மரங்களைத் தொலைத்துவிட்டு
சுவாசிக்க மட்டுமே காற்றுள்ள
இடமல்லாத ஓரிடத்தில்...
மின்சாரமில்லா ஒரு பொழுதில்...
சுழன்று சுழன்று
வெளிக்காற்றைத் துரத்திய
மின்விசிறி நின்றது
சன்னல்கள் திறந்ததால்
சுதந்திரமாக நுழைந்தன
காற்றும் வெளிச்சமும்
சுட்டிகளைக் கட்டி போட்ட
தொலைகாட்சியின் அமைதியில்
புதுப்புது விளையாட்டுகள்
ஆரவாரத்துடன் உதயமாயின
வெகுநாளாகக் காத்திருந்த
பேச்சுக்கள் வீட்டிற்குள்
கலகலப்போடு கேட்டன
அலமாரியில் தூங்கிய
புத்தகங்கள் எழுப்பப்பட்டு
வாசிக்கப் பட்டன
அம்மி இருந்த வீட்டில்
கைமணத்துடன் அரைத்த
குழம்பின் வாசனை நுழைந்தது
இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின
20 comments:
"பவர் கட்" செய்யும் மாயம்! :-)
///இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின///
சூப்பர்!!
இன்னும் கொஞ்ச நாளைக்கு பெட்ரோல், டீசல் ஏதும் கிடைக்காதுன்னு ஆயிட்டா எப்படி
இருக்கும்? குதிரை வண்டி,மாட்டு வண்டி பத்தி எழுத தோணுமோ?
//புதுப்புது விளையாட்டுகள்
ஆரவாரத்துடன் உதயமாயின
வெகுநாளாகக் காத்திருந்த
பேச்சுக்கள் வீட்டிற்குள்
கலகலப்போடு கேட்டன
அலமாரியில் தூங்கிய
புத்தகங்கள் எழுப்பப்பட்டு
வாசிக்கப் பட்டன
அம்மி இருந்த வீட்டில்
கைமணத்துடன் அரைத்த
குழம்பின் வாசனை நுழைந்தது//
இவற்றிற்காகவே அடிக்கடி போகலாம் போலிருக்கிறது மின்சாரம்.
//மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின//
:(!
அருமையான கவிதை அமுதா.
தொடர்ச்சியா நல்ல நல்ல கவிதைகளாவே எழுதிகிட்டு வர காரணம் இந்தக் கவிதையப் படிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுது.
சுழன்று சுழன்று
வெளிக்காற்றைத் துரத்திய
மின்விசிறி நின்றது
அம்மி இருந்த வீட்டில்
கைமணத்துடன் அரைத்த
குழம்பின் வாசனை நுழைந்தது
ரசித்தேன்.....
//
இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின//
அழகா எழுதியிருக்கீங்க!
//இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின//
உண்மை அமுதா. மின்சாரம் இருந்தால் தொலைக்காட்சி பெட்டியிலே பொழுதுகளைத் தொலைக்கிறோம்.
ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கான சிந்தனை.
எந்திர வாழ்வில் மனிதன் தொலைத்த பழைய பொக்கிஷங்களை ஒரு மின்சார தடை கொண்டு வந்து சேர்ப்பதாய் எழுதியிருக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன்.
Simply d best !!!
அருமையான சிந்தனை,
நல்லா எழுதிசிருக்கீங்க, ஒவ்வொரு வரியுமே என்னை உள்ளிழுத்தது.
|சுட்டிகளைக் கட்டி போட்ட
தொலைகாட்சியின் அமைதியில்
புதுப்புது விளையாட்டுகள்
ஆரவாரத்துடன் உதயமாயின|
இதில் மட்டும் புதுப்புது விளையாட்டு
என்பதிற்கு பதில் பழைய விளையாட்டுகள் மீண்டும் துளிர்த்தன என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமோ.. (இது என்னுடைய விருப்பம் அவ்வளவே)
அபாரம்... பொதுவா உங்க தளத்தில குழந்தைங்க கவிதைகள்தான் இருக்கும்.. இந்த கவிதை முற்றிலும் வித்தியாசம்...
பவர் கட் கவிதைகளில் இது தனிரகம்!!! தொடர்ந்து எழுதுங்க.
