என் மேகம் ???

Monday, May 25, 2009

பரிமாறல்

குழந்தையின் குறும்புகள்
பிள்ளையின் பிரதாபங்கள்

அளவிலா அறிவுரைகள்
அலுவல் தகவல்கள்

குடும்ப விடயங்கள்
உலக நடப்புகள்

அசட்டுக் கேள்விகள்
அன்பு ததும்பும் பேச்சுகள்

சின்ன சின்ன கோபங்கள்
கேலிகள் சிரிப்புகள்
வருத்தங்கள் வாழ்த்துகள்

என்று...
வாழ்வின் ருசிகளின்
பரிமாறலுக்கு சாட்சியாக
உணவு மேசையில்
பலவண்ணத்தில் சிதறிக்கிடக்கும்
மிச்ச பருக்கைகள்

17 comments:

தமிழ் said...

காட்சியாய்
காய்களாக நகர்த்தி
கடைசி வரி நச் என்று உள்ளது

வாழ்த்துகள்

pudugaithendral said...

அருமை.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு உங்க பரிமாற்றம்!!

எம்.எம்.அப்துல்லா said...

one of the best in this week.

(sorry for english).

எம்.எம்.அப்துல்லா said...

one of the best in this week.

(sorry for english).

அ.மு.செய்யது said...

குட்டியா ஆனா கியூட்டா ஒரு கவிதை.

கலக்கல் அமுதா !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

super

ஆ.சுதா said...

கவிதை நல்லா இருக்கு, அருமை!

அமுதா said...

நன்றி திகழ்மிளிர்
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி முல்லை
நன்றி அப்துல்லா
நன்றி அமித்து அம்மா
நன்றி செய்யது
நன்றி முத்துராமலிங்கம்

அமுதா said...

நன்றி தமிழர்ஸ்

Dhiyana said...

நல்ல கவிதை அமுதா.

"உழவன்" "Uzhavan" said...

உணவு மேஜை உண்பதற்கான இடம் மட்டுமல்ல!
அழகான வரிகள்.

அன்புடன்

சென்ஷி said...

:))

நல்லாயிருக்குங்க!

அமுதா said...

நன்றி தீஷு அம்மா.
நன்றி உழவன்
நன்றி சென்ஷி

தமிழ் அமுதன் said...

அருமை! நல்ல கவிதை!

குடந்தை அன்புமணி said...

எங்க வீ்டடில் சாப்பிடு்ம்போது பேசக்கூடாதுன்னு சொல்லுவாங்க... ஆனால் அலுவலகத்தில் சாப்பாடுபாதி பேச்சு பாதிததான்... அது ஒரு சுகம்தான்... நல்லாருக்குங்க...

அமுதா said...

நன்றி ஜீவன். நன்றி அன்புமணி