ]]

அட அட அடா

அருமைங்கோ

தமிழில் And Now-ஆ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இல்லை இல்லை

நவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))//


தேடல் என்பது உள்ளவரை மொக்கையும் இருக்கும் பாஸ்! :)

மொக்கை உள்ள போக போக - தேட தேட - விசயங்கள் வியக்க வைக்கும் பாஸ்

டிரை செஞ்சு பாருங்க !

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

//நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு.... //

குழந்தை தனம் நிறைந்திருக்கும் காலம்தோறும்!

கால மாற்றத்தில் சற்று மறைந்திருக்கும்!

தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை தனத்தை வெளியே கொண்டு வாங்க

சாக்லேட்டுக்கு அடம்பிடிச்சு ஓஓஓஓன்னு அழுதுக்கிட்டே இருங்க அப்பத்தான் ஆச்சி கம் வித் சாக்லேட்!:)))))))

ஆயில்யன் said...

//(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))//


இப்படியெல்லாம் நன்றி ஆச்சிக்கு சொல்லாதீங்க!!! எங்கே என் பிரியாணி அப்படின்னு கேட்டு டார்ச்சர் செய்யப்போறாங்க?!

சந்தனமுல்லை said...

ஆகா...

//சொப்புகளில் உன்னுடன்
சமைக்கும்பொழுது
குழந்தைத்தனம் என்னுள் இருக்கிறது//
இப்படின்னு சொல்லிக்கிட்டு குட்டீஸ் விளையாட்டு சாமானை நீங்க விளையாடறீங்களா!!! :))

சந்தனமுல்லை said...

//(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))//

அவ்வ்வ்வ்வ்!

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Deepa said...

அழகான பதிவு அமுதா. உண்மை தான். நாம் தொலைத்ததெல்லாம் மீட்டெடுக்க நமக்குக் கிடைத்த வரம் தான் குழந்தைகள்.
ஆனால் அவர்கள் வழியில் தான் சென்று தான் அதை அனுபவிக்க வேண்டும்.

நிஜமா நல்லவன் said...

/ அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருக்கு

(இது இன்னுமொரு அண்ட் நவ் ஆ)/

Repeattuuuuuu....

அ.மு.செய்யது said...

கியூட்டான கவிதை.நீங்கள் ஒரு புத்தகம் வெளியிடலாமே !!!

ஹேமா said...

அமுதா,குழந்தையோடு குழந்தையாய் நீங்களும் சிலசமயம் மாறுவது சந்தோஷமே !

கண்மணி/kanmani said...

கவிதை அருமை
மறைத்து வைக்க பழக்கப்பட்டிருக்கிறோம்.
மீறியும் சில பொழுது வெளிப்பட்டு விடும்.

Admin said...

அருமை

pudugaithendral said...

பலரின் ஏக்கம் கவிதையாக.

அருமை அமுதா

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. சூப்பர். என் மகளைக் கொஞ்சும் போது நேற்றுதான் நினைத்தேன் எனக்குள்ளும் இவ்வளவு குழந்தைத்தனம் இருக்கிறதா என்று. அருமை :-)

குடந்தை அன்புமணி said...

அமுதா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வளங்கள் பலபெற்று வாழ்வாங்கு வாழ்க!

அமுதா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அன்புமணி.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி (கொஞ்சம் ஆணி, எனவே தனியாக சொல்ல முடியவில்லை)

-தியா- said...

அர்ப்புதமான் வரிகள்
நல்ல பகிர்வுக்கு நன்றி
-தியா-

குடந்தை அன்புமணி said...

சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதனாலேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா?
இது உங்களுக்கான இடுகை. thagaval.blogspot.com வலைத்தளத்திற்கு வரவும்.

தமிழ் அமுதன் said...

//நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு...///


கலக்கல் ......................பிறந்தநாள் வாழ்த்துக்கள்.............!!!!

Dhiyana said...

அருமையான எழுதியிருக்கீங்க அமுதா..

பின்னோக்கி said...

அந்த அந்த வயதுக்கு ஏற்ப அனுபவங்கள் மாற வேண்டும். ஆனால் நம் மனது, கடந்து போன வருடங்களை நினைவு படித்தி, நம்மை படுத்துகிறது !!

R.Gopi said...

//சொப்புகளில் உன்னுடன்
சமைக்கும்பொழுது
குழந்தைத்தனம் என்னுள் இருக்கிறது//

//என்னைப் பிடி என்று
நீ ஓடும்பொழுது
எனக்குள் இளமை துள்ளுகிறது//

//குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு.... //

ந‌ம்முள் மறைந்திருக்கும் அந்த குழ‌ந்தைத‌ன‌த்தை ம‌றுப‌டியும் ஒரு குழந்தை தானே எடுத்து காட்டுகிற‌து...

//(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))//

ந‌ல்லாத்தானே போயிட்டு இருக்கு.....

ந‌ல்லா இருக்கு... வாழ்த்துக்க‌ள்....

SS JAYAMOHAN said...

கவிதை நன்றாக இருக்கிறது.

நாம் எல்லோரும் கொஞ்சம் பெரிய
குழந்தைகள் தானே !!

எஸ். எஸ் ஜெயமோகன்

அரங்கப்பெருமாள் said...

தாங்கள் என்னால்இங்கேஅழைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தத் தொடரோட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி

அமுதா said...

அழைப்புக்கு நன்றி அரங்கபெருமாள். விரைவில் பதிவிடுகிறேன்...