என் மேகம் ???

Wednesday, May 27, 2009

ஒரு நாள் நானும்...

ஒவ்வொரு வயதிலும் பெரிதானால் என்னவாக ஆக வேண்டும் என்ற கேள்வி வரும். சிறுவயதில் முதலில் டீச்சர் டாக்டர் என்று தான் பிம்பங்கள் மனதில் ஈர்க்கும். அதன் பின் அது மாறி மாறி நினைத்தது (அ) நினைக்காதது என்று ஏதோ ஒன்றில் முடியும்.

நான் பெரியவள் ஆனால் என்ன ஆகணும் என்று எங்களிடம் கேள்வி எழுப்பிய யாழ்குட்டி , இப்பொழுது முடிவு செய்து விட்டாள்.. டாக்டர் ஆக. அவளும் அவள் தோழியும் டாக்டர் ஆகிறார்களாம். எனவே கிடைக்கும் புத்தகமெல்லாம் படிக்கிறார்கள், கிடைக்கும் இலையையும் பூவையும் மருந்தாக்க முயல்கிறார்கள். "டாக்டராகி என்ன செய்வ?" என்றேன், காசு வாங்காமல் ஊசி போடுவாளாம்.

ஒரு டி.வி ஷோவில் கூட நான் டீச்சர் ஆவேன் என்ற நந்துவுக்கு இப்பொழுது அது விருப்பமில்லை. "நான் பெரியவளாகி என்ன ஆக" என்று என்னிடம் கேட்டாள். "நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து , நீ ஆக நாங்கள் உதவுவோம்" என்றேன். சற்று யோசித்து விட்டு டீச்சர் , சயண்டிஸ்ட் இல்லாமல் ஏதோ ஒன்று என்றாள். ஏன் என்றேன். க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.

இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?)

12 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?) //

ச்சே ச்சே கண்டிப்பா அப்படி சொல்ல வாய்ப்பிருக்காது அமுதா.

தங்களின் சிறுபிள்ளைத்த்னத்தை எண்ணி விரி விழித்து ஆச்சரியப்படுவார்கள் சிறு வெட்கத்தோடு.

பார்க்கத்தானே போறீங்க, படிக்கத்தானே போறோம் நாங்க அந்தப் பதிவையும்

தமிழ் அமுதன் said...

///க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.////


ஹா.. ஹா ....நல்லாத்தான் யோசிகிறாங்க இந்த காலத்து புள்ளைங்க!!;;)))

தமிழ் said...

இலக்கை
இப்பொழுதே
இதயத்தில் வைத்திருப்பது
இன்பத்தை அளிக்கிறது

நட்புடன் ஜமால் said...

\\அவளும் அவள் தோழியும் டாக்டர் ஆகிறார்களாம\\

ஆரோக்கியம்

Dhiyana said...

//இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? //

கண்டிப்பாக வெட்கமாக இருக்கும் அமுதா. நான் என் ரூம் கதவில் நான் வாங்க நினைக்கும் டிகிரிகளை எழுதி வைத்திருந்தேன். அதில் ஒன்று கூட வாங்கவில்லை. அந்த கதவை இன்று பார்த்தாலும் ஒரு சிறு புன்னகை வரும்.

சந்தனமுல்லை said...

//க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.//

:-)) ரசித்தேன்!

pudugaithendral said...

பார்க்கத்தானே போறீங்க, படிக்கத்தானே போறோம் நாங்க அந்தப் பதிவையும்//

மனமார ஆமோதிக்கறேன்

ராமலக்ஷ்மி said...

//"நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து , நீ ஆக நாங்கள் உதவுவோம்"//

அழகாக சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

அ.மு.செய்யது said...

கொஞ்சம் சிந்திக்க வைத்த பதிவு இது.

நானும் பல முறை இலட்சியங்களை மாற்றியமைத்திருக்கிறேன்.

நினைச்சது ஒன்னு..நடந்தது ஒன்னு...

ஆயில்யன் said...

//இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?)///

பதிவு செய்யுங்கள்

சிறுப்பிள்ளைத்தனமாக சொன்னதாக இருந்தாலும் கூட வாழ்க்கை புரிபட ஆரம்பிக்கும் வயதில் - சாதிக்கமுடியும் என்ற நினைப்பு வரும் வயதில் - நிறைய ஊக்கம் கொடுக்கவும் உதவும் எனர்ஜி டானிக்காக மாற உதவும் அப்பொழுது...!

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. இது நம் ஒவ்வொருவரின் அனுபவம். அனைவரின் ஆசையும் கைகூடட்டும்.

ஆ.சுதா said...

"நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து |

உண்மையான வரி.
நல்லப் பதிவு.