அபாரம் . சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் சிந்தனையில் சிறந்த ஒன்றாக இதைக் கருதுகின்றேன், அபாரம்.
:))
நன்றி முல்லை
ஜீவன் said...
/*இன்னும் கொஞ்ச நாளைக்கு பெட்ரோல், டீசல் ஏதும் கிடைக்காதுன்னு ஆயிட்டா எப்படி
இருக்கும்? குதிரை வண்டி,மாட்டு வண்டி பத்தி எழுத தோணுமோ?*/
ம்... நடந்து போறது பத்தி கூட இருக்கலாம். கருத்துக்கு நன்றி ஜீவன்
ராமலக்ஷ்மி said...
/*இவற்றிற்காகவே அடிக்கடி போகலாம் போலிருக்கிறது மின்சாரம்.*/
ஆமாம் மேடம். அந்த நொடி அப்படித்தான் இருந்தது. நன்றி
/* அமிர்தவர்ஷினி அம்மா said...
தொடர்ச்சியா நல்ல நல்ல கவிதைகளாவே எழுதிகிட்டு வர காரணம் இந்தக் கவிதையப் படிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுது.*/
ஊக்கத்திற்கு நன்றி அமித்து அம்மா
சென்ஷி said... /*அழகா எழுதியிருக்கீங்க!*/
நன்றி சென்ஷி
தீஷு said...
/*மின்சாரம் இருந்தால் தொலைக்காட்சி பெட்டியிலே பொழுதுகளைத் தொலைக்கிறோம்.*/
ஆமாங்க. அதை விட்டு வெளியே வந்தாலே நிறைய பொழுது கிடைக்கும்
/* அ.மு.செய்யது said...
ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கான சிந்தனை.
எந்திர வாழ்வில் மனிதன் தொலைத்த பழைய பொக்கிஷங்களை ஒரு மின்சார தடை கொண்டு வந்து சேர்ப்பதாய் எழுதியிருக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன்.
Simply d best !!!
*/
உங்கள் இந்த வார்த்தைகள் எனக்கு ஊக்கம் அளிக்கின்றன. மிக்க நன்றி செய்யது
/* ஆ.முத்துராமலிங்கம் said...
அருமையான சிந்தனை,
நல்லா எழுதிசிருக்கீங்க, ஒவ்வொரு வரியுமே என்னை உள்ளிழுத்தது.
..
இதில் மட்டும் புதுப்புது விளையாட்டு
என்பதிற்கு பதில் பழைய விளையாட்டுகள் மீண்டும் துளிர்த்தன என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமோ.. (இது என்னுடைய விருப்பம் அவ்வளவே)
*/
சரியா சொன்னீங்க.. எல்லாத்திலேயும் பழசை இழுத்தப்ப இதிலேயும் கொண்டு வந்திருக்கலாம்...அடுத்த முறை இந்த மாதிரி விஷயங்களையும் கவனத்தில் கொள்கிறேன். புதுபுது என்று சொன்னதற்கு காரணம் தொலைக்காட்சி இன்றி தூண்டப்படும் அவர்களது கற்பனைகளுக்காக... மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
/* ஆதவா said...
பவர் கட் கவிதைகளில் இது தனிரகம்!!! தொடர்ந்து எழுதுங்க.
*/
ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதவா
/* எம்.எம்.அப்துல்லா said...
அபாரம் . சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் சிந்தனையில் சிறந்த ஒன்றாக இதைக் கருதுகின்றேன், அபாரம்.
:))*/
வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
அருமையான கவிதை. பளிச்சென்ற சிந்தனைகள்.
வாழ்த்துக்கள்!
ரசிக்கவைக்கும் ரசனை!..
மிகவும் நன்றாக இருக்கும், அதுவும் நண்பர்களுடன் வசித்தால்,
விடியும் வரை அரட்டை அடித்துக்கொண்டு, பலி வாங்க வேண்டும் என்றால்
பயமுறுத்திக்கொண்டு.....வேலை பளுவால் சில நாள் வசிக்கும் நண்பர்களிடம் பேசும் நிமிடங்கள் அபூர்வம், ஆனால் இந்த இருள் ஒன்று சேர்க்கும்....
/இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின/
மனத்தை என்னவோ செய்கிறது
Post a Comment